RSS ஊர்வலத்திற்கு திமுக அரசு அனுமதி
நந்தினி ஆனந்தன்
பாசிச பயங்கரவாத இயக்கமான RSS வருகிற 06.11.2022 அன்று தமிழ்நாடு முழுவதும் 55 இடங்களில் பேரணி நடத்த திமுக அரசு அனுமதி வழங்கியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
எப்படியாவது தமிழ்நாட்டில் மதக் கலவரத்தை உருவாக்கியே தீருவது என பாஜக-RSS கும்பல் மிகத்தீவிரமாக முயன்று வரும் நிலையில் திமுக அரசு RSS--ன் இந்த சதித்திட்டத்துக்கு துணை போவது தமிழ்நாட்டுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.
நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி திமுக அரசு தப்பிக்க முடியாது. RSS பாசிச கும்பலின் கலவர நோக்கங்களையும், சட்டம் ஒழுங்கையும் மக்களின் ஒற்றுமையையும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் சட்டப்படி நீதிமன்றத்தில் மாநில அரசு எடுத்துரைத்து உரிய சட்டப் போராட்டம் நடத்தாமல் திமுக அரசு பாசிச கும்பலுக்கு அடிபணிந்து செயல்படுவதை ஏற்க முடியாது.
RSS எப்படிப்பட்ட பயங்கரவாத இயக்கம் என்பதற்கு மராட்டிய மாநிலத்தை சேர்ந்த முன்னாள் RSS ஊழியரான யஷ்வந்த் ஷிண்டே கடந்த ஆகஸ்ட் மாதம் மராட்டிய மாநிலம் நந்தேட் ( Nanded) மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் அளித்துள்ள கீழ்க்கண்ட வாக்குமூலமே சான்றாகும்.
யஷ்வந்த் ஷிண்டேயின் ஒப்புதல் வாக்குமூலம் பின் வருமாறு..
" நான் 18 வயதில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்தேன். இப்போது எனக்கு வயது 49. நான் விரைவில் கொலை செய்யப்பட்டு விடுவேனோ என அஞ்சுகிறேன். எனவே இந்த உண்மைகளை நான் இப்போதேனும் பேசியாக வேண்டும். இல்லையெனில் சமூகத்திற்கு இவையெல்லாம் தெரியாமேலேயே கூட போய்விடலாம். மசூதியை தகர்ப்பதற்கான வெடிகுண்டுகளை பரிசோதித்துக் கொண்டிருந்த போது தவறுதலாக அவை வெடித்ததாலேயே ஹிமான்சு பன்சே உயிரிழந்தார். நானும் ஹிமான்சு பன்சே உட்பட ஏழு பேர் இத்தகைய குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறோம்.
மாலேகான், சம்ஜௌதா ரயில் உட்பட பல குண்டு வெடிப்புகளும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சார்ந்தவர்களாலேயே நிகழ்த்தப்பட்டன. குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியவுடன் பழியை இஸ்லாமியர்கள் மீது சுமத்தி விடுவதால் தேர்தலில் ஆதாயம் பெற முடிந்தது. ஆட்சி அதிகாரத்திற்காக சமூகத்தை பிளவுபடுத்துவதோடு இந்து மதம் என்பதையும் ஒரு கருவியாகவே அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்து மதத்தின் மீது உண்மையான நம்பிக்கை கொண்ட என்னால் இவற்றை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், அமீத்ஷா உள்ளிட்ட அனைவரிடமும் இது குறித்து பேசி பேசி தோற்று விட்டேன். பதினாறு ஆண்டுகளாக என்னை உறுத்திக் கொண்டேயிருந்த அந்த உண்மைகளை இப்போது நீதிமன்றத்தில் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்திருக்கிறேன்."
- யஷ்வந்த் ஷிண்டே (ஆர்எஸ்எஸ்)
- நந்தினி ஆனந்தன்
(முகநூலிலிருந்து)
கட்டுரையாளரின் முகநூல் பக்கத்திற்கு செல்ல கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு