தேர்தல் பரப்புரையில் பாதுகாப்பு, ஒழுங்கு படுத்தல் செய்வது காவல்துறையின் பிரதான பணி

சே ரா

தேர்தல் பரப்புரையில் பாதுகாப்பு, ஒழுங்கு படுத்தல் செய்வது காவல்துறையின் பிரதான பணி

டேவிட்சன் தேவாசீர்வாதம் சொன்ன ஒரு விசயத்தை உபிகளும் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டுள்ளார்கள்.

எத்தனை பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு 10000 என தவெக கூறியதாகவும் அந்த எண்ணிக்கை அடிப்படையில் காவல்துறையினர் காவலர்களை பாதுகாப்பிற்கு ஒதுக்கியதாகவும் கூறுகிறார். இதுவும் தவெக செய்த மிகப்பெரும் தவறு என்று கூறுகிறார்கள். அரசும் உபிசும் ஒருமித்த குரலில்.

ஒரு கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டம், போராட்டம்,மாநாடு என்றால் எத்தனை பேர் வருவார்கள் என காவல்துறை கேட்கும். அது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வு.

தேர்தல் பரப்புரை என்பது அப்படி ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வு அல்ல. ஒரு வேல திமுக அதிமுக காசு கொடுத்து கூட்டும் கூட்டத்தை போல் இவ்வளவுதான் வருவார்கள் என அதன் மாவட்ட செயலாளர் உறுதியாக சொல்வதையே வழக்கமாக கேட்டுவருவதால் அப்படி நினைத்திருப்பார்களோ என்னவோ? இது நேற்று SI எக்ஸாம் பாஸ் பன்னி இப்போ ட்ரைனிங்ல இருக்குற போலிஸ் நினைக்கலாம் சரி....தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. ஒரு வேளை தமிழ்நாடு மக்கள் உபிகளை போல் தற்குரிகள் என நினைத்துவிட்டாரா?

தேர்தல் பரப்புரை என்பது மக்களை தேர்தலுக்காக சந்தித்து வாக்கு சேகரிக்க , பேசுவதற்காக கட்சி தலைவர்கள் செல்வது. அங்கு எவ்வளவு மக்கள் வேண்டுமானாலும் கூடுவார்கள். இதனை கணிக்கவும் கண்காணிப்பதும் காவல்துறையின் முக்கியமான வேலைகளில் ஒன்று. 

அதாவது எந்த கட்சி அனுமதி கேட்கிறது? 

அந்த கட்சியில் யார் பிரச்சாரத்திற்கு வருகிறார்கள்?

வரும் நபர் எப்படி பேசக்கூடியவர்?

அவருக்காக எவ்வளவு பேர் கூடுவார்கள?

அவருக்காக எவ்வளவு பேர் கூட்டப்படுவார்கள்?

பிரச்சாரத்திற்கு வருபவர்களின் பழைய பிரச்சார முறை எப்படி இருந்தது? 

மக்களை கவரும் வகையில் பேசுபவரா?

அவரின் பேச்சால் ஆளும் கட்சிக்கு எதாவது பாதிப்போ அல்லது ஆதரவோ ஏற்படுமா?

ஒரு வேளை இந்த இடத்தில் பிரச்சாரம் நடத்தினால் ஏற்படக்கூடிய சாதக பாதகங்கள் என்ன? வேறு இடத்தில் நடத்த அனுமதித்தால் ஏற்படும் சாதக பாதகம் என்ன?

அவருக்கு எதிராக அவர் பிரச்சாரம் செய்யும் இடத்தில் செயல்படும் நபர்கள், கட்சிகள் யார்?

ஒரு வேளை பிரச்சாரம் நடந்தால் அவர்களால் ஏதேனும் ஒரு பிரச்சனை ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுமா?

அப்படி ஏற்பட்டால் நம்மால் அதனை சமாளிக்க தேவையான backups இருக்கிறதா?

அனுமதியை கொடுக்காமால் விட்டு ஒரு வேளை நீதிமன்றம் அனுமதி அளித்தால் அப்போது அதனை எப்படி நடத்த நடவடிக்கை எடுப்பது?

இவை போன்று இன்னும் எத்தனையோ கேள்விகளுக்கு விடை கண்டுபிடித்த பிறகுதான் அனுமதி அளிப்பார்கள். இந்த அனுமதிக்க உளவுத்துறையின் அறிக்கை , Q பிரிவின் அறிக்கை, CID ன் அறிக்கை , மத்திய உளவுப்பிரிவு வழிகாட்டல் என அனைத்திலிருந்தும் தகவல்கள் பெறப்படும், ஆலோசனைப்பெறப்படும். பிறகு அனுமதி அளித்தோ அல்லது மறுத்தோ காவல்துறை அறிவிப்பு கொடுக்கும்.

ஒரு கட்சியோ இயக்கமோ ஒரு இடம் கேட்டால் காவல்துறை அதை கொடுக்கலாமா வேண்டாமா என மேலே அனுமதி அளிப்பதற்கு எப்படியெல்லாம் ஆலோசனை செய்வார்களோ அதே போல்தான் இடம் தேர்வுக்கும். 

இதெல்லாம் டேவிட்சன் தேவாசீர்வாத்திற்கு நன்றாகவே தெரியும்!!!! தெரியாமல் இருந்தால் அவர் அந்த பதவிக்கு தகுதியானவர் இல்லை என்பதே உண்மை.

தகுதியானவர் என்ற கருத்தை நாம் ஏற்று பரிசீலித்து பார்த்தால்?!

நாங்கள் அவர்கள் சொன்ன 10000 பேருன்னு சொன்னதை நம்பி 20 பேருக்கு 1 ஆளுன்னு 500 போலிஸ் போட்டோம் என்பதே அவர்கள் எல்லா ஆய்வுகளையும் செய்துவிட்டு்...அசம்பாவிதப் நடக்கும் என்று தெரிந்தே , கூடும் கூட்டத்தை அறிந்தே அப்படியே விட்டுவிட்டார்கள் என்றே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

ஒரு L&O ADGP இப்படி வந்து 10000 ன்னு சொல்லிட்டு கூடுலா வந்துட்டதால இது விஜயின் தப்புன்னு சொல்றதை வைத்து பார்த்தால்....தமிழ்நாட்டின் சட்டம் & ஒழுங்கு எந்த அளவு தகுதியின்மையால் தரக்குறைவால் உள்ளது என்பது தெளிவாகிறது.

எத்தனை பேர் வந்தாலும் தேர்தல் பரப்புரையில் பாதுகாப்பு, ஒழுங்கு படுத்தல் செய்வது காவல்துறையின் பிரதான பணி.

- சே ரா

https://www.facebook.com/100001614889440/posts/24957549673882184/?rdid=pRD9JbRqvHU36xSC

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு