திமுக அரசின் இந்துத்துவக் கல்விக் கொள்கையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த "மானமிகு" தமிழாசிரியர்
தருமர்
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியில் அரசு கொண்டுவரும் மாற்றங்கள் சமூகநீதிக்கு எதிரானதும், தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக இருப்பதாகவும் இப்போக்கினை களைய வேண்டும் என முன்பிருந்த அதிமுக அரசிடம் 2018ல் கூட்டாக அறிக்கை கொடுத்தனர்.
1. பேரா. பிரபா கல்விமணி
2. பேரா. ச. மாடசாமி
3. கண. குறிஞ்சி
4. பேரா. சே. கோச்சடை
5. பெ. மணியரசன்
6. பொழிலன்
7. செ. நடேசன்
8. சீ.தினேஷ்
9. சே. இளையராஜா
10. சா.கிள்ளிவளவன்
11. முனைவர் விஜய் அசோகன்
12. பேரா. சி. ஜோசப்பிரபாகர்
13. சு.மூர்த்தி
14. உமாமகேஸ்வரி
15. சுடரொளி
16. வீ.சிவகாமி
17. க.மகாலட்சுமி கண்ணன்
18. தமிழாசான்
19. செ. சி. நடராஜ்
20. சு.தங்கவேல், அ.இருளப்பன்
21. விழியன்
22. மு. சிவகுருநாதன்
23. ரெ. சிவா
24. க.சரவணன்
25. செ.மணிமாறன்
26. தா. வே. நடராஜன்
27. முனைவர் தி. ராமகிருட்டிணன்
28. க. இரா. சுப்பிரமணியன்
29. சுப்ரபாரதிமணியன் (எழுத்தாளர்-திருப்பூர்)
30. எல். பெர்னாட்
31. ஜெ. சியாம்சுந்தர்
32. அ.சத்தியமாணிக்கம்
33. அமரந்தா
34. இரா. முருகப்பன்
35. எழில் அ. சுப்பிரமணியன் (செயலாளர், தாய்த்தமிழ்க் கல்விப்பணி அறக்கட்டளை, திருப்பூர்)
36. ப. க. அருள்குமார்.
பின்னர் பாசிச பாஜகவை ஒழிக்க ஒன்று சேர்ந்த இந்தியா கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்று திமுக தனித்து ஆட்சி அமைத்திருக்கிறது!
இந்த ஆட்சியினர் பள்ளி மேலாண்மை குழு அமைத்து அரசுப்பள்ளிகளை மேம்படுத்துவோம், நம்பள்ளி நம்பெருமை! என்ற கவர்ச்சியான முழக்கத்தின் கீழ் முந்தைய ஆட்சியாளர்களின் கொள்கையை வேறு பெயர் வைத்து நடைமுறைப்படுத்துகிறார்கள்.
பள்ளி மேலாண்மை குழுவானது கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி ஏற்படுத்தப்பட்டதாகும். 6 முதல் 14 வயது வரை உள்ள அனைவருக்கும் கல்வி வழங்குவதில் இந்த பள்ளி மேலாண்மை குழு என்பது ஒரு மைல் கல் என பேசப்பட்டு வருகிறது. கல்வி உரிமைச் சட்டம் – 2009-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி – ஏப்ரல் 1, 2010-ல் நடைமுறைக்கு வந்தது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை நிர்வகிக்க கூடிய பொறுப்பை பெரும்பான்மையாக பெற்றோர்கள் 15 பேர் (அதாவது 4-ல் 3 பங்கு) ஆசிரியர் 2 பேர் (தலைமை ஆசிரியர் – ஆசிரியர்) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி உறுப்பினர் 2 பேர், கல்வியாளர் ஒருவர் என்ற அடிப்படையில் மொத்தம் 20 பேர் கொண்ட பள்ளி மேலாண்மை குழுவிடம் (அதாவது பள்ளியை அந்த ஊரே பராமரிப்பது) பள்ளியை ஒப்படைத்திருக்கிறது தமிழக அரசு.
அரசுதான் கல்வியை சேவையாகவும், அனைவருக்கும் இலவசமாகவும் வழங்க வேண்டும். இதற்கான நிதியை அரசுதான் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதிலிருந்து ஒதுங்கிக் கொள்ளவே அரசு விரும்புகிறது.
அப்படி ஒதுங்கிக் கொண்டதின் விளைவாகவே பள்ளி மேலாண்மைக்குழு முடிவின்படி மாணவிகளுக்கு மோட்டிவேஷன் வகுப்பெடுக்க மஹாவிஷ்ணு என்ற ஆன்மீக சங்கியை அழைத்து சென்னை அசோக்நகர் பள்ளியில் பேச வைத்துள்ளனர்.
தமிழாசிரியரை ஓடவிட்டதாக அந்தச்சங்கி தன்னோட YouTube சேனலில் வீடியோ வெளியிட்ட பிறகே இந்த விசயம் வெளியில் தெரிந்துள்ளது.
எப்படியோ *மானமிகு* அரசுப்பள்ளி தமிழாசிரியரின் செயலால் அரசுத்துறையின், அமைச்சர்களின் பகுத்தறிவு வேடம் அம்பலப்பட்டுப் போனது.
- தருமர்
https://www.facebook.com/share/p/5ZEXVMsA5PKjTozu/?mibextid=oFDknk
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு