திமுக அரசு நிறைவேற்ற மறுக்கும் முக்கியமான தேர்தல் வாக்குறுதிகள்

Subbaraj V

திமுக அரசு நிறைவேற்ற மறுக்கும் முக்கியமான  தேர்தல் வாக்குறுதிகள்

திமுக அரசு நிறைவேற்ற மறுக்கும் முக்கியமான  தேர்தல் வாக்குறுதிகளில் ஒரு சில... 

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்... 

போக்குவரத்து தொழிலாளர்களின் நீண்ட காலப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு... 

மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீடு... 

விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து உணவுப் பொருட்களுக்கும் குறைந்த பட்ச 

ஆதார விலை... 

மாநிலம் முழுவதும் சீமைக்கருவேல மரங்களும் ஆகாயத்தாமரை செடிகளும் அகற்றப்பட்டு நீர்நிலைகள் பாதுகாக்ப்படும்... 

அதிமுக,  அரசின் கடன் சுமையை அதிகப்படுத்தி விட்டது என்பதை மிக முக்கியமான குற்றச்சாட்டாக வைத்த திமுக ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் கழிந்த பின்னர், இந்தியாவில் அதிக கடன் வாங்கும் மாநிலங்களில் முதல் இடத்தை தமிழ்நாடு பிடித்துள்ளது. 

எல்லாவற்றிலும் மிக முக்கியமான சீரழிவு பள்ளி மற்றும் உயர்கல்வித் துறைகளில் நடக்கின்றது. கட்டிடங்கள் மட்டும் அரசுக்கு சொந்தம். மற்றபடி பாடத்திட்டம் வகுத்தல், ஆன்லைன் வகுப்புகள் நடத்துதல், தேர்வு நடத்தி மதிப்பெண் போடுதல்.... எல்லாமே தனியார் ஏஜென்சிகள்...  என்ற நிலையை நோக்கி திட்டமிட்டு  நகர்த்தப்படுகிறது. 

இதோ இப்போது அரசுப் பள்ளிகளைத் தனியாருக்கு தாரை வார்க்கும் பணியும் தொடங்கி விட்டது... 

கல்வி நிறுவனங்களுக்குள் மாணவர்களையே ஏஜெண்டுகளாக வைத்து கஞ்சா விற்கும் அளவிற்கு வணிகம் முன்னேறியுள்ளது. 

அதிமுக அரசில் இவ்வளவு ஊழல் இல்லை... என்ற நற்பெயரை திமுக வாங்கிக் கொடுத்துள்ளது. 

இனிமேலும் முட்டுக் கொடுத்தால்...  ? 

இப்படி பேசுவதால் பாசிசம் வந்து விடும் என்றால்..... 

இப்போது என்ன வாழுகிறது.. என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

- Subbaraj V (முகநூலில்)

https://www.facebook.com/share/p/12Bu14Tg35F/?mibextid=oFDknk

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு