வரலாற்று காலகட்ட கட்சிகளின் வரலாறும் வர்க்க போராட்டத்தின் வரலாறுதான்

துரை. சண்முகம்

வரலாற்று காலகட்ட கட்சிகளின் வரலாறும் வர்க்க போராட்டத்தின் வரலாறுதான்

"காஞ்சி போன நதி எல்லாம் கங்கைய நோக்கி வரும்! அந்த கங்கையே காஞ்சிப் போன! மொமன்ட்.

ஆனாலும் இது விளையாட்டாக அனுமானிக்கக் கூடிய விசயம் அல்ல.

பாஜக மட்டும் தான் விஜயை ஆதரிக்கிறது என்று சொன்னார்கள். உண்மையில் காங்கிரசும் அதன் தலைவர் ராகுல் காந்தியும் கூட விஜயை துக்க விசாரிப்பது போல விசாரித்தாரே ஒழிய விமர்சனமாக ஏதுமில்லை. 

தமிழக காங்கிரஸ் பிரமுகர்களும் கூட எதிர்பார்த்த அளவுக்கு இந்த விசயத்தில் திமுகவுக்கு இறங்கி வேலை செய்யவில்லை. 

ஏன் திமுக தலைமையே கூட மக்களின் இழப்புக்குப் பிறகும் 

விஜயை சாஃப்ட்டாகவே டீல் செய்தது. இதில் யார் மீதும் பழி போட ஏதுமில்லை என்றது.

விஜய் சமரசத்துக்கு வராமல் திமுகவை எதிர்த்து விளையாடுவது எனும் நிலையில் திமுக தான் தன்னிலை விளக்கத்துக்கு தள்ளப்பட்டது.

தற்குறி அணில்கள் என்று திமுகவின் இடது ஆதரவாளர்கள் மனதை ஆற்றிக் கொண்டாலும், 

தமிழக மற்றும் இந்திய அளவில் 

விஜய் உருவாக்கத்திற்கும் பரவலாக்கத்திற்கும் தேவையை நிறைவு செய்யும் சக்திகள் இயங்குகின்றன. 

வழக்கமாக மக்களிடம் சலிப்பும் வெறுப்படைந்து வரும் கட்சிகளுக்கு மாற்றாக தமிழகத்தில் இளம் தலைமுறை பரப்பளவை பெருமளவு கொண்ட ஒரு மாற்று ஆளும்வர்க்க குழுவை உருவாக்குவது அவர்களுக்கு தேவையாகவும் இருக்கிறது.

இந்தப் பின்னணியிலான அரசியல் தள்ளு முள்ளும்  நடந்து கொண்டிருப்பது.

அதை வெறும் பாஜக என்று சுருக்கி பார்க்க முடியாது பாஜகவும் தனது அரசியல் நலனுக்காக அந்த வேலையைச் செய்யும். 

நேற்று வரை விஜய் ஒரு சங்கி சங்கி என்று தீர்மானமாக பேசிய யூடிப் நபர்கள் சிலர், 

நீதான் சங்கியாச்சே! என்று தூர எறியாமல், சிபிஐ விசாரணை பாஜக ஆய்வு குழு போன்ற கோரிக்கைகள் எடப்பாடி போல விஜய்யும் பாஜக பக்கம் இழுத்து வைத்து விடும்! என்று பூச்சாண்டி காட்டுவது போலவும் விஜய்க்கு பின் காது அறிவுரையாகவும் மெல்ல பேசுகிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால் இவர்கள் அரசியல் விதிப்படி 

திமுகவுக்கு திறம்பட வேலை செய்யத் தெரியாத வேஸ்டுகள். 

தங்களைப் பற்றி மக்களின் மதிப்பீடு என்ன என்பதை துளியும் மதிக்காமல் நிலைமைகளுக்கு பொருத்தமில்லாமல் கூவி,

ஒரு வகையில் திமுகவை செயலற்ற அரசு எனும்படி அம்பலப்படுத்துகிறார்கள்.

அரசியலை வர்க்க அணிச் சேர்க்கையாக பார்க்கத் தெரியாமல் அல்லது பார்ப்பதை தடுத்து விட்டு வெறும் இனவாத அரசியலாக திமுகவை நம்பி பின்னே போகிறவர்கள் முகத்தில் கரியை பூசிக்கொண்டுதான் வர வேண்டும். 

வரலாறு என்பது மட்டுமல்ல வரலாற்று காலகட்ட கட்சிகளின் வரலாறும் வர்க்க போராட்டத்தின் வரலாறுதான்! 

இந்த அரசியல் தெரியாதவர்கள் தான் இதை வியப்பாகவும் திகைப்பாகவும் பார்க்கிறார்கள். 

அல்லது தெரிந்தும் தெரியாதது போல் மக்களை திசை திருப்பி விளையாடுகிறார்கள்.

        - துரை. சண்முகம்

https://www.facebook.com/100080904177819/posts/828260806547384/?rdid=IaZPOKAMh2gd6xJu

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு