பி.எஸ்.ஆர் என்றழைக்கப்பட்ட தோழர் பி சீனிவாசராவ் பிறந்தநாள்
கனகு கனகராஜ்

இன்று "இடுப்புத் துண்டை தோளில் ஏற்று. உன்னை அடித்தால் திருப்பி அடி " என்று முழக்கமிட்ட பி.எஸ்.ஆர் என்றழைக்கப்பட்ட தோழர் பி சீனிவாசராவ் பிறந்தநாள்-
1907-ம் ஆண்டு ஏப்ரல் 10 ம் நாள் தென் கர்நாடகத்தில் படகராவில் பிறந்த பி.எஸ்.ஆர் பின்னாட்களில் தமிழ் மக்களின் தோழராக மிளிர்ந்தார்.
தொடக்கத்தில் காங்கிரஸ் தேசியவாதியாக இருந்த பி.எஸ்.ஆர் சிறைக்கு சென்றபோது அங்கே நேதாஜியின் நட்பை பெற்று நெருங்கிய நண்பரானார். காலப்போக்கில் அரசியல் மாறுபாடு கொண்டு கம்யூனிச கொள்கையின்பால் ஈடுபாடு கொண்டார். சிறையில் தோழர் ஹைதர்கான் கொடுத்த கார்ல் மார்க்சின் ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யே, பி.எஸ்.ஆரை தோழர் பி.எஸ்.ஆராக உருமாற அடித்தளமிட்டது.
1936 ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளையை தமிழ்நாட்டில் உருவாக்கினார் பி.எஸ்.ஆர். ஜீவாவுடன் இணைந்து ‘ஜனசக்தி’ பத்திரிக்கையின் மூலம் அரசியல் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்றார். இதன்மூலம் இடதுசாரி அரசியலின்பால் ஈடுபாடு கொண்ட முன்னணி சக்திகள் உருவாகினர். இதன் தொடர்ச்சியாக கட்சி முடிவுக்கேற்ப 1942-ம் ஆண்டில் விவசாயிகள் இயக்கத்தின் பொறுப்பாளராக தஞ்சை பகுதிக்கு மாறினார். இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் முடிந்த காலக்கட்டத்தில், திருத்துறைப்பூண்டியில் ‘நில வெளியேற்ற எதிர்ப்பு’ மாநாட்டுக்கு 2 லட்சத்துக்கும் மேலான மக்கள் பங்கேற்றனர். 1952 ல் நடந்த பொதுத்தேர்தலில் தஞ்சை மாவட்டத்தின் 19 சட்டமன்ற தொகுதிகளில் 6 ல் கம்யூனிஸ்ட் கட்சி வெல்வதற்கு காரணம், ‘பி.எஸ்.ஆர்’.அரசியல்ரீதியாக மக்களை அணிதிரட்டுவதில் ஆளுமைமிக்கவர் ‘பி.எஸ்.ஆர்’. இன்று ஓரளவேனும் விவசாயிகள் அனுபவித்து வரும் பலன்கள், பி.எஸ்.ஆர் போன்ற போராளிகளின் உதிரங்களின் விளைந்த முத்துக்களாகும். அதிகார வர்கத்துக்கு எப்போதும் தலைசாக்காத புரட்சியாளர் -‘பி.சீனிவாசராவ்'. ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்களால் உயிர் காப்பாற்றப்பட்ட பி.எஸ்.ஆர் ஆயுள் முழுக்க, அவர்களுக்களின் விடுதலைக்காகவே பாடுபட்டார்.
படியுங்கள்:
ஆர்.நல்லக்கண்ணு எழுதிய ‘தோழர் சீனிவாசராவ் வாழ்க்கை வரலாறு’
என்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘பி.சீனிவாசராவ் அடிமை விலங்கொடிக்க ஆர்த்தெழுந்த வீரன்!
(Tp Jayaraman)
- கனகு கனகராஜ்
https://www.facebook.com/share/p/19EXTaEUbs/?mibextid=oFDknk
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு