பேசாப் பொருள் : கல்வித் துறையை சீரழிக்கும் திமுக அரசு

Subbaraj V

பேசாப் பொருள் : கல்வித் துறையை சீரழிக்கும் திமுக அரசு

திமுக அரசு பதவியேற்ற பிறகு, பள்ளிக்கல்வி, உயர்கல்வி...‌ இந்த இரண்டு துறைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்கள் எதுவும் சரியில்லை. கல்வியை காமெடியாக்கி, தரத்தைக் கெடுத்து, தனியார் நிறுவனங்கள் வளம் பெற்று வருகின்றன.

ஆசிரியர்கள் கற்பிக்கும் பணியில் இருந்து அந்நியப்படுத்தப்படுகிறார்கள். ஆசிரியர்களே இல்லாத...‌ தனியார் நிறுவனங்கள் ஆன்லைனில் கல்வி வணிகம் செய்யும் மையங்களாக... அரசுக் கல்விக்கூடங்கள் உருமாறுகின்றன.

அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி கற்கும் மாணவிகளுக்கு  (இப்போது மாணவர்களையும் சேர்த்துள்ளனர்) மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தையும் மறுபரிசீலனை செய்வது நல்லது.  

பணமாக வழங்குவதற்கு பதிலாக, கல்வி சம்பந்தமான உதவிகளைச் செய்யலாம். மடிக்கணினி திட்டம் மிகுந்த பயனுள்ளதாக இருந்தது, நிறுத்தப்பட்டு விட்டது.

அரசுப் பள்ளிகள் பெரும்பாலனவற்றில் சுகாதாரமான குடிதண்ணீர் வசதி, கழிப்பறைகள் கிடையாது. தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் கிடையாது. ஆசிரியர்கள் தங்கள் கைக்காசைப் போட்டு சமாளிக்கும் அவலமான நிலை. அரசு செய்துதர வேண்டிய வசதிகளில் குறைபாடுகள் வெளிப்பட்டால், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் பலிகடா ஆக்கப்படுவார். கல்லூரிகளில் கழிப்பறைகள் உண்டு, ஆனால் தூய்மைப்பணியாளர்கள், காவலர்கள் கிடையாது.  கழிப்பறையை பயன்படுத்தும் மாணவர்களை தண்ணீர் ஊற்றி விட்டு போகச் சொல்லும் பிரின்ஸ்பால் கம்பி எண்ண வேண்டும்.  சாதிய மோதல்களை தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்கும் முதல்வர்கள் மீது பாலியல் வன்கொடுமை, தீண்டாமை வழக்குகள் வரும்.

பள்ளி கல்லூரிகளின் வாசல்கள் கஞ்சா வியாபாரிகளின் வணிக மையங்களாக உள்ளன. கல்விக்கூடங்களின் அருகில் உள்ள பெட்டிக் கடைகளில் சகல போதை வஸ்துகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

தேர்தல் முடிந்து விட்டது.  அடுத்த போர்முனை ஐந்தாண்டுகள் கழித்து தான். எனவே சமூக நலனில் அக்கறை உள்ள இடதுசாரிகள், தயவுசெய்து இப்பிரச்சினையில் தலையிடுவது நல்லது.

Subbaraj V (முகநூலில்)

https://www.facebook.com/share/p/fzTZNEJQ6ofU4g9o/?mibextid=oFDknk

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு