பாலஸ்தீனம் மீதான அமெரிக்க - இஸ்ரேலின் இன அழிப்பு போர் பற்றிய சமீபத்திய தகவல்கள்

நந்தன் ஸ்ரீதரன்

பாலஸ்தீனம் மீதான அமெரிக்க - இஸ்ரேலின் இன அழிப்பு போர் பற்றிய சமீபத்திய தகவல்கள்

பகுதி  -1

முதலில் ஒரு மன்னிப்போடுதான் நான் இந்த பதிவை தொடங்க வேண்டி இருக்கிறது. 

லெபனானில் பேஜர்கள் வெடித்த செய்தி எனக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது.. ஆனாலும் ஒரு பன்னிரண்டு மணி நேரத்துக்கு மேல்தான் அதிக விபரங்களை சேகரித்து சென்ற பதிவையும் அதற்கு முந்தைய பதிவையும் போட்டேன்.

அப்போதைக்கு எனக்கு வந்த செய்திகள் எல்லாம் அல்ஜசீரா, ஆர்டீ நியூஸ் போன்றவைதான். அதிலேயே காயம்பட்ட 2700 பேரில் பெரும்பாலோர் ஹிஸ்புல்லாக்கள்தான் என்று சொல்லி இருந்தார்கள். அதே போல சிரியாவிலும் ஈரானிலும் கூட இது போல பேஜர் வெடிப்புகள் நடந்துள்ளன என்றும் போட்டிருந்தார்கள். உணர்ச்சிவசப் பட்டு அதை நானும் பதிவிட்டுவிட்டேன்.

உண்மை அதுவல்ல..

பேஜர் வெடிப்பு நடந்ததும் அதில் 2700 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்ததும் தற்போது வரைக்கும் பத்து பேருக்கு மேல் பலியாகி இருப்பதும் உண்மைதான். ஆனால் அதில் பெரும்பான்மையோர் ஹிஸ்புல்லாக்கள் என்பது உண்மை இல்லை. அதில் அதிக பெரும்பான்மையோர் மருத்துவ உலகினர் என்பதே உண்மை.. 

இனி விஷயத்துக்கு வருவோம்.

லெபனான் என்பது வறுமை அதிகமுள்ள ஒரு நாடு. அந்த வறுமையிலும் கூட அந்த நாட்டு மக்கள் தங்களது சம்பாத்தியத்தின் ஒரு பெரும் பகுதியை ஹிஸ்புல்லாக்களுக்கு அளித்துதான் ஹிஸ்புல்லா இயக்கத்தை இவ்வளவு பெரிதாக வளர்த்திருக்கிறார்கள். ஒவ்வொரு லெபனியும தனது வருமானத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை ஹிஸ்புல்லாக்களுக்கு voluntary யாக கொடுத்து வருகிறான். அதனால்தான் ஹிஸ்புல்லாக்கள் அங்கே மாபெரும் மக்கள் இயக்கமாக வளர்ந்து நிற்கிறார்கள். லெபனானின் நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாக்களின் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் வென்று பிரதிநிதித்துவம் பெற்றிருக்கிறார்கள்.. இதிலிருந்தே ஹிஸ்புல்லாக்கள் எவ்வளவு   தூரம் மக்கள் செல்வாக்கு மிக்க இயக்கம் என்பது உங்களுக்கு புரிய வரும்.

லெபனானில் மின் தட்டுப்பாடு மிக மிக அதிகம்.. ஆகவே  அவர்கள் பெரும்பாலும் நம்பி இருப்பது இந்த பேட்டரிகளைத்தான்.  அதே போல அங்கே அவர்களுக்கு cheap and best ஆக கிடைப்பது பேஜர்கள்தான்.  மொபைலை விட பேஜர்கள்தான் அவர்களுக்கு affordable ஆன சாதனங்கள்.

சிலர் வீடுகளில் சூரிய ஒளி மின்சாரத்தை நம்பி வாழ்வு நடத்துவார்கள்.. 

இந்த நிலையில்தான் இந்த பேஜர் பேட்டரி வெடிப்பு நிகழ்ந்திருக்கிறது. 

லெபனானில் பேஜர்களை அதிகமாக பயன்படுத்துபவர்கள் இந்த ஹெல்த்கேர் கம்யூனிட்டிதான்.  அதிலும் மருத்துவர்கள்,. நர்ஸ்கள், பேராமெடிக் எனப்படும் ஆய்வக ஊழியர்கள், எக்ஸ்ரே தொழிலாளர்கள் போன்ற ஆட்கள்தான் நிறைய பேஜர்கள் பயன்படுத்துகிறார்கள். காரணம் அவர்களுக்கு அவசர அழைப்புகள் எப்போது வேண்டுமானாலும வரலாம். அதற்கு செல்போனை விட அவர்களுக்கு சீப்பானது இந்த பேஜர்கள்தான். ஆகவே அவர்கள் பேஜரையே பெரும்பாலும் பயன்படுத்தி வந்தார்கள்.

ஹிஸ்புல்லாக்களைப் பொறுத்த வரைக்கும்  ஆறேழு மாதங்களுக்கு முன்பாகவே அவர்களை இது போன்ற வயர்லெஸ் எலக்ட்ரானிக் கருவிகளை பயன்படுத்தாதீர்கள். முக்கியமாக செல்போன் பயன்படுத்தினால் இயக்கத்தை விட்டே வெளியே அனுப்பப் படுவீர்கள் என்று தலைமையே எச்சரித்திருந்தது. ஆனாலும் சிலர் பேஜர்களை பயன்படுத்தி வந்தார்கள்.

இந்த  பேஜர் வெடிப்பில் பல்வேறு பொதுமக்களும், முக்கியமாக மருத்துவத் துறையினரும், கூடவே ஹிஸ்புல்லா ஊழியர்கள் சிலரும் பயன்படுத்தி இருக்கிறார்கள். பலியான பத்து பேரில் மூன்று அல்லது நான்கு பேர் ஹிஸ்புல்லாக்கள் என்கிறார்கள். 

படுகாயம் அடைந்தவர்களில் பலர் கண்களைத்தான் இழந்திருக்கிறாரக்ள். சிலர் கைகளை இழந்திருக்கிறார்கள். நிறைய பேருக்கு vital organs எனப்படும உள்ளுறுப்புகள் கடுமையாக சேதம் அடைந்திருக்கின்றன. ஏகப்பட்ட ரத்த சேதம்.. லெபனான் முழுக்க மக்கள் மத்தியில் உடனடியாக வந்து ரத்தம் கொடுங்கள் என்ற பிரச்சாரம் முழுவீச்சில் நடந்து வருகிறது.

ஜோர்டானும், ஈரானும் உடனடியாக மருந்துகளை லெபனானுக்கு அனுப்பி இருக்கின்றன. மேலதிக சிகிச்சை தேவைப்படுபவர்கள் உடனடியாக விமானங்கள் மூலம் ஈரானுக்கு கொண்டு செல்லப் பட்டு வருகிறார்கள்.  லெபனான் தன்னை நிதானப் படுத்திக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது.

இந்த நேரத்தில்தான் நேற்று வாக்கி டாக்கிகள் வெடித்திருக்கின்றன. பேஜர் வெடிப்பில் இறந்த ஹிஸ்புல்லா வீரர் ஒருவரின் இறுதி ஊர்வலம் நடந்திருக்கிறது. அதில் நூற்றுக்கணக்கான மக்கள் உணர்ச்சி பொங்க பங்கெடுத்திருக்கிறார்கள். அந்த இறுதி ஊர்வலத்தில் ஒருவரிடம இருந்த வாக்கி டாக்கி வெடித்து ஏராளமானோர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். என்ன ஆச்சரியம் என்றால் உடனடியாக ஆம்புலன்ஸ்கள் வந்து காயம்பட்டோரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பின் அந்த இறுதி ஊர்வலம் முழு கட்டுப்பாட்டோடு அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. 

சில வீடுகளில் கார் பேட்டரிகள் வெடித்தன என்கிறார்கள். ஆனால் காரில் வெடித்தது கார் பேட்டரிதானா என்று இது வரைக்கும் தெரியவில்லை. ஒரு வீட்டில் சூரிய ஒளி மின்சக்திக்கான பேட்டரி வெடித்தது என்கிறார்கள்.  அதனுடைய முழு விபரமும இன்னும் தெரிய வரவில்லை. பெரும்பாலும் வெடித்தவை பேஜர் பேட்டரிகள் மற்றும் வாக்கி டாக்கி பேட்டரிகள்.

இந்த பேட்டரிகள் எல்லாமே நாம் பென் டார்ச் செல்கள் என்று சொல்கிறோமே.. அந்த அளவில் இருக்கும் பேட்டரி வகையின.. பேஜர் என்றால் அதில் இரண்டு பேட்டரி செல்களும், வாக்கி டாக்கி என்றால் அதன் பவரைப் பொறுத்து இரண்டு முதல் நான்கு பேட்டரிகளும் பயன்படுத்தப் படும.

இந்த வெடிப்பின் சேதத்தை வைத்து பல்வேறு தியரிகளை சொல்கிறார்கள்.

சிலர் அந்தந்த கருவிகளில் இருந்த பேட்டரிகளை அதிகம் சூடாக்கி வீங்க வைத்து வெடிக்க வைத்திருக்கிறார்கள். என்று சொல்கிறார்கள். ஒரு சிலரோ வெறும் இருபது கிராம் எடையுள்ள இந்த பேட்டரி வெடித்து எப்படி கையெல்லாம் amputate ஆகும்..? உடம்பின் உள்ளுறுப்புகள் எல்லாம் எப்படி சேதமாகும.? எனவே நிச்சயம் அந்த பேட்டரியில் குறைந்தது ஐந்து கிராமாவது சக்தி வாய்ந்த வெடிப்பொருள் உள்ளேயே இருந்திருக்கிறது. அது வெடித்ததில்தான் இவ்வளவு பெரிய சேதம் நிகழ்ந்திருக்கிறது என்று உறுதியாக சொல்கிறார்கள். இவர்கள அனைவரும் ஐரோப்பிய ஒன்றிய மற்றும் முன்னாள் இஸ்ரேலிய எலக்ட்ரானிக் வார்ஃபேர் வல்லுனர்கள். ஆக இரு தரப்பு சொல்லும் பாசிபிளிட்டீக்களையும் நாம் ஒருக்கி விடுவதற்கில்லை.

சரி.. இப்போது லெபனானில் இருந்து வரும் செய்திகளை பார்ப்போம்.

முதல் கட்டமாக வெடித்தவை அனைத்தும் (கார் வெடிப்பு, சோலார் ப்ராஜெக்ட் வெடிப்பு தவிர) இந்த சிறிய பென்டார்ச் பேட்டரி சைஸ் பேட்டரிகளாலேயே நிகழ்ந்திருக்கின்றன.

இந்த பேட்டரிகள் எல்லாமே ஐந்து மாதத்துக்கு முன் இறக்குமதி செய்யப் பட்டவை.. அதுவும் பேஜர்களோடு வந்தவை.. இந்த பேஜர்கள் ஐரோப்பிய தயாரிப்புகள். ஆனால் பேட்டரிகள் தாய்வான் தயாரிப்புகள்.. ஒன்றா தாய்வான் நிறுவனத்துக்குள்ளேயே மொசாட் சென்று அந்த பேட்டரிகளில் வெடிப் பொருளை வைத்து லெபனானுக்குள் அனுப்பி இருக்க வேண்டும். அல்லது ஐரோப்பிய பேஜர் நிறுவனத்தோடு உடன்படிக்கை செய்து கொண்டு வெடிப்பொருட்களை பேஜருக்குள் வைத்திருக்க வேண்டும். ஹிஸ்புல்லா உடனடியாக ஒரு விசாரணையை துவங்கி விட்டது. இதை இறக்குமதி செய்த ஏஜண்ட் யாரென்பதில் இருந்து ஹிஸ்புல்லாவின் விசாரணை துவங்கும் என்று தெரிகிறது.

சரி.. இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்கள் இன்னும் போரையே அறிவிக்கவில்லை.. அவர்களது தலைவர்களில் ஒருவரான ஃபஹத் சுகுர் என்பவதை இஸ்ரேல் படுகொலை செய்தது. அதற்கான பதிலடி தாக்குதல்களைத்தான்  ஹிஸ்புல்லா தற்போது வரைக்கும் செய்தபடி இருக்கிறது. இந்த தாக்குதல்களால் இஸ்ரேலுக்கு தாள முடியாத பெரு நஷ்டம். அதனால் உடனடியாக ஹிஸ்புல்லாக்கள் மீது போரை துவக்க முடியாது என்பதுதான் அடிப்படையான உண்மை. இப்படியான நிலையில்  போர் வருவதற்கு பெரிய வாய்ப்பில்லை என்ற நிலையில் எதற்காக இஸ்ரேல் இந்த தாக்குதலை நிகழ்த்தியது..?  

போர் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கும்போது இப்படி ஒரு தாக்குதலை நடத்திநால்தானே பேஜர் வைத்திருக்கும் ஹிஸ்புல்லாக்கள் சாவார்கள். அப்பதானே ஹிஸ்புல்லாக்களுக்கு மன வலிமை குன்றும. போரற்ற இந்த தருணத்தில் எதற்காக இந்த தீவிரவாத தாக்குதல்..?

இங்கேதான் ஒரு பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கிறது.

இஸ்ரேல் ஐந்து மாதங்களுக்கு முன்னாலேயே இந்த குறிப்பிட்ட பேஜர்களில் வெடிப் பொருளும், கூடவே ஆட்டமடிக்காக சூடேறி வெடிக்கும் பேட்டரிகளையும் பொருத்தி வைத்துவிட்டது. அந்த பேட்டரியை சூடேற்றும் software அந்த பேஜரில் உள்ளேயே புதைக்கப் பட்டிருக்கிறது. இஸ்ரேல் சரியான தருணத்துக்காக காத்திருந்தது.

இந்த நிலையில் நான்கு நாட்களுக்கு முன்பு எதோ ரிப்பேருக்கு வந்த இந்த பேஜர்களில் இரண்டை ஹிஸ்புல்லாவின் எலக்ட்ரானிக் பிரிவு எஞ்சினியர்கள் இரண்டு பேர் திறந்து சரி செய்ய முயன்றிருக்கிறார்கள். உண்மையில் அந்த பேட்டரிகள் வெடிக்கக் கூடியவை இன்னொரு பேட்டரியில் வெடிப் பொருள் இருக்கிறது என்பதை எல்லாம் அவர்கள் கண்டு பிடிக்கவில்லை. ஆனால் அந்த இரண்டு பேஜர்களும் ஹேக் செய்யப் பட்டிருக்கலாம் என்று உடனடியாக  தலைமைக்கு தெரிவித்து விட்டார்கள்.

இதை உடனடியாக இஸ்ரேலிய உளவுத்துறை தலைமைக்கு சொல்லி விடுகிறது. ஆக அடுத்த கட்ட ஆய்வில் இஸ்ரேலின் தில்லு முல்லுகள் கண்டு பிடிக்கப் பட்டுவிடும்.. ஐந்து மாதங்களுக்கு முன்பாகவே திட்டமிட்டு ஒளித்து வைக்கப் பட்ட வெடிகள் செயலிழக்கச் செய்யப் பட்டால் இந்த திட்டத்துக்கு செலவழித்த செலவு.. காலம் அனைத்துமே வீணாகப் போய்விடும்..

அதனால்தான் இஸ்ரேலின் போர் அமைச்சர் இரண்டு நாட்களுக்கு முன்பு அவசரமாக அமெரிக்காவின் முக்கிய உளவுத் துறை புள்ளியை அழைத்துப் பேசுகிறார்.

இனி போர் நடக்கும்போது வெடிக்கட்டும் என்று காத்திருந்தால் அனைத்தும் வீணாகிப் போய்விடும் என்பதற்காக கண்டு பிடிப்பதற்கு முன்னால்  வெடிக்கச் செய்துவிடுவோம் என்று முடிவு செய்துதான் இரண்டு நாட்களுக்கு முன்பு பேஜர்களை வெடிக்கச் செய்திருக்கிறார்கள்.

அடுத்த கட்ட விசாரணையில் வாக்கி டாக்கிகளில் ஒளித்து வைத்திருக்கும் வெடிப்பொருட்களையும் கண்டு பிடித்து விடுவார்கள் என்பதானால்தான் நேற்று வாக்கி டாக்கிகளை வெடிக்கச் செய்திருக்கிறார்கள்.

இந்த conspiracy theory காரர்கள் இப்போது கூப்பாடு போட ஆரம்பித்து விட்டார்கள். லெபனானில இருக்கும் எல்லா பேட்டரிகளையும் வெடிக்க வைக்க இஸ்ரேலால் முடியும்.. எப்ப  வேணா லெபனான் வெடித்து சிதறும் என்று கதைகளை கட்டி விட ஆரம்பித்திருக்கிறார்கள்.

அப்படி வெடிக்க வைப்பது என்றால் எப்போதோ அதை  இஸ்ரேல் செய்து முடித்திருக்கலாம் அல்லவா.?

உண்மையில் தற்காலத்தில் பேட்டரி பயன்படுத்தாத துறை என்பதே இல்லை.. ஏவுகணைகளை செலுத்தும் கம்ப்யூட்டர்கள் battery dependant தான்.. ட்ரோன்கள் அனைத்துமே பேட்டரியால் இயங்குபவைதான். அதே போல guided missiles எல்லாம் பேட்டரி இல்லாமல் இயக்கவே முடியாது. விமானம், ஆஸ்பிடல், பள்ளிக்கூடம், தொழிற்துறை என்று பேட்டரி இல்லாத துறையே கிடையாது.

அப்படி அனைத்து பேட்டரிகளையும் இஸ்ரேல் ஹேக் செய்திருந்தால் இந்நேரம் ஹிஸ்புல்லா வசம் இருக்கும் அனைத்து ஆயுதங்களையும் வெடிக்கச் செய்து ஹிஸ்புல்லாவையே ஒட்டு மொத்தமாக அழித்திருக்கலாமே. தினமும் ஹிஸ்புல்லா எழுபது முதல் 250 ராக்கெட்கள் வரை அடித்து இஸ்ரேலின் ராணுவ இலக்குகள் அனைத்தையும் systematic ஆக காலி செய்து வருகிறது. இஸ்ரேலிடம் ஹிஸ்புல்லாக்களின் அனைத்து பேட்டரிகளின் கட்டுப்பாடும் இருந்தால் அதன் ராணுவ இலக்குகளை காப்பாற்ற அட்லீஸ்ட் அந்த ஏவுகணைகள் உள்ளே வரும்போதே வெடிக்கச் செய்திருக்கலாமே.. 

மேற்குலக மிடியாக்களில் பாதி இந்த மாதிரியான ஹைப்களை உருவாக்கி வருகின்றன.. எல்லாமே லாஜிக் இல்லாத வாதங்கள். ஹிஸ்புல்லாக்கள் இந்த விஷயத்தில் மிக நிதானமாக நடந்து கொள்ள வேண்டி இருக்கிறது. அவர்கள் நிதானமாகவே இதை அணுகுவார்கள் என்பதே எனது கணிப்பும்.. 

சரி.. இந்த சமயத்தில் இந்த வெடிப்பு நிகழ்ந்திருக்கிறது. ஹிஸ்புல்லாக்கள் உடனே மனது உடைந்து போய் விடுவார்களா.? இஸ்ரேல் அவர்களை சைக்காலஜிக்கலாக பலமிழக்கச் செய்துவிட்டதா.?

ஒரு வகையில் இஸ்ரேலின் திட்டமே அதுதான். போர் உச்சத்தில் இருக்கும்போது.. லெபனான் முழுக்க இஸ்ரேல் ராக்கெட்டுகளால் தாக்கிக் கொண்டிருக்கும்போது இந்த வெடிப்பை நிகழ்த்தினால் போருக்கு மத்தியில் ஹிஸ்புல்லாக்களால் என்ன செய்ய முடியும்.? அதற்காகதான் ஏற்பாட்டை செய்து வைத்து போர் துவங்குவதற்காக காத்திருந்திருக்கிறார்கள்.

உண்மையில் ஹிஸ்புல்லாக்களின் அதிர்ஷ்டம்தான் அந்த இரண்டு எலக்ட்ரானிக் எஞ்சினியர்களும் தற்செயலாக இந்த ஹேக்கிங்கை கண்டு பிடித்தது. இப்போதும் சேதங்கள் அதிகம்தான். இது ஹிஸ்புல்லாக்களுக்கு மிகப் பெரிய அடிதான். ஆனாலும் இது போர்க்காலம் அல்ல. ஹிஸ்புல்லாக்கள் நிதானமாக திட்டமிட நிறைய அவகாசம் இருக்கிறது. ஒரு வகையில் இஸ்ரேல் போட்டிருந்த திட்டம் புஸ்வாணமாகிப் போய் விட்டது. இது ஒரு வகையில் இஸ்ரேலுக்கு பாதி தோல்வி என்றே நான் சொல்லுவேன்..

சரி. அப்படியென்றால் இனி ஹிஸ்புல்லாக்கள் என்ன செய்வார்கள். பேட்டரி இல்லாமல் போர் என்பதே கிடையாதே..?

அதெல்லாம் ஒன்றும் குடி முழுகிப்  போய் விடாது.. ஹிஸ்புல்லாக்கள் இனிமேல் சிஸ்டமெடிக்காக அவர்களிடம் இருக்கும் எலக்ட்ரானிக் டிவைஸ்களில் எது ஹேக் செய்யப் பட்டிருக்கிறது என்பதை ஆய்ந்து கண்டு பிடிப்பார்கள். அவற்றை நீக்குவார்கள்.. 

அதே நேரம் இனிமேல் இது போன்ற லித்தியம் பேட்டரிகளுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தையோ.. தாய்வான் போன்ற விலை போகும் நாடுகளையோ நம்பி இருக்காமல் மிக நம்பகமான சீனா போன்ற நாடுகளில் இருந்து விலை மலிவான பேட்டரிகளை இறக்குமதி செய்து கொள்வார்கள்.   போரை நோக்கிய அவர்களது வேகமான பயணத்தில் சின்ன தடங்கல் மட்டுமே.. மற்றபடிக்கு அவர்களது பயணம் தொடரத்தான் போகிறது. இந்த பலிகளுக்கும் சேர்த்தே இஸ்ரேல் அனுபவிக்கப் போகிறது. 

எனது கணிப்பின்படி ஹிஸ்புல்லாக்கள் அநேகமாக ஒன்றரை மாதம் கழித்து இஸ்ரேலை தவிடு பொடி ஆக்குவார்கள்.. அது நடக்கத்தான் போகிறது.

சரி. இப்போது இஸ்ரேலின் நிலைமை என்ன.? லெபனான் மக்கள் மட்டுமல்ல. ஒட்டு மொத்த போராளி சமூகமே ஆடித்தான் போயிருக்கிறது. அனைத்து போராளி குழுக்களும் அவர்களிடம் இருக்கும் எலக்ட்ரானிக் சாதனங்களை அவசர அவசரமாக சோதித்துக் கொண்டிருக்கிறார்கள். 

அவர்கள் லேசாக அசந்து போயிருக்கும் இந்த நிலையில் இஸ்ரேல் போரைத் துவங்கி லெபனானை.. ஹிஸ்புல்லாக்களை அதிரடியாக தாக்கத் துவங்கலாம் அல்லவா.?

வாய்ப்பில்ல ராசா. வாய்ப்பே இல்ல.. 

ஏனென்றால் போரை துவக்க நினைத்தாலுமே இ‘ஸ்ரேல் தற்போது கடுமையாக வலிமை குன்றிப் போய் இருக்கிறது. அதனுடைய பொருளாதாரம் படுபயங்கரமாக வீழ்ந்திருக்கிறது. அமெரிக்கா உதவி செய்தாலுமே  இப்படிப் பட்ட வீழ்ச்சியில் இருந்து இஸ்ரேல் மீண்டு வர பத்தாண்டுகளாவது ஆகும் என்கிறார்கள். 

அதே போல அதனிடம் ஆள்பலம் சுத்தமாக இல்லை. இந்த நேரத்தில் ஒரு போரை துவக்கினால் இஸ்ரேல் முற்றிலுமாக திவால் ஆகிவிடும்.. 

ஆனால் இஸ்ரேல் நாங்கள் லெபனான் மீது போரைத் துவங்கிவிட்டோம் என்று சொல்லி இருக்கிறார்களே..

போரின் முக்கியமான தந்திரமே செய்யப் போவதை முன்கூட்டி சொல்லக் கூடாது. தாக்கிவிட்டுதான் நாங்கள் போரை துவங்கி இருக்கிறோம் என்று சொல்ல வேண்டும். ஆனால்  இஸ்ரேல் பிரகடனமாகவே இதை அறிவித்திருப்பது அதன் இயலாமையைத்தான் காட்டுகிறது. நிச்சயம் தற்போதைக்கு இஸ்ரேல் போரைத் துவங்க வாய்ப்பே இல்லை.. 

நண்பர்கள் நம்பிக்கையை இழந்து விட வேண்டாம்.. ஹிஸ்புல்லாக்கள் இதிலிருந்து மீளுவார்கள். முன்பை விட பல மடங்கு பலத்தோடு வந்து இஸ்ரேலைத் தாக்குவார்கள். இஸ்ரேலின் அழிவு ஹிஸ்புல்லாக்களால்தான்.. அதை நான் தீவிரமாக நம்புகிறேன்.

ஒரு பக்கம் ஈரான், ஈராக், ஜோர்டான், யேமன் சிரியா என்று  பல நாடுகள் ஹிஸ்புல்லாக்களுக்கு உதவிக்கரம் நீட்டத் துவங்கி விட்டார்கள். சீனாவும் ரஷ்யாவும் மறைமுகமாக உதவிகள் செய்யத் துவங்கிவிட்டார்கள்.

ஆனால் மேற்குலக மீடியாக்கள் மட்டுமே இஸ்ரேலின் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் மிகச் சிறந்த போர் தந்திரம் என்று குழலெடுத்து ஊதி வருகின்றன.

நாம் இப்படி ஒரு ரிவர்ஸ் சம்பவத்தை கற்பனை செய்து பார்ப்போமே.. ஒரு வேளை அமெரிக்கா மீதுள்ள கோபத்தில் ஈரான் இதே போல மொபைல்களை அமெரிக்கா முழுக்க வெடிக்க வைத்து ஒரு ஆயிரம பேர் காயமடைந்திருந்தால் கூட இந்த மீடியாக்கள் என்ன செய்திருக்கும்.? ஈரான்.. தீவிரவாதம்.. உடனே ஈரானை அழி என்று கொந்தளித்திருக்கும்..

லெபனானில் பேஜர் வெடிப்பால், வாக்கி டாக்கி வெடிப்பால் காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவிகள். போருக்கு சம்பந்தமே இல்லாத மருத்துவ ஊழியர்கள். அவர்களை படு கொலை செய்திருக்கும் இநத் இஸ்ரேலின் செயல் இனப்படுகொலை இலலையா.? 

நாம்தான் இங்கே கிடந்து கொதித்துக் கொண்டிருக்கிறோம். இதில் வலிமையாக குரல் கொடுக்க வேண்டிய சவூதிகளும். அமீரகத்தினரும் இந்த குண்டு  வெடிப்புகளை கிண்டல் செய்து. லெபனான் மக்களின் மரணத்தை கிண்டல் செய்து பாடல்களை வீடியோக்களை  ட்விட்டரிலும் இன்ஸ்டாவிலும் போட்டு சொந்த புண்ணை சொறிந்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

ஆடம்பரமா துரோகமா என்ற நிலைப்பாடு வந்தால் இந்த சவூதிக்களும் அமீரகத்தினரும் துரோகத்தையே தேர்ந்தெடுப்பது அவர்கள் பின்பற்றும் மத நெறிகளுக்கே பெரிய அவமானம்.. 

=================================================================================

பகுதி  -2

ஒரு வழியாக லெபனான் மீது போரை துவங்கிவிட்டது இஸ்ரேல். நேற்று மட்டும் ஆறு முறை லெபனானின் நகர்ப்பகுதிகள் மற்றும புறநகர் பகுதிகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இந்த தாக்குதலில் குறைந்தது 14 பொதுமக்கள், அவர்களில் குழந்தைகளும் அடக்கம், கொல்லப் பட்டிருக்கிறார்கள். இதே தாக்குதலில் ஹிஸ்புல்லாக்களின் முக்கியமான தலைவர்களில் ஒருவரும் போர்க்களத்தில் பெரும் அனுபவம் பெற்றவருமான இப்ராஹிம் அக்கில் (Ibrahim Aqil) என்ற பெரும் போராளியை இஸ்ரேலிய தீவிரவாத ராணுவம் கொன்றிருக்கிறது. அதை ஹிஸ்புல்லாக்களும் அறிவித்திருக்கிறார்கள். 

தரைவழித் தாக்குதல்களை நடத்துவதற்காக தீவிரவாத இஸ்ரேலிய படைகள் லெபனான் எல்லையில் குவிக்கப் பட்டிருக்கிறார்கள். மூன்று முறை நடந்த ஊடுருவல் முயற்சிகளை  வெற்றிகரமாக ஹிஸ்புல்லாக்கள் தடுத்து நிறுத்தி ஏராளமான தீவிரவாத இஸ்ரேலிய ராணுவத்தினரை கொன்று குவித்திருக்கிறார்கள். லெபனான் எல்லைக்குள் ஒரு அடி கூட காலெடுத்து வைக்க முடியாமல் இஸ்ரேலின் தீவிரவாத படையினர் திணறி வருகின்றனர்.

இஸ்ரேல்  வெளிப்படையாக அறிவித்து  தாக்குதல்களை தொடங்கி விட்டடது. ஆனாலும் ஹவுத்திகளும் லெபனி அரசும் எதுவும் சொல்ல வில்லை. லெபனி அரசு தனது காலாட்படையை இஸ்ரேலிய எல்லையை நோக்கி அனுப்பி வைத்திருக்கிறது. 

ஆனால் ஹவுத்திகள் தங்களது தாக்குதல்களை நிறுத்தவே இல்லை. நேற்று மட்டும் எழுபது ஏவுகளை தாக்குதல்களை நடத்தி இருக்கிறது. வடக்கு இஸ்ரேல் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. வடக்கு எல்லைக்கு அருகில் வசிக்கும் இஸ்ரேலிகளை இஸ்ரேலிய அரசே வேறு பகுதிகளுக்கு செல்லுங்கள். இங்கே இருந்தால் உங்களுக்கு உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று சொல்லி இரவோடு இரவாக எழுபத்தைந்தாயிரம் இஸ்ரேலிகளை  காலி செய்ய வைத்து தெற்கு நோக்கி அனுப்பி இருக்கிறது. அவர்களும் டெல் அவிவ்வுக்கு வந்துவிட்டால் நிலைமை மேலும் சிக்கலாகிவிடும் என்று அது தவிக்கிறது. ஹவுத்திகளின் தாக்குதல் இஸ்ரேலின் மின் உற்பத்தி மையங்களை தகர்த்ததில் வடக்கு இஸ்ரேலின் பல நகரங்கள் தற்போது இருளில் மூழ்கியுள்ளன.

அங்கே காசா, நெட்சாரிம், ராஃபா பகுதிகளில் கிட்டத்தட்ட இஸ்ரேலிய ராணுவத்தினர் இல்லை என்றே சொல்லலாம்.  அங்கே விட்டுச் சென்றிருக்கும் மிக சொற்ப வீரர்களும் ஹமாசிடம் இருந்து தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக போராடி வருகிறார்கள். 

காசா ஜெனின், ராஃபா பகுதிகளில் ஹமாஸ் அரசியல்ரீதியாக தனது ஆட்சியை தொடங்கி விட்டது. சீரமைப்புப் பணிகள் மின்னல் வேகத்தில் நடை பெற்று வருகின்றன. குடிநீருக்காக கிணறுகள் அவசரகதியில் தோண்டப் பட்டு வருகின்றன. மிக மிக முக்கியமாக குழந்தைகள் அனைவருக்கும் தாற்காலிக பள்ளிக் கூடங்கள் அமைத்து கற்பிக்கத் துவங்கி இருக்கிறார்கள். கல்வியே அனைத்திலும மிக மிக முக்கியம் என்பதுவும் catch them and teach them young என்பதுவும் அவர்களுக்கு தெள்ளத் தெளிவாக தெரிந்திருக்கிறது. 

இஸ்ரேலிய தீவிரவாத ராணுவமோ இப்போது பள்ளிக் கூடங்களை குறி வைத்து குழந்தைகளை கொன்று குவித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் நாற்பதற்கு மேற்பட்ட குழந்தைகள் கொல்லப் பட்டிருக்கிறார்கள். இறந்து போன தன் பெண் குழந்தையின் வெறும் வலது கை மட்டும் ஒரு தகப்பன் கைக்கு கிடைக்கிறது. அந்த கையை முத்தமிட்டு முத்தமிட்டு கதறிக் கொண்டிருக்கிறான் அந்த தகப்பன்..

மேற்குக் கரையில் யூத ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து வருகின்றன. அந்த ஜியோனிஸ்ட் யூதர்களுக்கு எதிராக நேருக்கு நேராக போராளிகள் அங்கே போராடியபடிதான் இருக்கிறார்கள். 

இதற்கிடையே பாலஸ்தீனிகள் மீது மேலும் ஒரு பொருளாதார தாக்குதலை நடத்தி இருக்கிறது இஸ்ரேலிய தீவிரவாத அரசு.  தற்போது மேற்குக் கரை மீது ஆக்கிரமிப்பு தாக்குதல்கள் நடந்து வருகிறது அல்லவா. இஸ்ரேலின் நிதி அமைச்சரான திவிரவாதி ஸ்மாட்ரிச் மேற்கு கரையில் இருக்கும் பாலஸ்தீனிகளுக்கு  வேலை செய்யும் லைசென்சை ரத்து செய்துள்ளான். பல பத்தாயிரக்கணக்கான பாலஸ்தீனிகளின் லைசென்ஸ் கேன்சல் செய்யப் பட்டிருக்கிறது. 

தீவிரவாத இஸ்ரேலின் சட்டங்களின்படி பாலஸ்தீனிகள் லைசன்ஸ் வாங்காமல் வேலை செய்ய போக முடியாது. கையில் லைசன்ஸ் இல்லாமல் வருபவர்களை கேள்வி கேட்காமல் தீவிரவாத ஜியோனிச இஸ்ரேலிய ராணுவம் கொன்றுவிடும். 

மேற்கு கரையின் ஜெருசலேம், பெத்லஹேம் போன்ற அனைத்து பகுதிகளிலும் பாலஸ்தீனிகளும், கிறிஸ்தவர்களும் யூதர்களும் ஒன்றாகத்தான் தற்போது வரைக்கும் வாழ்ந்து வந்தார்கள் என்பதை நான் ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன். தற்போது பாலஸ்தீனிகளை துரத்திவிட்டு அவர்களது வீடுகளை ஜியோனிச யூதர்கள் ஆக்கிரமித்தோ.. அல்லது இடித்துவிட்டோ சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அங்கே வேலையும் பார்க்க முடியாத நிலை.. மேற்குக் கரையிலிருந்து புதிய அகதிகள் கூட்டம் தற்போது கையில் கிடைத்ததை சுமந்து கொண்டு பாலஸ்தீனத்தில் வெயில்ப் பாலையில் குடும்பம் குடும்பமாக எங்கே போவது என்று தெரியாமல் அலையத் துவங்கி இருக்கிறார்கள்.

ஸ்மாட்ரிச்சின் இந்த லைசன்ஸ் கேன்சல் ஆணைக்கு தீவிரவாத இஸ்ரேலின் ராணுவ அமைச்சர் யுவோவ் காலண்ட் கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருக்கிறான். 

இப்படி நீ லைசென்சை கேன்சல் செய்து அவர்களது வாழ்வாதாரத்தை பிடுங்கிக் கொண்டால் அவன் எங்கே போவான். ஹமாசிடம் சென்று நமக்கு எதிராக போராடத் துவங்குவான். இந்த நடவடிக்கையின் மூலம் நீ நமக்கு எதிராக ஒரு பெரும் கூட்டத்தை உருவாக்கி விட்டாய். ஏற்கெனவே ஹமாசோடு போராட முடியாமல் நாம் தவித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் நீ ஹமாசை வலுப்படுத்தும் காரியத்தை செய்து விட்டாய் என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறான். இந்த அகதிகளுக்கும் ஹமாஸ் நிச்சயம் ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுக்கும்

உண்மையில் சண்டை என்றைக்கோ முடிந்து விட்டது.  தீவிரவாத இஸ்ரேல் தோற்றுப் போய் விட்டது. ஆனால் பெஞ்சமின் நேத்தன்யாகுவை பொறுத்த வரை இந்த சண்டை தொடர வேண்டும். அவன் உயிரோடு இருக்கும் வரை சண்டை தொடர்ந்தால்தான் அவன் வெளியில் இருக்க முடியும் என்ற நிலை. இது தற்போது கிட்டத்தட்ட அனைத்து இஸ்ரேலிகளுக்கும் நன்றாக புரியத் துவங்கி விட்டது. எதிர்க்குரல்கள் பலமாக கிளம்பி உள்ளன. அதை காதில் போட்டுக் கொள்ளும் நிலையில் நேத்தன்யாகு இல்லை. 

நெட்சாரிம்மை பிடித்து வைத்திருப்பேன். நெட்சாரிம்மில் இருந்து கொண்டு காசா முழுவதையும் அரசாட்சி செய்வேன் என்று சொன்னான். நெட்சாரிம்மை போராளிகள் குழு தகர்த்து பொடிப் பொடி ஆக்கினார்கள். தகர்க்கப் பட்ட வேகத்தில் நெட்சாரிம்மைவேறு வேறு இடங்களில் கட்டினான் நேத்தன்யாகு.. எல்லா இடங்களிலும் போராளிகள் கட்டக் கட்ட அந்த நெட்சாரிம்களை தகர்த்து துவம்சம் செய்தார்கள். நான்காவது முறையாக கட்டபபட்ட நெட்சாரிம்மையும் அவர்கள் தகர்த்தபின்தான் இனி காசாவில் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்பது நேத்தன்யாகுவுக்கு புரிந்தது.

காசாவில் ஹமாஸ் போராளிகள் அனைவரையும் அழித்துவிட்டோம். அதனால் நெட்சாரிம்மிலிருந்து பின் வாங்குகிறோம் என்று தன் படைகளை வாபஸ் வாங்கினான்.  ஆனாலும் அங்கே முக்கியமான பாதுகாப்பு இடங்களை பாதுகாக்க என்று விடப்பட்டு வந்திருக்கும் தீவிரவாத இஸ்ரேலின் ராணுவத்தினர் தற்போது உயிருடன் இருப்பதற்கே போராடிக் கொண்டிருக்கிறார்கள். 

நடுவில் ராஃபா.. ஃபிலடெல்ஃபி காரிடார்.. அது வழியாகத்தான் போராளிகளுக்கு ஆயுதங்களும் உணவும் வருகின்றன. அதை பிடித்து  அழிப்பேன் என்று ஒரு கூத்தை நடத்தினான்.  அங்கேதான் போராளிகள் இந்த தீவிரவாத இஸ்ரேலிய ராணுவத்தை தங்கள் சுரங்கப் பாதைகளுக்குள் வரவழைத்து வரவழைத்து கொத்து கொத்தாக கொன்று அழித்தார்கள்.

பிறகுதான் தெரிந்தது ராஃபா எல்லையில் தரையடிப் பாதை வழியாக எந்த உதவியும் வரவில்லை. வெளிப்படையாக நிலத்துக்கு மேல்தான் இஸ்ரேலிய ராணுவத்தின் கண்களில் மண்ணை தூவிவிட்டுதான் போராளிகள் ஆயுதங்கள், உணவுப் பொருட்கள் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் எகிப்தில் இருந்து வரவழைத்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. 

அங்கேயும் பலத்த அடி வாங்கி திரும்பி இருக்கிறார்கள். இனி ராஃபா என்பது இஸ்ரேலுக்கு கனவிலும் கூட கிடைக்காது.

கடைசியாக மேற்கு கரை என்று தற்போது தாக்குதல்களை துவங்கி இருக்கிறார்கள். ஆனால் தற்போது உலகம் எங்கிலும் இருந்து மிக கடுமையான கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. அவற்றிலிருந்து திசை திருப்பவே நேத்தன்யாகு தற்போது லெபனான் மீது போரைத் துவங்கி இருக்கிறான் என்கிறார்கள். 

தற்போது போருக்கு வா.. வா.. என்று கொக்கரித்தபடி லெபனான் மீது வான் வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறான் நேத்தன்யாகு.. 

ஹிஸ்புல்லாக்களோ எங்கள் மீது நடத்தப்பட்ட பேஜர், வாக்கி டாக்கி தாக்குதல்களுக்கு... அதில் பலியான முப்பத்தி நான்கு பேருக்கு.. காயம் பட்ட மூவாயிரத்துக்கும் அதிகமான மக்களுக்காக நாங்கள் இஸ்ரேலை பழி வாங்கியே தீருவோம் என்று அறிவித்திருக்கிறார்கள். 

இதற்கிடையில் இஸ்ரேல் சிரியாவின் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. டமாஸ்கஸ் மீதுதான் குண்டுகளை போட்டு வருகிறது. ஆனால் ஹௌத்தீஸ்கள் சிரியாவை கை விடவில்லை. எப்படி அனுப்பி வைத்தார்கள் என்று தெரியவில்லை. இது வரை இருபதாயிரம் ஹௌத்தி வீரர்களை போராடுவதற்காக யேமன் ஹௌத்தி அனுப்பி இருக்கிறது. வழியில் இருந்த நாடுகள் அனைத்தையும் கடந்து எப்படி இத்தனை பேரை சிரியாவுக்குள் அனுப்பி வைத்தார்கள் என்பது இன்னும் யாருக்கும் புரியவில்லை.

அதே நேரம் ஈராக்கிலிருந்து இயங்கும் ஈரானின் போராளி அமைப்பான ஐஆர்ஜிசி எனப்படும் ஈரானிய ரெசிஸ்டன்ஸ் ஹிஸ்புல்லாவுக்கு தங்களுடைய முழுமையான ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள். நீங்கள் இழக்கும் ஒவ்வொரு ஆயிரம் வீரர்களுக்கும் நாங்கள் ஒரு லட்சம் வீரர்களை உங்களுடன் போராட தயார் செய்து வைத்திருக்கிறோம் என்று அறிவித்திருக்கிறார்கள். லெபனானின் போராட்டத்துக்காக மட்டும பத்து லட்சம் ஐஆர்ஜிசி வீரர்கள் தயாராக இருப்பதாக ஐஆர்ஜிசி அறிவித்திருக்கிறது.

லெபனானையும் சிரியாவையும் தாக்கி வரும் தீவிரவாத இஸ்ரேல் ஹவுத்திகள் மீது தாக்குதல் நடத்த பயப்படுகிறது. ஏனென்றால் அவர்களது ஹைப்பர்சானிக் ஏவுகணையான பாலஸ்தீன் 2 வை வைத்து ஹவுத்திகள் செய்த சம்பவம் அப்படி.. 

யேமன் ஹவுத்திகளும் சும்மா இல்லை.. நாங்கள் நேரடியாக இஸ்ரேலோடு போரில் இறங்குவோம். ஆனால் எந்த வழியாக தாக்குவோம் என்பது உங்களுக்கு பெரும் சர்ப்ரைசாக இருக்கும்.. அது கடல் வழியாக கூட இருக்கலாம் என்று இஸ்ரேலுக்கு கிலி ஊட்டி இருக்கிறார்கள். ஏற்கெனவே செங்கடல் ஹவுத்திகளின் கையில்தான் இருக்கிறது. இதை நினைத்து இஸ்ரேல் வயிற்றைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறது.

உலகமே இஸ்ரேலுக்கு எதிராக நிற்கிறது. ஒரு வேளை இந்தப் போரில் இஸ்ரேல் ஜெயித்தாலுமே அதை ஆதரிக்க அமெரிக்காவும் மோடியும்  தவிர வேறு யாரும் இருக்கப் போவதில்லை. ஆனாலும் எதற்காக இந்தப் போர்..? எதை நோக்கி இந்தப் போர்..?

இதை நாம் சற்றே விரிவாகப் பார்க்க வேண்டும்.

இஸ்ரேல் என்பது அமெரிக்காவின் கள்ளக் குழந்தை என்பது உலகில் உள்ள அனைவருக்கும் தெரிந்த விஷயம். என்னதான் இஸ்ரேல் அமெரிக்காவின் பேச்சை கேட்க மாட்டேன் என்பது மாதிரி நடித்தாலும் இஸ்ரேலின் ஒவ்வொரு நகர்வும் அமெரிக்காவுக்கு தெரிந்தேதான் நடக்கிறது.

ஊன்றி கவனித்தால் இந்த பேஜர் தாக்குதலுக்கு முந்தைய நாள் கூட இஸ்ரேலின் கேலண்ட்டும் அவனது அமெரிக்க கவுண்டர் பார்ட்டும் சந்தித்தது நடந்திருப்பதை நாம் பார்க்கலாம்.

ஆக நேத்தன்யாகு என்பவனே அமெரிக்காவின் கைப்பாவைதான்.. 

அமெரிக்காவைப் பொறுத்த வரைக்கும் உலகின் அனைத்து நாடுகளும் அதன் கீழ்தான் இருந்தன.. மீடியாக்களை கையில் வைத்துக் கொண்டு அமெரிக்கா அதன் சொந்த மக்களையே முட்டாள் அடித்துக் கொண்டிருந்தது. 

அதன் இந்த வல்லாதிக்கம் தொடர வேண்டுமானால் அதற்கு எதிராக எந்த குரலும் இருக்கக் கூடாது.  அதே நேரம் உலகின் ஒட்டு மொத்த எண்ணை  கையில்தான் இருக்க வேண்டும்.. 

இப்போதைக்கு அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் இரண்டு விஷயங்கள்தான். ஒன்று பாலஸ்தீனம். அமெரிக்காவே எதிர்பார்க்காத மாதிரி பாலஸ்தீன போராளிகள் மட்டுமல்ல.. ஈரான், ஈராக், லெபனான்,. யேமன், என்று பல நாடுகளும் கை கோர்த்து நிற்கின்றன. அவற்றின் வலிமைக்கு முன் அமெரிக்கா dwarf ஆகி நிற்கிறது என்பதே உண்மை.. 

அமெரிக்கா தன் வலிமையை நிரூபிக்க வேண்டும் என்றால் இந்த நாடுகள் அனைத்தையும் அடிபணிய வைக்க வேண்டும்.. அதை அமெரிக்காவால் நேரடியாக செய்ய முடியாது. அதனால்தான் இஸ்ரேலை வைத்து காய் நகர்த்தி வருகிறது.

இது நேத்தன்யாகுவுக்கும் நன்றாகத் தெரியும். அதனால்தான் அவன் தலைவிரித்து ஆடுகிறான். இந்த போரில் பின்னிருந்து இயக்கும் அமெரிக்காவை எப்படியாவது உள்ளே இழுத்து விட்டு இதை உலகப் போராக மாற்றி விட வேண்டும் என்று அவன் படாத பாடு படுகிறான். அதனால்தான் ஹிஸ்புல்லாக்களின் மீது அவன் தாக்குதலையே தொடங்கினான்.. ஹிஸ்புல்லாக்களின் மீது தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் தோற்றுப் போகும் நிலைமை வரும். அப்போது நிச்சயம் அமெரிக்கா நேரடியாக களமிறங்கும் என்று அவன் எதிர்பார்ககிறான்.

ஈரானை அவன் சீண்டியதும் அதற்காகத்தான். ஈரான் நேரடியாக போருக்கு வந்தால் அமெரிக்கா நேரடியாக களமிறங்கும். அமெரிக்கா வந்தால் ரஷ்யா சீனா உள்ளே வரும். உடனே இது மூன்றாம் உலகப் போராக மாறி விடும். அதை எதிர்பார்த்துதான் நேத்தன்யாகு அண்டை நாடுகள் அனைத்தையும் வம்பிழுத்து வருகிறான். 

அமெரிக்கா நேரடியாக களமிறங்கினால் அதற்கு பல்வேறு சிக்கல்கள் உள்ளன. முதலில் அமெரிக்காவின் பொருளாதார நிலைமை.. அடுத்த போரில் அமெரிக்கா இறங்கினால் அது பெரும் பொருளாதார சுமையை சந்திக்க நேரிடும். சரி. அப்படியே இறங்கி வெற்றி பெற்றுவிட்டால் மத்திய கிழக்கில் இருக்கும் அனைத்து நாடுகளின் எண்ணை வளத்தையும் வைத்து தனது நாட்டின பொருளாதாரத்தை ஸ்திரப் படுத்திக் கொள்ளலாம் அல்லவா.? 

ஆமாம். வெற்றி பெற்றால் அந்த எண்ணை வளங்களை கொள்ளையடித்து அமெரிக்காவின் பொருளாதாரத்தை நிலை நிறுத்தி விடலாம்தான். அதற்கு அமெரிக்கா வெற்றி பெற வேண்டுமே. இங்கே இந்த இஸ்லாமிய போராளிகளோடு போர் புரிந்து வெல்ல முடியும் என்ற நம்பிக்கை அமெரிக்காவுக்கு இல்லை.. அதனாலேயே நேத்தன்யாகுவுக்கு காசு கொடுத்து நீ அடி. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அடியாளாக களமிறக்கி உள்ளது.

நேத்தன்யாகுவோ நீ வாடி.. உன்னைய நேரடியாக களமிறக்காமல் விட மாட்டேன் என்பது  மாதிரி காய் நகர்த்தி வருகிறான். அதுதான் இங்கே நடக்கும் சிக்கல்.

மற்றொரு புறம் இந்த BRICKS அமைப்பு.. ரஷ்யாவும் சீனாவும் சேர்ந்து உருவாக்கி இருக்கும் இந்த BRICKS மிக விரைவாக வளர்ந்து வருகிறது. பிரிக்ஸ் நிலை பெற்றுவிட்டால் அமெரிக்காவின் பொருளாதார வல்லாதிக்கம் சடசடவென்று சரிந்து விடும்.. 

அப்படியானால் என்ன செய்ய வேண்டும். இதன் மூல நாடுகளை அழிக்க வேண்டும். அதனால்தான் ரஷ்யாவோடு போர் புரியச் சொல்லி குள்ளன் ஜெலன்ஸ்கியை களமிறக்கி உள்ளது. உக்ரைனின் அதிபரான ஜெலன்ஸ்கியை ரஷ்யா மீது போர் தொடுக்க வைத்து ரஷ்யாவை தன் நேசநாடுகளோடு சேர்ந்து உடைத்து நொறுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

ஜெலன்ஸ்கியும் விடாமல் பல உயிர்களை பலி கொடுத்தபோதும் ரஷ்யாவோடு போர் தொடுத்து வருகிறான். ஜெலன்ஸ்கிக்கு நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தும் உரிமைய தற்போது அமெரிக்கா வழங்கி  உள்ளது. இதன் மூலம் ரஷ்யாவின் எல்லா மூலைகளையும் ஜெலன்ஸ்கி தாக்குதல் நடத்த முடியும். 

ஆக ரஷ்யாவை ஒழித்துக் கட்ட வேண்டும என்பதற்காக ஜெலன்ஸ்கியையும் மத்திய கிழக்கை தன் கண்ட்ரோலுக்குள் கொண்டு வருவதற்காக நேத்தன்யாகுவையும் வைத்து சதுரங்க வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.. 

ஒரு வேளை இது இரண்டும் நிறைவேறினால் அடுத்து சீனாவின் மீது கை வைக்க அடுத்த திட்டத்தை போடும். 

இங்கே நான் அமெரிக்கா என்று சொல்வது பைடனையோ.. அல்லது டிரம்ப்பையோ அல்ல. அமெரிக்காவே யூதர்களின் கைப்பாவைதான். AIPAC  என்ற யூத அமைப்புதான் அமெரிக்காவையே ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. அந்த ஐபாக்கின் அதிகாரத்துககு முன்பு பைடனாக இருந்தாலும் டிரம்பாக இருந்தாலும் கமலாவாக இருந்தாலும் அனைவருமே பொம்மைகள்தான்.. 

புரிய கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும் இதுதான் உண்மை..

நடந்து வரும் மத்திய கிழக்குப் போராக இருக்கட்டும். ரஷ்ய உக்ரைன் போராக இருக்கட்டும். அனைத்துமே அமெரிக்காவால் துவக்கப்பட்டு சுயநல நோக்கத்தோடு நடப்பவை மட்டுமே என்பதை நீங்கள் புரிந்து கொண்டாலே போதும்.

ஒரு   போர் என்று துவங்கினால் எதாவது ஒரு தரப்பு போருக்கு வா என்று அழைத்து முதல் தாக்குதலை துவக்கும்.

அதாவது எவன் ஒருவனுக்கு நம்மிடம் அனைத்து பலங்களும் இருக்கிறது. நாம் நிச்சயம் வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறதோ அவனே போரை முதலில் துவங்குவான்.. எதிரியை அழித்து நாம் வென்றுவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிற ஒருவன்தான் முதலில் தாக்குதலை துவங்குவான்.  ஆனாலும் போர் என்பதை அறிவித்துவிடாமல் தாக்குதலை நடத்திவிட்டு இதுதான் போர் என்று அறிவிப்பான்.

ஆனால் இஸ்ரேல் செய்தது என்ன.? 

நாங்கள் போரை துவக்குகிறோம் என்று அறிவித்துவிட்டு ஹிஸ்புல்லாக்களின் மீது தன் தாக்குதல்களை துவங்கி இருக்கிறது. ஹிஸ்புல்லாக்களை நீங்கள் வெல்லவே முடியாது என்று பல ஜியோனிச போரியல் வல்லுனர்கள் எச்சரித்தும் கூட  நேத்தன்யாகு துவங்கி இருக்கிறான்.  இவை இரண்டுமே நேத்தன்யாகு செய்திருக்கும் மிகப் பெரும் தவறுகள். அமெரிக்கா எப்படியும் தன்னை கைவிடாது. அமெரிக்காவுக்கு தன்னை விட்டால் வேறு வழி இல்லை என்று தெரிந்துதான் இந்த மூவ்களை நேத்தன்யாகு செய்கிறான். அல்லது அமெரிக்காவுக்கு தெரிவித்துவிட்டு இந்த மூவ்களை செய்கிறான். 

எனக்குத் தெரிந்து அவன் வெல்ல வாய்ப்பே இல்லை..

ஒரு காணொளி பார்த்தேன்.

பேஜர் மற்றும் வாக்கி டாக்கி குண்டு வெடிப்பு தாக்குதல்களில் காயமாகி கண் இழந்து ஒரு கை இழந்து கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கும் ஹிஸ்புல்லா போராளிகளை காட்டுகிறார்கள்.

அவர்கள் அனைவருமே மருத்துவர்களிடம் கெஞ்சுகிறார்கள். எங்களால் நடமாட முடியும் இலலையா.? அப்படி என்றால் எங்களை டிஸ்சார்ஜ் செய்து விடுங்கள். ஒரு கண்ணை வைத்துக் கொண்டு.. ஒரு கையை வைத்துக் கொண்டு  எங்களால் போரில் பங்கெடுக்க முடியும். தயவு செய்து எங்களை போர் முனைக்கு உடனடியாக அனுப்புங்கள் என்று கெஞ்சுகிறார்கள்.

இன்னொரு போராளியின் மனைவி. அவளுக்கு அதிகபட்சம் இருபத்து மூன்று வயது இருக்கலாம்,. அவளிடம் உன் கணவனுக்கு ஒரு கண் போய்விட்டதே என்று கேட்கிறார்கள்.

அல்லாவுக்கு நன்றி.. கண்தானே போனது.? மறுபடி போர் முனைக்கு சென்று போராடும் வாய்ப்பை கொடுத்த அல்லாவுக்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும். என் கணவன் மறுபடி போர் முனைக்குப் போவான் என்று சொல்கிறாள் அந்த பெண்மணி..

நான் கடவுள் நம்பிக்கை அற்றவன். கடவுள் என்ற கான்செப்ட் முற்றிலும் கேனத்தனம் என்று இந்த நொடி வரைக்கும் தீவிரமாக நம்புபவன்.

இப்போது கண் அவிந்து. கை அறுந்து, கால் இல்லாமல் போர்க்களம் போகத் துடித்துக் கொண்டிருக்கும் இந்த போராளிகளை போ போ என்று எது பின்னால் இருந்து இயக்கிக் கொண்டிருக்கிறது.?

சே குவேராவை கடைசி வரைக்கும் கம்யூனிசம் என்ற நம்பிக்கை உந்தித் தள்ளிக் கொண்டிருந்தது. இந்த போராளிகளை கடவுள் என்ற நம்பிக்கை உந்தித் தள்ளுகிறது..

எந்த விளக்கு இருளிலிருந்து உனக்கு வழி காட்டுகிறதோ.. எந்த நட்சத்திரம் தூரத்திலிருந்து உன்னை வழி நடத்துகிறதோ..  எந்த நம்பிக்கை உனது விடுதலைக்காக உன்னை போராட வைக்கிறதோ. அதுதான் கடவுள் என்று நான் தீவிரமாக நம்புகிறேன்.. 

இந்த போராளிகள் கடவுள்தான் அந்த விளக்கு என்று நம்புகிறார்கள். நம்பிவிட்டுப் போகட்டுமே. அவர்களது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு விடுதலை பெற்றுத்தரும் நம்பிக்கைக்கு எந்ந பெயராக இருந்தால் என்ன..?

வாழ்க போராளிகள். பிறக்கட்டும் பாலஸ்தீனம். ஒழியட்டும் அமெரிக்காவின் வல்லாதிக்கம்.

அடுத்து புதிய அப்டேட்கள் இருந்தால் உடனடியாக உங்களுக்கு அளிக்கிறேன் நண்பர்களே. 

=================================================================================

பகுதி  -3

சில மேற்கத்திய ஊடகங்கள் மற்றும் சில முஸ்லிம்  ஊடகங்களே இந்த லெபனான் போரில் இஸ்ரேல் has the upper hand என்று சொல்லிக் கொண்டிருக்கின்றன.

லெபனான் மிகவும் ஏழை நாடு. கம்பேரிட்டிவ்வாக சொல்ல வேண்டும் என்றால் பாகிஸ்தான், இலங்கையை விட ஏழ்மை நிலையில் இருக்கும் நாடு.. இடை விடாத இஸ்ரேல் தாக்குதல்கள் வேறு.. இது வரை இஸ்ரேலுடன் நடந்த மூன்று போர்களிலும் ஏழை லெபனான்தான் ஹிஸ்புல்லாக்கள் துணையோடு வென்றிருக்கிறது. ஆகவே போர் என்பது லெபனானுக்கு புதிதல்ல. அதே போல இஸ்ரேலோடு எல்லையை பகிர்ந்து கொண்டிருக்கும் வரை லெபனானுக்கு நிம்மதி என்பதே கிடையாது.

ஆக இந்தப் போர் லெபனானுக்கு வாழ்வா சாவா போர்தான். இஸ்ரேலுக்கோ இது existential threat. தோற்றால் இஸ்ரேல் என்ற நாடே இருக்காது.

இஸ்ரேல் கொடூரமான ஆயுதங்களை வைத்து லெபனானை தாக்கி வருகிறது. பங்கர் பஸ்டர் பாம் ஒன்றை இஸ்ரேல் லெபனான் மீது வீசிய காணொளியை பார்த்தேன்.. அணு குண்டு வெடித்த மாதிரி அவ்வளவு பெரிய பெரு வெடிப்பு.. நிறைய பேர் இது வெறும் வெடிகுண்டுதானா இல்லை அணுகுண்டா என்ற கேள்வியோடே அந்த காணொளியை பகிர்ந்திருந்தார்கள். 

இது தவிர பாஸ்பரஸ் குண்டுகளை லெபனான் மீது மழை போல பொழிந்து வருகிறது இஸ்ரேல். பாஸ்பரஸ் குண்டுகள் உலகம் முழுக்க ஐநாவால் தடை செய்யப்பட்டவை.. குண்டு வெடிப்பால் வரும் சேதங்களை விட பாஸ்பரஸ் காற்றில் எரிவதால் வரும் சேதங்கள் மிக மிக அதிகம். குண்டு விழுந்தால் மக்கள் அதோடு இறப்பார்கள் அல்லது காயம் படுவார்கள். அத்தோடு முடிந்தது. ஆனால் இந்த பாஸ்பரஸ் குண்டுகளில் குண்டு வெடித்தபிறகும் பாஸ்பரஸ் எரிந்து கொண்டிருக்கும்.. அங்கே இருக்கும் மக்கள் எல்லாரும் பற்றிக் கொண்டு எரிவார்கள்.. தோலே காணாமல் போய் விடும். அதன் மூலம் வரும் மரணம் கொடூரமாக இருக்கும்.. இஸ்ரேல் அந்த குண்டுகளைத்தான் சட்டவிரோதமாக லெபனானின் மீது பயன்படுத்தி வருகிறது. இவையும் அமெரிக்கா தயாரித்த குண்டுகள்தான்.

உலகம் இந்த அக்கிரமத்தைப் பார்த்துக் கொண்டு சும்மாதான் நிற்கிறது. ஏழை லெபனானிகள் எரிந்து செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இஸ்ரேல் தனது வீரர்களில் பெரும்பாலோரை லெபனான் எல்லையை நோக்கி நகர்த்தி வருகிறது. இஸ்ரேலுக்கு ராணுவ வீரர்களின் தட்டுப்பாடு மிக மிக அதிகமாக இருக்கிறது. 

இஸ்ரேலின் வட பகுதி என்பது கலிலி ஏரியாதான்..  அங்கேதான் பெரும்பபான்மை குடியிருப்புகள் இருந்தன.. அங்கே தற்போது செட்டில்மெண்ட்ஸ் எனப்படும 500 குடியிருப்புகளை அழித்திருக்கிறது லெபனான்.. அங்கிருந்த ஏழு லட்சம மக்கள் தெற்கு நோக்கி ஓடி வந்திருக்கிறார்கள். 

வட பகுதியில் குடியிருந்தவர்களை மீள குடியமர்த்துவேன் என்று சூளுரைத்துதான் இந்த தாக்குதலை ஆரம்பித்தான் நேத்தன்யாகு.. ஆனால் எல்லையை தாண்டி இருபது கிலோமீட்டர் வரைக்கும் உள்ளே வந்துவிட்டது ஹிஸ்புல்லா என்பதுதான் உண்மை.

ஹிஸ்புல்லா மிக திட்டமிட்டு தனது ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. வட எல்லையில் இருக்கும் க்ரியாட் ஷ்மோனா, மெடுல்லா, பெய்ட் ஹிலெல் எல்லாம் எற்கெனவே காலி.. தற்போது தாக்குதலை விரிவு படுத்தி ஹைஃபா துறைமுகத்தை அடித்து நொறுக்கியுள்ளார்கள் ஹிஸ்ப் போராளிகள். இந்த ஹைஃபாதான்  இஸ்ரேலின் மிக முக்கியமான நகரம். ராணுவ ரீதியிலும் சரி, பொருளாதார ரீதியிலும் சரி. இது மிக முக்கியமான நகரம்., இஸ்ரேலின் தொழிற்பேட்டைகள் பல இங்கேதான் இருக்கின்றன. எண்ணை கிட்டங்கிகள், ராணுவ கிட்டங்கிகள் என்று இங்கே முக்கியமான பல நிலைகள் இருககின்றன. டெல் அவிவ்வுக்குப் பிறகு முக்கியமான நகரம் இந்த ஹைஃபாதான்.. 

ஏற்கெனவே ஹிஸ்புல்லா ஒரு ட்ரோனை அனுப்பி இந்த ஹைஃபாவை இஞ்ச் பை இஞ்ச்சாக அதன் நிலைகளின் கோஆர்டினேட்களோடு ஹெச் டியில் படம் எடுத்தது அல்லவா.? அது இந்த நகரைத்தான்.. அந்த கோஆர்டினேட்களின் துணையோடுதான் ஹிஸ்புல்லா தற்போது கடுமையான தாக்குதலை நடத்தி உள்ளது. 

ஹைஃபா நகரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. கிட்டத்ட்ட மைய இஸ்ரேலில இருக்கும் நாசரேத் நகரம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. எங்கே பார்த்தாலும் நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. எங்கே பார்த்தாலும் இந்த ஜியோனிச யூத அகதிகள் தெருத்தெருவாக வீடின்றி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

வட இஸ்ரேலின் குடியிருப்புகள் அனைத்தையும் ஹிஸ்ப் போராளிகள் தூள் தூளாக அடித்து நொறுக்கி விட்டார்கள். இஸ்ரேலிய ஊடகங்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். பார்த்தீர்களா.. எப்படி ஒரு கொடூரமான சேதாரம். இப்படி ஒரு பேரழிவை உலகில் எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா என்று இடிந்த வீடுகளை காட்டி கதறி வருகிறார்கள். ஆம். பார்த்திருக்கிறோம். இதை விட பல மடங்கு கொடூரமான அழிவுகளை பார்க்க வேண்டும் என்றால் அப்படியே கொஞ்சம் தெற்கு நோக்கி வந்து காசா பகுதியின் நகரங்களையும். ராஃபா பகுதியின் நகரங்களையும் பாருங்கள். அப்போதுதான் உண்மையான கொடூரம் என்றால் என்ன என்பது உங்களுக்குப் புரியும்.. 

இஸ்ரேல் முழுக்க பீதியும் பதற்றமும் தெறிக்கிறது.

அங்கே ராஃபா பகுதியில் இன்னும் வெளியேறாமல் போராடிக் கொண்டிருக்கிற தீவிரவாத இஸ்ரேல் ராணுவ வீரர்களை நெருப்புச் சட்டியில் வைத்து பொறித்துக் கொண்டிருக்கிறார்கள் ஹமாசினர். நேற்று ஒரே நாளில் மட்டும்.. அதுவும் ராஃபா பகுதியில் மட்டும் இருநூறு தீவிரவாத இஸ்ரேலிய ராணுவத்தினரை அழித்திருக்கிறார்கள் ஹமாசினர். இப்போது அந்த ராஃபா கிராசிங், அபு கரீம் ஷலோம் கிராசிங் என்று அனைத்து வாயில்களும் தற்போது ஹமாஸ் வசம்.. ஃபிலடெல்ஃபி காரிடாரில் வைத்துதான் எஞ்சி இருக்கும் தீவிரவாத இஸ்ரேலிய ராணுவத்தை கொத்துக்கறி போட்டுக் கொண்டிருக்கிறது ஹமாஸ்.

மற்றபடிக்கு காசா முழுக்க தன் கைவசம் கொணடு வந்துவிட்டது ஹமாஸ்.. அங்கே வேகமாக சீரமைப்பு பணிகளையும் மேற் கொண்டு இருக்கிறது. ஹமாஸ் போலீசார் பொதுமக்களுக்கு உதவ ஆரம்பித்திருக்கிறார்கள். குடிநீர் வழங்குதுறை, சாலை மேம்பாட்டுத் துறை என்று வரிசையாக ஹமாஸ் உருவாக்கி வருகிறது.

இது நிச்சயமாக இஸ்ரேலால் வெல்ல முடியாத போர். ஆனாலும் எதற்காக இஸ்ரேல் இந்த போரில் குதித்திருக்கிறது..?

நிச்சயமாக அமெரிக்காவை உள்ளே இழுக்கத்தான். இன்டர்நேஷனல் லெவலில் எந்தெந்த குற்றங்களை எல்லாம் செய்யக் கூடாதோ அதை எல்லாம் அனைவரும் நேரடியாக பார்க்கவே இஸ்ரேல் செய்து வருகிறது. அதுவும் இந்த பேஜர், வாக்கி டாக்கி தாக்குதல்களை எல்லாம் அமெரிக்கா தவிர அகில உலகமும் கண்டித்திருக்கிறது. அமெரிக்காவின் நேச நாடுகளான நேட்டோ நாடுகள் அனைத்துமே இந்த கோழைத்தனமான தீவிரவாத தாக்குதலை கண்டித்திருக்கின்றன. ஸ்பெயின் ஒரு படி மேலே போய்  பாலஸ்தீனத்துக்கு தனது முழு ஆதரவை தெரிவித்திருக்கிறது.

ஆனால் நேத்தன்யாகு போரில் இறக்கி ஒட்டு மொத்த இஸ்ரேலையும் அழிவை நோக்கி செலுத்திக் கொண்டிருக்கிறான். இது  அமெரிக்காவுக்கு அவன் வைக்கும் மிரட்டல்.. உனக்கு இஸ்ரேல் என்ற ஒரு பேஸ் மத்திய கிழக்கில் வேண்டுமென்றால் யுத்தத்தில் நேரடியாக நீயும் குதி.. இல்லை என்றால் நானே இஸ்ரேலை அழித்து விடுவேன். நாளை உனக்கு இஸ்ரேல் என்ற மத்திய கிழக்கு பேஸ் காலியாகிவிடும். பின்னர் ஒரு நாளும் நீ மத்திய கிழக்கில் கால் ஊன்றவே முடியாது.. இதுதான் நேத்தன்யாகு அமெரிக்காவுக்கு விடுக்கும் செய்தி..

லெபனான் என்ற ஏழை நாடு காலகாலமாக அனுபவித்து வரும் போர்க் கொடுமையைத்தான் இப்போதும் அனுபவிக்கிறது. அவர்களது அனுபவம் காரணமாக இப்போரை எப்படி அணுகுவது என்று அவர்களுக்குத் தெரியும். இறப்பவர்களுக்காக அவர்கள் அழுவதில்லை. அல்லா அவர்களை அழைத்துக் கொண்டார் என்று நிம்மதியடைகிறார்கள். 

இது கிட்டத்தட்ட இறுதி யுத்தம்தான். இதில் வென்றால் லெபனானுக்கு நிரந்தர விடுதலை என்பது அவர்களுக்கு தெரியும.. அதனால்தான் ஹிஸ்ப்புகளுக்கு அவர்கள் தீவிர ஆதரவை வழங்கி வருகிறார்கள்.

ஹிஸ்புகளும் சும்மா இலலை. ஒரு பக்கம் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியபடி இருக்க இவர்கள் கச்சிதமாக திட்டமிட்டு இஸ்ரேலின் அனைத்து பலங்களையும் தங்களது ஏவுகணைகளின் மூலம் காலி செய்து வருகிறார்கள். கடைசியாக அவர்கள் அனுப்பிய Fahdi 1 மற்றும் Fahdi 2 வகை மிசைல்களின் மூலம் மிக முக்கியமான ஏர் பேஸ்களையும் தகர்த்திருக்கிறார்கள். கிழக்கு ஹைஃபா மட்டுமல்ல, இஸ்ரேலின் ரமாட் டேவிட் பேஸ் என்ற ஏர் பேசை சுக்கு நூறாக தகர்த்து விட்டார்கள்.

இஸ்ரேலின் பலம் கொஞ்சம் கொஞ்சமாக குன்றத் துவங்கி இருக்கிறது. ஆட்டுவிக்கும் அமெரிக்கா தர்ம சங்கடமாக கையைப் பிசைந்தபடி நிற்கிறது. இந்தப் பக்கம் ஹமாஸ் போராளிகள் காசா பகுதியை சீரமைக்கத் துவங்கி இருக்கிறார்கள்.

இந்த போர் ஓர் எல்லையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. அந்த எல்லையின் முடிவில் என்ன இருக்கிறது..?

அறிந்து கொள்ள காத்திருக்கத்தான் வேண்டும்...

- நந்தன் ஸ்ரீதரன்

(முகநூல் பின்னூட்டங்களில்)

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு