குற்றவியல் நடைமுறை சட்ட திருத்தம்: திமுக ஆட்சியிலும் தொடரும் பாசிச போக்குகள்
பால முருகன்
தமிழ்நாடு அரசு குற்றவியல் நடைமுறைச் சட்டம் திருத்தம் 2023 விரைவு சட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அனேகமாக இந்த சட்டமன்ற தொடரில் அது சட்டத்திருத்தம் ஆகலாம். அந்த சட்டத்திருத்தம் பெரும் அதிர்ச்சியை தருகிறது. அது பற்றி அனைவரும் விவாதிக்க வேண்டும்.
சாதாரணமாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 167(2) படி பத்து ஆண்டுகளுக்கு கீழ் தண்டனை வழங்கும் வழக்குகளில் 60 நாட்களுக்குள் காவல்துறையினர் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு மேல் தண்டனை தரும் வழக்குகளில் 90 நாட்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கைது செய்யப்பட்டவர் கட்டாயமாக பிணையில் விடுவிக்க வேண்டும். இது விசாரணை சிறைவாசி தொடர்ந்து சிறையில் அடைத்து வைப்பதை தடுக்கும் நடவடிக்கை.
ஆனால் பயங்கரவாத தடுப்பு சட்டமான "தடா" சட்டத்தில் இருந்த சட்டப் பிரிவான கைது செய்யப்பட்டவர் 90 நாட்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் அரசு தரப்பு வேண்டினால் மீண்டும் 90 நாட்கள் விசாரணை நீடித்தது,அதுவரை குற்றம்சாட்டப்பட்ட நபர் பிணையில் விடுவிக்க தேவையில்லை. இதே சட்டப்பிரிவு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் உள்ளது. இது பயங்கரவாத தடுப்பு சட்டம். இந்த பிரிவு தொடர்ந்து தவறாக பயன்படுத்த படுகிறது.
ஆனால் இந்த பிரிவை தமிழக அரசு புதிய சட்ட திருத்தம் மூலம் சாதாரண குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் கொண்டுவருகிறது. காவல்துறையினர் கேட்டுக் கொண்டால் பெரிய வழக்குகளில் 180 நாளும் சாதாரண வழக்கில் 120 நாட்களும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யாமல் சிறையில் வைத்து கொள்ளலாம்.
மேலும் மற்றொரு பயங்கரவாத தடுப்பு சட்டம் பிரிவான பிணை வழங்குவதற்கு முன் குற்றத்தில் குற்றவாளி ஈடுபடவில்லை என நீதிமன்றம் திருப்தி அடையவேண்டும் என்ற பிரிவு ,தற்போது அமர்வு நீதிமன்றம் பிணை வழங்கும் 439 குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவில் சேர்க்கப்பட உள்ளது.
இந்த சட்டத்திருத்தம், சாதாரண சட்டத்தை பயங்கரவாத தடைச் சட்டமாக மாற்றுகிறது. இந்த சட்டத்திருத்தம் தமிழக அரசு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் கொண்டு வரவேண்டிய அவசியம் மற்றும் நியாயம் என்ன? பயங்கரவாத தடைச் சட்டம் பிணையில் விமல் விசாரணை கைதியாக பல ஆண்டுகள் ஒருவரை வைக்க வழி வகுக்கிறது. முதலில் தண்டனை பின்னர் விசாரணை என்பது அதன் நோக்கம். அது இனிய இச் சட்ட திருத்தத்தில் தமிழகத்தில் நிகழலாம்.
சட்டமன்ற தொடரில் இது விவாதிக்க படவேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் இதன் ஆபத்தை உணர்ந்து இச்சட்டத் திருத்ததை கைவிட வேண்டும்.
- Bala Murugan
(முகநூலில்)
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம். கூடுதலாக, கட்டுரையாளரின் பதிவில் கடைசி பத்தியில் இருந்த மாண்புமிகு என்ற வார்த்தையை நீக்கியுள்ளோம். – செந்தளம் செய்திப் பிரிவு