தேர்தல் வாக்குறுதிகள் முழுவதையும் நிறைவேற்றி விட்டதாக ஏமாற்றும் திமுக அரசை கண்டித்து
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
பத்திரிகை செய்தி
----------------------------------------------------------
*தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்*
*பதிவு எண் :- 133 /2021*
*மாநில மையம்...*
*No3 (G1)கிருஷ்ணப்பர் தெரு, சேப்பாக்கம், சென்னை - 5*
----------------------------------------------------------
*"100% தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு விட்டதாக" உண்மைக்கு மாறாக மாண்புமிகு தமிழக முதல்வர் அறிவித்ததைக் கண்டித்து....*
______________________________________
மாநிலம் முழுவதும்
*கண்டன ஆர்ப்பாட்டம்*
______________________________________
*நாள்:* 21-9-23
வியாழக்கிழமை
*தமிழக அரசே..!*
*சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிப் படி அரசு ஊழியர்கள் தொடர்பாக வழங்கப்பட்ட கீழ்க்கண்ட வாக்குறுதிகள் உள்ளிட்டு அனைத்து வாக்குறுதிகளையும் உடனடியாக நிறைவேற்றிடுக...*
*309.* புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும்
*313.* சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம் பணிக்கொடை வழங்கப்படும்.
*308.* 70 வயது நிறைவு செய்தவர்களுக்கு 10%., 80 வயது நிறைவு செய்தவர்களுக்கு மேலும் 10% ஒய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும்.
*310.* நிர்வாகத் தீர்ப்பாயம் அமைக்கப்படும்., தலைமைச் செயலாளர் / துறைச் செயலாளர் / துறைத் தலைவர்கள் தலைமையில் கூட்டு ஆலோசனைக் குழுக்கள் மீண்டும் அமைக்கப்படும்.
*318.* மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் மருத்துவச் செலவு (ரூ.5 லட்சத்திற்கு மேல் ) வரம்பு உயர்த்தப்படும்., அனைத்து வகையான மருத்துவச் செலவினங்களும் அடங்கும் வகையில் காப்பீட்டுத் திட்டம் மாற்றியமைக்கப்படும்.
*315.* அதிமுக அரசால் பணி நீக்கம் செய்யப்பட்டு இறந்த மக்கள் நலப் பணியாளர் வாரிசுக்கு அரசு வேலையும், குடும்ப நிவாரண நிதியாக ரூ.5 லட்சமும் வழங்கப்படும்.
*317.* கதர் கிராம தொழில் வாரிய தொழிலாளர்கள், கொசு ஒழிப்பு பரிசோதகர்கள், விதை சுத்தகரிப்பு தொழிலாளர்கள் பணி மற்றும் ஊதியம் தொடர்பான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
*153.* 10 ஆண்டு பணி முடித்த எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்ட ஊழியர்கள், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி பராமரிப்பு ஊழியர்கள் உள்ளிட்ட அரசுத் துறையில் ஒப்பந்த, தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும்.
*154.* போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது அதிமுக அரசால் போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்.
*187.* அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு புதிய நியமனம் நடைபெறும்.
*188.* நீர் நிலைகளை பாதுகாக்க 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 75,000 இளைஞர்கள் பணி அமர்த்தப்படுவார்கள்.
*282.* தூய்மை பணியாளர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும்.
*283.* பணியில் இருக்கும் போது இறந்த தூய்மை பணியாளர் வாரிசுகளுக்கு கல்வித் தகுதி அடிப்படையில்.. கருணை அடிப்படையிலான பணி வழங்கப்படும்.
*285.* தூய்மைப் பணியாளர் ஊதியம், ஓய்வூதியக் கோரிக்கைள் நிறைவேற்றப்படும்.
*அரசு ஊழியர்களே..!*
*அநீதிக்கு எதிராக முஷ்டி உயர்த்தி முழக்கமிட...*
*ஆர்ப்பரித்து வாரீர்..!*
----------------------------------------------------------
தோழமையுடன்....
சு.தமிழ்ச்செல்வி
*மாநிலத் தலைவர்*
ஜெ.லெட்சுமிநாராயணன்
*பொதுச்செயலாளர்.*
----------------------------------------------------------
- சேரன் வாஞ்சிநாதன்
(முகநூலில்)
Disclaimer: இந்த பகுதி பதிவாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு