பகத்சிங், சுகதேவ், ராஜகுரு: இந்திய பாட்டாளி வர்க்கப் புரட்சியின் முன்னோடிகள்

செந்தளம் செய்திப்பிரிவு

பகத்சிங், சுகதேவ், ராஜகுரு: இந்திய பாட்டாளி வர்க்கப் புரட்சியின் முன்னோடிகள்

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் மார்ச் 23, 1931 மேற்கு பஞ்சாப்,  [இப்போது பாகிஸ்தானில்] லாகூரில் உள்ள  மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்ட சுதந்திரப் போராட்ட  புரட்சித் தலைவர்களான பகத்சிங், சிவராம் ஹரி ராஜ்குரு மற்றும் சுகதேவ் தாபர் ஆகியோரின் நினைவு தினத்தை "தியாகிகள் தினமாக" அனுசரிக்க கடமைப்பட்டுள்ளோம்!. இவர்கள் இந்திய சுதந்திரப் போராட்டம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை விரட்டுவதோடு,  சோஷலிச புரட்சியையும்  முன்னெடுக்க விரும்பியவர்கள்!. 

பகத்சிங், சோசலிச இந்தியாவைப் படைக்க புரட்சி செய்த சுதந்திரப் போராட்ட வீரர். இவர் 1907 இல், தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம், பைசலாபாத் மாவட்டத்தில் உள்ள பங்கா கிராமத்தில் பிறந்தார்.  அமிர்தசரஸ் படுகொலை என்றும் அழைக்கப்படும் ஜாலியன்வாலாபாக் படுகொலை, 13 ஏப்ரல் 1919 அன்று நடந்தது.  இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலாபாக்கில், ரவுலட் சட்டத்திற்கு எதிராகவும், சுதந்திர ஆதரவாளர்களைக் கைது செய்வதற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, சைபுதீன் கிச்லேவ் மற்றும் சத்யபால் தலைமையில் ஒரு பெரிய அமைதியான பொதுக்கூட்டம் நடந்தது. அம்மக்கள் போராட்டத்தை ஒடுக்க, R.E.H. டயர் தலைமையில் பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தின் 59 வது சிண்டே ரைபிள்களுடன் போராட்டக்காரர்களை சுற்றி வளைத்தனர். பொதுக் கூட்டத்திற்கு பதிலளிக்கும் விதமாக, தற்காலிக பிரிகேடியர் ஜெனரல், R. E.H. டயர்,  தலைமையில் 54 வது சீக்கியர்கள் மற்றும் பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தின் 59 வது சிண்டே ரைபிள்களுடன் போராட்டக்காரர்களை சுற்றி வளைத்தனர். தனது துருப்புக்களுடன் வெளியேறுவதைத் தடுத்த பிறகு, போராட்டக்காரர்கள்  தப்பி ஓட முயன்றபோதும் துப்பாக்கிச் சூடு நடத்திக்  1,500 -ற்கு மேற்பட்டவர்களை சுட்டு படுகொலைச் செய்யப்பட்டனர் அதில் சுமார் 1,500 மேற்பட்டவர்கள்  காயமடைந்தனர். அக்கொடூர படுகொலை இரத்தத்தில் தொவிந்த மண்னை வீரத் திளமிட்ட பகத் சிங், தனது பதின் மூன்றாவது பள்ளி வயதிலேயே இந்தியாவின் சுதந்திர இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.  

சுக்தேவ் தாப்பர் மே 15, 1907 இல் இந்தியாவின் பஞ்சாப், லூதியானா நகரின் நௌகாரா மொஹல்லாவில் பிறந்தார். அவரது குழந்தைப் பருவத்திலிருந்தே, ஏகாதிபத்திய  பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கட்டுகளிலிருந்து விடுவிப்பதாக சபதம் செய்தார்.  இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசுக் கட்சியின் (HSRA) உறுப்பினராக இருந்தார், மேலும் பஞ்சாப் மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளில் புரட்சிகர போராட்டங்களை ஏற்படுத்தினார். சுக்தேவ் தாப்பர் ஒரு அர்ப்பணிப்புள்ள தலைவர், அவர் லாகூரில் உள்ள தேசிய கல்லூரியில் இளைஞர்களுக்கு கல்வியுடன் புரட்சியையும் கற்பித்து ஊக்கப்படுத்தினார். அவர் பகத்சிங் போன்ற மற்ற  புகழ்பெற்ற புரட்சியாளர்களுடன் சேர்ந்து லாகூரில் 'நௌஜவான் பாரத் சபா' என்ற அமைப்பைத் தொடங்கி, பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். முக்கியமாக இளைஞர்களை சுதந்திரப் போராட்டத்திற்கு தயார்படுத்தியது மற்றும் வகுப்புவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

சிவராம்  ஹரி ராஜ்குரு 24 ஆகஸ்ட் 1908 -ல் புனே அருகே பீமா ஆற்றின் கரையில் கேத் நகரில் பிறந்தார். அவர் ஆரம்பக் கல்வியை கெடிலிலும்,  உயர்நிலைப் படிப்பை புனேவிலும் படித்தார். இளம் வயதிலேயே சேவாதளத்தில் சேர்ந்து,  காட்பிரபாவில் டாக்டர் என்.எஸ்.ஹர்திகர் நடத்திய பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசுக் கழகத்தின் உறுப்பினராக இருந்தார், அவர் இந்தியாவை பிரிட்டிஷ் அரசிடமிருந்து  புரட்சி செய்து விடுவிக்க வேண்டும் என்று விரும்பினார். 

டிசம்பர் 1928 இல், புகழ்பெற்ற லால்-பால்-பால் மூவரின் தேசியவாதத் தலைவரான லாலா லஜபதிராயின் மரணத்திற்குப் பழிவாங்குவதற்காக பகத்சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு ஆகியோர் லாகூரில் காவல் கண்காணிப்பாளர் ஜேம்ஸ் ஸ்காட்டை படுகொலை செய்யத் திட்டமிட்டனர். ஆனால், தவறுதலாக  உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜான் சாண்டர்ஸ் சுட்டுக் கொல்லப்பட்டார். ஏப்ரல் 1929 இல், சிங்கும் படுகேஷ்வர் தத்தும் டெல்லியில் உள்ள மத்திய  பாராளமன்றத்தில் குண்டுகளை வீசினர், மேலும் “இன்குலாப் ஜிந்தாபாத்!” என்ற முழக்கத்தை எழுப்பினர்.  ஆங்கிலேயர்களுக்கு எதிரான அவர்களது  இரண்டு வர்க்கப் போராட்ட செயல்பாடுகளுக்கும் அவர்கள்  கைது செய்யப்பட்டனர். சிங் மற்றும் அவரது புரட்சிகர தோழர்கள் ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோர் லாகூர் சதி வழக்கில் மார்ச் 23, 1931 அன்று தூக்கிலிடப்பட்டனர்.  இந்திய சுதந்திரப் போராட்டத்தின் புரட்சி கதாநாயகன் என்றால் அது மிகையல்ல.  ஆம், தனது கடைசியாசையாக மாவீரன் லெனினின் "அரசும் புரட்சும்"  என்னும் நூலை கேட்டு படித்தவர், தனது முகத்தை மறைத்த கருப்பு துணியை நீக்க சொல்லியும் தூக்குக்  கயிற்றுக்கு முத்தமிட்டும்  தனது தாய் திரு நாட்டை பார்த்தவாறே  தூக்கு  மேடையேறி  "வெள்ளையனே வெளியேறு!, இன்குலாப் ஜிந்தாபாத்!!" என்று வீர முழக்கமிட்டு  உயிர்த்துறந்த புரட்சியாளர்களின் தியாகத்தைப் போற்றுவோம், அவர்களின் “சோவியத் இந்தியா” கனவை நனவாக்குவோம்.அவர்களின் “சோவித் இந்தியா” கனவை நனவாக்குவோம். அதை நிறைவேற்றும் வழியில் இன்று நாட்டை அமெரிக்க ஏகாதிபத்தியம்- இந்திய தரகு பெரும் முதலாளித்துவ அடிமைத்தளையிலிருந்து விடுவிக்க அணிதிரள்வோம்! 

- செந்தளம் செய்திப்பிரிவு