போராடும் விவசாயிகளை சுட்டுக்கொல்லும் மோடி அரசு
சம்யுக்த கிசான் மோர்ச்சா கண்டனம்
#காவல்துறையின்_கொடூர_அடக்குமுறை #பஞ்சாப்_எல்லையில்_விவசாயி_கொல்லப்பட்டதை_SKM_கடுமையாக_எதிர்க்கிறது
தற்போதைய இழப்புக்கும் நெருக்கடிக்கும் காரணம் விவசாயிகளுடன் பிரதமரும், ஆட்சி நிர்வாகமும் போட்ட ஒப்பந்தத்தை பொறுப்புடன் செயல்படுத்தவில்லை என்பதே !
இன்று ஹரியானா-பஞ்சாப் எல்லையில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில், பதிண்டா மாவட்டத்தின் பல்லோ கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்கரன் சிங் (23) கொல்லப்பட்டது மற்றும் அங்கே நடத்தப்பட்ட கொடூரமான காவல்துறை அடக்குமுறைக்கு SKM கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கிறது.
கிடைத்துள்ள விவரங்களின்படி அடக்குமுறையில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இது, பிரதமர் அளித்த எழுத்துப்பூர்வ வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது அவர்கள் மீது இந்த கொடூரமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 2021 ம் ஆண்டு டிசம்பர் 9 அன்று கையெழுத்திட்ட SKM உடனான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தத் தவறிய பிரதம•ரும், அரசு நிர்வாகமுமே தற்போதைய நெருக்கடிக்கும், இழப்புகளுக்கும் முழுப் பொறுப்பாவர்.
ஐக்கிய விவசாயிகள் முன்னணி SKM ஆனது, தற்போது பஞ்சாப் - ஹரியானா எல்லையில் நிலவும் நிலைமையை உரிய தீவிரத்துடன் கணக்கில் எடுத்துக் கொள்வதோடு, 22 பிப்ரவரி 2024 அன்று நடைபெறும், SKM தேசிய ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் நிலைமையை விரிவாக விவாதித்து போராட்டத்தை முன்னெடுப்பதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்.
சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM)- செய்தி அறிக்கை 21 பிப்ரவரி 2024, புது தில்லி
Disclaimer: இது சங்கத்தின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு