ஈ.வெ.ரா. வை விமர்சிக்கவே கூடாதா?

SP முத்து

ஈ.வெ.ரா. வை விமர்சிக்கவே கூடாதா?

ஈ.வெ.ரா செய்த சீர்திருத்தம் என்ன? மக்கள் பணியில் இருந்த ஈ.வெ.ரா அக்காலத்தில் 100 கோடி சொத்து சேர்த்தது எப்படி? இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இந்தியை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது வன்மத்தை கக்கியது எதனால்? 

கிழமணத்தை ஊர் ஊராக எதிர்த்த திராவிடர் இயக்கத்தினரின் தலைவர் ஈ.வெ.ரா கிழமணம் புரிந்தது எதற்காக?
தாழ்த்தப்பட்ட மக்களை குடிசையில் வைத்து எரித்து கொன்ற பண்ணையாளர்களுக்கு எதிராக எதுவும் பேசாமல் கம்யூனிஸ்ட்கட்சியை தடை செய்ய சொன்னது எதற்காக?

இந்தியர்களுக்கு நாட்டை ஆளும் தகுதியில்லை அதனால் இங்கிலாந்தில் இருந்து கொண்டு தமிழ்நாட்டை வெள்ளையன் ஆள வேண்டும் என்பதுதான் சுயமரியாதை கொண்ட ஒரு நபரின் பேச்சா? 

இதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு பாரதியை பற்றி பேசலாம் . ஏனென்றால் மேற்சொன்ன எந்த இழிவான செயலையும் பாரதி பேசவில்லை செய்யவில்லை.

இன்னும் எத்தனை காலம் தான் ஈ.வெ.ராவும் அம்பேத்கரும் சமூக சீர்திருத்தவாதி என்று நம்பிக்கொண்டிருப்பார்களோ? இந்த முற்போக்கு வட்டாரத்தை சேர்ந்தவர்கள்.

ஈ.வெ.ரா சமூக சீர்திருத்தமாக எதையும் செய்யவில்லை அதற்கான எந்த அமைப்பையும் அவர் தோற்றுவிக்கவும் இல்லை RSS எப்படி ஆங்கிலேயன் ஆட்சி அகலாமல் இருக்க மதவாதத்தை தோற்றுவித்ததோ? அதே போல் இனவாதத்தை தோற்றுவித்த ஒரு இயக்கம் தான் ஈ.வெ.ரா வின் பல பேர் பெற்ற அந்த இயக்கமும் ஆனால் நீதிக்கட்சி ஆட்சியில் அமர்ந்த காரணத்தால் அப்போது இருந்த காலனிய முறைக்கு ஏற்றவாறு செயல்பட்டது அதன் தாசராக ஈ.வெ.ராமசாமி இருந்தார்.

ஈ.வெ.ராவை ஒப்பிடும் போது அம்பேத்கர் சற்று நேர்மையானவர்தான் காரணம் அவர் தன்னை எங்குமே முற்போக்காளர் சீர்திருத்தவாதியாக காட்டிக்கொள்ளவில்லை அவர் அப்பட்டமான பிற்போக்கு தன்மை கொண்டவர் என்பதை அவரின் புத்தகங்களை படிக்கும் எவர் ஒருவருக்கும் எளிதாக புரியும்.

அவரின் புத்தகங்களை படிக்காதவர்களையும் அவர் தலித் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி என்றும் ஒரு கட்டமைப்பை உருவாக்கிதான் அவரை நாடு முழுக்க ஒரு அடையாள அரசியலாக கொண்டு சேர்த்துள்ளது இந்திய ஆளும் வர்க்கம்.

ஈ.வெ.ரா பற்றி ம.ஜ.இக சார்பாக விமர்சன ரீதியாக வெளியிடப்பட்டுள்ள நூலுக்கு எதிராக விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது.

எந்த நூலையும் விமர்சிக்கலாம் அதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது ஆனால் ஈ.வெ.ரா வாழ்ந்த காலத்தில் அவரின் கருத்துக்களை வைத்து அவரை விமர்சிக்கலாமா? என்ற தொணியில் அந்த விமர்சனம் உள்ளது ஏன் ஈ.வெ.ரா என்ன மன்னராட்சி காலத்திலா வாழந்தார் ? அவர் வாழ்ந்த காலத்தில் வ.உ.சி வாழ்ந்தார் , பாரதி வாழ்ந்தார் பகத்சிங் வாழ்ந்தார்  ஜீவானந்தம் வாழ்ந்தார் சிங்காரவேலர் வாழ்ந்தார் இவர்களெல்லாம் நிலபிரபுத்துவ கொடுங்கோன்மையையும் சாதிய ஏற்றத்தாழ்வையும் ஆங்கிலேய ஏகாதிபத்திய கொடுங்கோன்மையையும் எதிர்த்தார்கள் உடமைகளை உறவுகளை உயிரை என அனைத்தையும் இழந்தனர் 

அதே காலத்தில் தான் ஈ.வெ.ரா லட்சாதிபதியாக வலம் வந்து கொண்டிருந்தார் வெளிநாட்டு சுற்றுப்பயணம் கோடியில் சொத்துக்கள் அதை காப்பாற்ற கிழமணம் என்று அத்துணையையும் செய்து கொண்டார்.

இது எதையும் விமர்சிக்க கூடாது இல்லையா? நாங்களும் இந்த கருமம் பிடித்த எதையும் விமர்சிக்கவோ? மறுவாசிப்பு செய்யவோ? கூட விரும்பவில்லை அவரை கொண்டுவந்து தமிழ்நாட்டு மக்களின் தலையில் ஈ.வெ.ராயிஸ்ட்களும் அவர்களின் தொங்குசதைகளாக மாறிப்போன முன்னால் கம்யூனிஸ்ட்களும் கட்டாத வரை.

தமிழகமே பெரியார் மண் என்று சொல்லும் போதுதான் அவரின் உண்மைகளை அம்பலப்படுத்த வேண்டியுள்ளது உடனே கதறிக்கொண்டு ஓடி வந்தால் என்ன செய்ய முடியும்?

தமிழகம் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் ரத்தத்தாலும் வியர்வையாலும் உயிர் கொண்ட மண் அது ஆங்கிலேயரின் காலை நக்குவது தவறில்லை என்று சொன்ன அற்ப மனிதரின் மண் இல்லை.

SP முத்து

https://www.facebook.com/share/1BFg5Cryt3/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு