திராவிட மாடலுக்குள் ஆன்மீக அரசியல் சிறப்பாகவே நடந்து கொண்டுள்ளது
தருமர்
பழனியில் முருகன் மாநாடு நடத்திய இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபுவைப் போட்டுத் தாக்குனாங்க!
முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களுக்குத் தெரியாமல் சேகர் பாபு மாநாடு நடத்தி,பகுத்தறிவிற்கு விரோதமான தீர்மானங்கள் போட்டுள்ளார் என்றெல்லாம் சும்மா அடித்துவிடுகிறார்கள் திராவிட மாடல் ஆட்சியின் ஆதரவாளர்கள்.
இவர்களைலெல்லாம் ஆலோசனை செய்யாமல் தன்னிச்சையாக அரசின் செலவில் அர்ஜீன் சம்பத்தோடு சமமாக உட்கார்ந்து முருகனுக்கு மாநாடு நடத்தும் அளவிற்கு அமைச்சர் சேகர்பாபு அம்மாம்பெரிய அப்பாடக்கர் கிடையாது.
அதிகபட்சமாக கலைஞருக்கு அடுத்து இறைநம்பிக்கை தவிர்த்து பேசியது ஆ.ராசாவைத் தவிர திமுகவில் வேறுயாராச்சும் இருக்காங்களா என பூதக்கண்ணாடி வச்சு தேடினாலும் கிடைக்க வாய்ப்பில்லை.
மேலும் இந்தியா ஒரு ஆன்மீக கதைகளை கொண்டாடும் நாடு தான்.குறிப்பாக தமிழ்நாட்டை ஆன்மீக பூமியாகவே மன்னர்களைக் கொண்டு ஆரியம் கட்டியமைத்துள்ளது.
திராவிட மாடலுக்குள் *ஆன்மீக அரசியல்* சிறப்பாகவே நடந்து கொண்டுள்ளது.
பெரியார் மண் என்பதெல்லாம் கருப்பு, நீலம், சிவப்பு நிறங்களை வைத்து மேல்பூச்சு பூசி உழைக்கும் மக்களுக்கு பட்டை நாமம் போடுவதற்கு தான்.
அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சியின் சனாதன ஆதரவு,சமஸ்கிரதம்/இந்தி திணிப்பு,உலகமய கொள்கை, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எதிரான பல போராட்டங்கள் நடந்தது.
தற்போதைய திராவிட மாடல் அரசு மறைமுகமாக அல்ல வெளிப்படையாகவே உழைக்கும் மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு எதிராக,கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக (ஆன்மீக அரசியலை) செயல்படுகிறது.
எதிர்க்க வேண்டிய நாம் பாசிச பாஜக புகுந்துவிடுமேன்னு ......அரசை விட்டுவிட்டு சிக்கும் சில தனிநபர்களைப் போட்டு பொழந்து கொண்டுள்ளோம்.
தருமர்
https://www.facebook.com/share/p/TaYjCB8MkvwgAQUe/?mibextid=oFDknk
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு