உலகு தழுவிய சாதி உருவாக்கம்
உலகளாவிய சாதி உருவாக்கம் பற்றிய தொகுப்புகள் இணைப்புகளாக உள்ளன. விவாதத்திற்காக இத்தளத்தில் பதிவிடுகிறோம் - செந்தளம் செய்திப் பிரிவு
சாதியின் உருவாக்கம் மதம் சார்ந்ததா? உற்பத்தி முறை சார்ந்ததா?
எப்போதும் நமது பெரியாரிஸ்ட்டுகள், கிறித்துவ மிஷனரிகள், மிஷனரி ஸ்பான்சர்டு அறிவுஜீவிகள், பின் நவீனத்துவ வாதிகள், அம்பேத்கரிஸ்ட்டுகள் ஆகியோர் மீண்டும், மீண்டும் சொல்வது – சாதியும்,தீண்டாமையும் இந்தியாவில் மட்டுமே காணப்படும் ஒன்று…. இந்து மதமே சாதியையும் தீண்டாமையையும் தோற்றுவித்தது. சாதிக்கும் நிலவுடமைக்கும், நிலப்பிரபுத்துவ சமூக அமைப்புக்கும் தொடர்பில்லை, எனவெ சாதி, தீண்டாமை ஒழிப்பை நிலவுடமைக்கு எதிரானப் போராட்டத்தால், நிலப்பிரபுத்துவ அமைப்பை தகர்ப்பதால் தீர்க்கமுடியாது. சாதி ஒழிப்புக்கு ஒரே வழி இந்துமத அழிப்பு அல்லது மதம் மாற்றம் மட்டுமே. சாதி மற்றும் தீண்டாமை ஒழிப்பு என்பது ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் ஏகாதிபத்திய ஆதிக்கத்தையும் ,நிலப்பிரபுத்துவ அமைப்பையும், அதன் உற்பத்தி உறவுகளையும் தகர்ப்பதுடன் இணைந்தது என்பதை மறுத்து சாதியை ஒழிக்காமல் புரட்சியோ, சோசலிசமோ ஒருக்காலும் சாத்தியமில்லை என்பது இவர்களால் கூறப்படும் பெரிய நீண்டகால பொய்.
சாதி என்பதற்கான வரையரை :
"Caste is a form of social stratification characterized by endogamy, hereditary transmission of a style of life which often includes an occupation, ritual status in a hierarchy, and customary social interaction and exclusion based on cultural notions of purity and pollution."[1][2] என்று விக்கிபீடியா கூறுகிறது.
"சாதி என்பது இந்தியப் பாணியிலான சமூகத்தின் அடிப்படைச் சமூக அலகு ஆகும். இதன் தனித்தன்மை பிறப்பின் அடிப்படையிலான வேலைப்பிரிவினையே. ஒருவரின் சாதி அவரின் பிறப்பைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. ஆகவே இதனை வெளியேற வழியற்று அடைபட்ட வகுப்பு என்று கூறலாம்" என்று தமிழ் விக்கிபீடியா கூறுகிறது…
அதாவது பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் சமூக படிநிலை அமைப்பு – அத்துடன் குலத்தொழிலும், அகமணமுறையும் இணைந்தே காணப்படும் தன்மை.
(Caste என்ற ஆங்கில சொல் casta என்ற போர்ச்சுகீசிய மற்றும் ஸ்பானிய வார்த்தையின் திரிபு. CASTA என்றால் பிறப்பின் அடிப்படையிலான பிரிவு என்றே பொருள்.)
இதே வரையரையை தான் பெரியாரிஸ்ட்டுகளும், மிஷனரிகளும், அம்பேதகரிஸ்ட்டுகளும் கூறுகின்றனர்.நமக்கும் இந்த வரையரையில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் நமது முக்கிய கேள்வி சாதி என்பது இந்தியாவிற்கு மட்டும் உரியதா ? இந்து மதம் தான் இந்தியாவிலிருக்கும் சற்றேறக்குறைய 3743 வகையான பிற்படுத்தப்பட்ட(மண்டல் கமிஷன் படி) சாதிகளையும், இதர சில நூறு தாழ்த்தப்பட்ட சாதிகளையும் தோற்றுவித்ததா? என்பது தான். (ஆனால் இந்து மதம் சாதிக்கு புனிதத் தன்மையை வழங்குகிறது ,படிநிலை அமைப்புக்கு நியாயம் கற்பிக்கிறது என்பது வேறு விஷயம் )
இல்லை என்கிறது பின்வரும் ஆதாரங்கள்….. உண்மையில் ஃபிரான்ஸ்,ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளிலும், ஜப்பான் போன்ற ஆசிய நாட்டிலும் நிலப்பிரபுத்துவ சமூகம் தகர்க்கப்பட்டதுடன், நிலவுடமை உறவுகளும் அழிக்கப்பட்டதால், அங்கு சாதியும், தீண்டாமையும் ஒழிக்கப்பட்டுள்ளது.
இந்தியா,இலங்கை,நேபாளம்,மியான்மர்,பாகிஸ்தான்,பங்களாதேஷ்,ஏமன், போன்ற நாடுகளில் இந்து மதம் மட்டுமல்லாமல்,பவுத்தம்,இஸ்லாம்,கிறித்தவர்கள் ஆகியோரிடையே, அரை நிலப்பிரபுத்துவ-அரைக்காலனிய சமூகத்தின் விளைவாக ,நிலவுடமை உறவுகளும், நிலப்பிரபுத்துவ பண்பாடும் ,கலாச்சாரமும் கட்டிக்காக்கப்படுவதன் விளைவாக சாதியானது மதம் கடந்தும், நாடு கடந்தும் நிலைத்து நிற்கிறது என்பதை பின்வரும் ஆதாரங்கள் நிறுவுகிறது…..
ஜப்பானில் காணப்பட்ட சாதி மற்றும் தீண்டாமை(இங்கே காணப்படுவது போன்ற படிநிலை அமைப்புக்கள் – குலத்தொழில்- தீண்டாமை அனைத்தும் ) :
1. https://en.wikipedia.org/wiki/Burakumin
2. https://www.britannica.com/topic/burakumin
ஃபிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் மேற்கு ஐரோப்பாவில் காணப்பட்ட சாதி, தீண்டாமை முறை (பொது வழி மறுப்பு ,ஆலய(சர்ச்) நுழைவு மறுப்பு, மற்ற மக்களுடன் திருமண உறவு மறுப்பு, ஊருக்கு ஒதுக்குப்புறமான சேரிக் குடியிருப்பு):
1. http://en.wikipedia.org/wiki/Cagot
4. http://www.classicreader.com/book/1066/1/
கொரியாவில் காணப்பட்ட சாதிப்படிநிலை, தீண்டாமை அமைப்பு :
1. http://en.wikipedia.org/wiki/Baekjeong
2. http://en.wikipedia.org/wiki/Cheonmin
இலங்கையில் பவுத்த மத சிங்களவர்களிடையே காணப்படும் சாதி , படிநிலை அமைப்பு, குலத்தொழில் தாழ்த்தப்பட்ட சாதிகள்,மற்றும் தீண்டமை:
1. http://en.wikipedia.org/wiki/Caste_system_in_Sri_Lanka
3. http://www.rootsweb.ancestry.com/~lkawgw/rodiya.html
ஏமனில் இஸ்லாமியரிடையே காணப்படுகிற சாதி மற்றும் தீண்டாமை முறை:
http://en.wikipedia.org/wiki/Al-Akhdam
தெற்காசிய இஸ்லாமிய மக்களிடையே காணப்படும் சாதி மற்றும் உயர்வு தாழ்வு படிநிலை அமைப்பு
: (The social stratification among Muslims in the "Swat" area of North Pakistan has been meaningfully compared to the Caste system in India. The society is rigidly divided into subgroups where each Quom is assigned a profession. Different Quoms are not permitted to intermarry or live in the same community.[13] These Muslims practice a ritual-based system of social stratification. The Quoms who deal with human emissions are ranked the lowest.[13] )
http://en.wikipedia.org/wiki/Caste_system_among_South_Asian_Muslims
இந்தியக் கிறித்தவர்களிடையே காணப்படும் சாதியைக் கடைபிடிக்கும் வழக்கமும் சாதி வேறுபாடுகளும்
:
http://en.wikipedia.org/wiki/Caste_system_among_Indian_Christians
ஆப்பிரிக்காவில் காணப்படும் சாதி, படிநிலையமைப்பு மற்றும் தீண்டாமை முறைகள்:
The Osu caste is determined by one's birth into a particular family irrespective of the religion practised by the individual. Once born into Osu caste, this Nigerian person is an outcast, with limited opportunities or acceptance, regardless of his or her ability or merit. Obinna discusses how this caste system-related identity and power is deployed within government, Church and indigenous communities.[1]
http://en.wikipedia.org/wiki/Caste_system_in_Africa
- Baskaran Sivaraj
(முகநூலிலிருந்து)