பாட்டாளி வர்க்க ஆசான் மார்க்சின் நண்பர் ஏங்கெல்ஸின் பிறந்த நாளில் மார்க்சியத்தை உயர்த்திப் பிடிப்போம்!

செந்தளம் செய்திப் பிரிவு

பாட்டாளி வர்க்க ஆசான் மார்க்சின் நண்பர்  ஏங்கெல்ஸின் பிறந்த நாளில் மார்க்சியத்தை உயர்த்திப் பிடிப்போம்!

ஃபிரடெரிக் ஏங்கல்ஸ் 28 நவம்பர் 1820 -ல், பார்மென், ஜெர்மனில் தொழில் அதிபரின் மகனாக பிறந்தார். இவர் தந்தை சால்ஃபோர்ட் மற்றும் பார்மென், பிரஷியா ஆகிய இடங்களில் பெரிய ஜவுளி தொழிற்சாலைகளின் உரிமையாளர்.  1845 ஆம் ஆண்டில், அவர் ஆங்கில நகரங்களில் தனிப்பட்ட அவதானிப்புகள் மற்றும் ஆராய்ச்சியின் அடிப்படையில் இங்கிலாந்தில் தொழிலாளர் வர்க்கத்தின் நிபந்தனையை வெளியிட்டார். ஏங்கல்ஸ், ஒரு ஜெர்மன் தத்துவஞானி, அரசியல் பொருளாதார விமர்சகர், வரலாற்றாசிரியர், பத்திரிகையாளர், அரசியல் கோட்பாட்டாளர் மற்றும் புரட்சியாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக திகழ்ந்தார். 

1848 ஆம் ஆண்டில், ஏங்கெல்ஸ் மார்க்ஸுடன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை எழுதினார், மேலும் (முதன்மையாக மார்க்ஸுடன்) பல படைப்புகளை எழுதியுள்ளார். பின்னர், எங்கெல்ஸ் தனது பங்கான ஜவுளி ஆலையை விற்று மார்க்சின்  தத்துவ பணிக்கு உதவினார், மார்க்சின்  ஆராய்ச்சிக்கு மிகவும் துணைநின்றார்.  முதலாளித்துவத்தின்  உபரி மதிப்பு  "தாஸ் கேபிடல்" என்னும் மகத்தான  தத்துவ நூலை எழுத உறுதுணையாக இருந்தார். மார்க்ஸ் இறந்த பிறகு, எங்கெல்ஸ் தாஸ் கேபிட்டலின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகளைத் திருத்தினார். அவர் வழியில், உபரி மதிப்புக் கோட்பாடுகள் பற்றிய குறிப்புகள் ஒழுங்கமைக்கப்பட்டு, தாஸ் கேபிட்டலின் "நான்காவது தொகுதி" வெளியிடப்பட்டது. சிறந்த மனிதகுல வளர்ச்ச்சிக்கான படைப்பாக 1884 இல், மார்க்சின் இனவியல் ஆராய்ச்சியின் அடிப்படையில் குடும்பம், தனியார் சொத்து மற்றும் அரசின்  தோற்றம் என்ற நூலை வெளியிட்டார். 5 ஆகஸ்ட் 1895 தனது 74 வயதிலே லண்டன், இங்கிலாந்தில் மறைந்தார். அவர் மறைத்தாலும், மார்க்சியுடன் இணைந்து உருவாக்கிய, அவரின் மகத்தான தத்துவம் இன்றும், என்றும் உயிர்ப்புடனே உள்ளது.

 

உயிர்களின் தோற்றம், பரிணாம வளர்ச்சி பற்றிய டார்வின் கோட்பாடானது,  புற சூழ்நிலைகளால் ஒரு செல் உயிரி, இரு செல் உயிரி  என்ற அகநிலை மாற்ற வளர்ச்சியின்  வினைப்பயனே உயிர்களின் தோற்றம் என வரையறுத்தார்.  அவ்வாறே மனித குலத்தின் தோற்றத்தையும் அதன் வளர்ச்சியையும் ஃபாயர்பாஹின்  “பொருள்முதல்வாதம்” உள்ளிட்ட அதுவரை இருந்து வந்த  பொருள்முதல்வாதத்திற்கான பிரதான குறைபாடு - பொருள், எதார்த்தம்,  புலனுணர்வு  என்பது ‘பொருள்’ அல்லது ‘சிந்தனை’ என்னும் வடிவில் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், மனிதப் புலனுணர்வு நடவடிக்கை எனும் நடைமுறை அகநிலையை கருத்தில் கொள்ளவில்லை. எனவே பொருள்முதல்வாதத்திற்கு நேர் எதிரான நிலையில் கருத்துமுதல்வாதம் செயலூக்கம் உள்ள பகுதியாக  வளர நேர்ந்தது.  ஆம்,  "அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது" என்ற மத நம்பிக்கையின் கருத்துமுதல்வாதத்திற்கு மாற்றாக "அணு என்னும் பொருள் இன்றி  ஓர் உயிரும், சிந்தனையும் இருக்காது" என்ற பொருள்முதல்வாதத்தை உலகிற்கு உணர்த்தி, மனித குலத்தின் மகத்தான வளர்ச்சிக்கு வித்திட்ட  மார்க்சுக்கு அடுத்த நிலைவகித்த ஃபிரடெரிக் ஏங்கல்சை  என்றும் நினைவு கூறுவோம். மனிதகுல வளர்ச்ச்சியில் அடுத்த நிலைக்கான பாட்டாளிவர்க்க  புரட்சியை  முன்னெடுப்போம்! அழுகியநிலையில் உள்ள முதலாளித்ததுவத்தை மண்ணுக்கு அனுப்புவோம்!! என்று அவர் பிறந்த இந்நாளில் சபதமேற்போம் !!!

- செந்தளம் செய்திப் பிரிவு