எய்ட்ஸ் துறை தனியார்மயமாக்கப்படுவதால் நோய் தொற்று தீவிரமடையும் அபாயம் !
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கத்தின் பத்திரிகை செய்தி
*பத்திரிக்கை செய்தி*
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் 186 HIV பரிசோதனை மையங்களை மூட மத்திய அரசு உத்தரவு
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் கீழ் 377 HIV - பரிசோதனை செய்யும் *நம்பிக்கை மையங்கள்* அரசு மருத்துவ கல்லூரி, அரசு மருத்துவ மனைகள் ,நகர்புற சுகாதார மையங்கள் மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனைகளில் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் *186 மையங்களை மூட வேண்டும்* என தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு நிறுவனம் சுற்றரிக்கையை 5-7-23 அன்று தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்திற்கு அனுப்பியுள்ளார்கள் என்பது அதிர்ச்சிகரமான உள்ளது.
இதனால் *தமிழகத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது*.எய்ட்ஸ் நோயாளிகளில் சேவையில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை தெரிவிக்கிறோம்.தமிழகத்தில் HIV - தொற்று பரவும் அபாயம் ஏற்படும் மேலும் பொதுமக்களுக்கு HIV- குறித்து விழிப்புணர்வு பணிகளில் தொய்வு ஏற்படும்.
*தற்பொழுது தமிழகத்தில் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்களில் கட்டாயம் எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்படுகிறது*
அரசு மருத்துவமனைகளில் 100 சதவிகிதம் கர்ப்பிணிகளுக்கு HIV- பரிசோதனை செய்யப்படுகிறது.
ஒருவேளை கர்ப்பிணி பெண்களுக்கு எய்ட்ஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டால்,
அது பிறக்கவிருக்கும் குழந்தைக்குப் பரவாமல் இருப்பதற்கான உரிய ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் புதிதாகப் பிறக்கும் குழந்தைகள் எய்ட்ஸுடன் பிறப்பது முற்றிலும் தடுக்கப்படுகிறது.
ஆனால் HIV-பரிசோதனை செய்யும் நம்பிக்கை மையங்களை மூடினால்
கர்ப்பிணி பெண்களுக்கும்,
குழந்தைகளுக்கும் HIV- நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
அதேபோல்
HIV -:ஆல் பாதிக்கப்படும் மக்களுக்கு ஏ.ஆர்.டி கூட்டு மருந்து வழங்கிட அரசு மருத்துவ கல்லூரி ,அரசு மருத்துவ மனைகளில் 55 ஏ.ஆர்.டி மையங்கள் செயல்பட்டு வருகின்றன்.
இங்கு வரும் நோயாளிகளுக்கு உரிய ஆலோசனைகள் கொடுக்கப்பட்டு இலவச மருந்து மாத்திரைகள் வழங்ப்படுகின்றன
.இலவசமாக இரத்த பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன.
இந்நிலையில் *தமிழகத்தில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் ஏ.ஆர்.டி மையங்களை துவக்க மத்திய அரசு ஆர்வம் செலுத்தி வருகிறது*
இதுவரை 10 தனியார் மருத்துவ கல்லூரிகளில் ஏ.ஆர்.டி மையங்கள் துவங்கப்பட்டுள்ளன.
தனியார் மருத்துவ கல்லூரியில் செயல்படும் ஏ.ஆர்.டி மையங்களுக்கு HIV- நோயாளிகளை அனுப்பி வைக்க அரசு மருத்துவ கல்லூரி ஏ.ஆர்.டி மைய மருத்துவர் மற்றும் ஆலோசகர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
மேலும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் செயல்படும் ஏ.ஆர்.டி மையங்களில் ஏ.ஆர்.டி மாத்திரை மட்டும் தற்பொழுது இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் இரத்த பரிசோதனைகளுக்கு ஆயிரக்கணக்கில் பணம் பறித்து வருகின்றனர்.
எதிர்காலத்தில் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் ஏ.ஆர்.டி மாத்திரைகளும் பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால் ஏழை எளிய நோயாளிகள் பணம் கொடுத்து மருந்து வாங்க முடியாமல் மரணம் அடையும் நிலை ஏற்படும் என்பதை மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
இந்நிலையில் எச்ஐவி பரிசோதனை மையங்களை குறைத்தால்
*மீண்டும் தமிழகத்தில் எச்ஐவி தொற்று பரவும் விகிதம் மீண்டும் அதிகரிக்கும்*
ஏ.ஆர்.டி மையங்களை தனியார் மருத்துவ கல்லூரிகளில் துவக்கினால் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை கிடைப்பதில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே தமிழக அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து *எச்ஐவி பரிசோதனை மையங்களை குறைக்கும் முடிவையும், ஏ.ஆர்,டி தனியார் மயமாக்குவதையும்* தடுத்து நிறுத்திட வேண்டும் என தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
அன்புடன்
(மு.ஜெயந்தி), மாநில தலைவர்
(மா.சேரலாதன்), மாநில பொதுச்செயலாளர்
- சேரன் வாஞ்சிநாதன்
(முகநூலில்)