திருப்பரங்குன்றம்: சங்பரிவார கும்பலுக்கு சேவை செய்யும் திராவிட மாடல்

மணி அமுதன். மா.பா

திருப்பரங்குன்றம்: சங்பரிவார கும்பலுக்கு சேவை செய்யும் திராவிட மாடல்

காவல் துறையை  கையாளத் தெரியாத திமுக அரசு - இந்துத்வாவாதிகளை கையாள வக்கற்ற காவல் துறை - நாடகம் போடும் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீத இவர்களால்  நேற்று மதுரையில் இந்துத்வாவாதிகள் ஒன்று கூடினர்..

ஆனால் மதுரை மாவட்ட மக்களுக்கும் நேற்று கூடிய சங்கிகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை...அனைவரும் வெளி மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள்...

இந்த கூட்டம் திடீரென கூட்டப்படவில்லை..ஒரு மாத காலமாக வெளிமாவட்டங்களிலிருந்து 200 க்கும் மேற்பட்ட சங்கிகள் மதுரையில் தங்கி வேலை பார்த்தனர்..  அதையும் மதுரை காவல் துறை கண்டுகொள்ளவில்லை.. 

தண்டோராவுக்கு தடை விதிக்கப்பட்டும் கூட வீதியாக வீதியாக தண்டோரா அடித்து பரப்புரை செய்தனர் அதையும் காவல் துறை கண்டுகொள்ளவில்லை..

தொடர்ந்து 1000 க்கணக்கான பொய் பிரச்சார காணொலிகளை பரப்பினர் அதையும் காவல்துறை கண்டு கொள்ளவில்லை..

4 ந்தேதி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் அறிவித்தவுடன் மதுரையின் முற்போக்கு இயக்கங்கள் இணைந்து 3 ந் தேதியே மத நல்லிணக்க ஆர்ப்பாட்டத்தை நடத்த திட்டமிட்டோம்... 

ஓடி வந்து ஆர்ப்பாட்டத்தை மட்டும் காவல் துறை தடுத்தது.. அதற்கு முந்தைய நாளில் பத்திரிக்கையாளர் சந்திப்பை தடுத்தது.. 144 தடை உத்தரவு போட போகிறோம்,  இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தை அனுமதிக்க மாட்டோம் நீங்களும் செய்யாதீர்கள் என்றதால் ஆர்ப்பாட்டம் நடத்தாமல் மாவட்ட ஆட்சியரை சந்தித்தோம்..

எங்களை மீறி எதுவும் நடக்காதென்று வசனம் பேசினார் மா.ஆட்சியர் சங்கீதா

ஆனால் அன்று மாலையே கூட்டம் போட அனுமதித்தது நீதி மன்றம்

என்றால் நீதி மன்றத்தை தானே கேட்க வேண்டும் என்கிறீர்களா

அரசு வழக்கறிஞர் ஜின்னா RSS ஆளாகவே மாறி வாதிட்டார், பழங்காநத்தத்தில் நடத்தி கொள்ளட்டும் என்றார், 144 தடை இருக்கும் போது ஆர்ப்பாட்டத்தை அனுமதிக்க கூடாது என்று கூட பேசவில்லை...

இது அரசு வழக்கறிஞரின் லட்சணம்..

இந்த தீர்ப்பை அறிந்தே, வெளி மாவட்டங்களிலிருந்து வந்த இந்துத்வாவாதிகள் மாலை வரை இருந்து ஒரு பெரிய கூட்டத்தை நடத்தி விட்டார்கள்...

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறேன் உளவுத் துறையும் காவல் துறையும் திமுக அரசுக்கு எதிராகவே உள்ளது...அரசும் அதைப் பற்றி துளியும் கவலை கொள்வதில்லை

இன்று அவமானப்பட்டு நிற்பது திமுக அரசு..

எப்படி என்றாலும் மதுரை மக்கள் இந்த சங்கிகளை ஏற்கவில்லை என்பது மட்டுமே எங்களுக்கு ஒரு ஆறுதல்..

மத நல்லிணக்க மதுரையை காப்பாற்ற நாங்கள் முடிந்த வரை போராடுகிறோம்..

திராவிட மாடல் அரசு இந்துத்துவாவாதிகளிடம் தோற்றுக் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் யாராவது சொல்லிவிடுங்கள்...

மணி அமுதன். மா.பா (முகநூலில்) 

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. திமுக அரசுக்கு தெரியாமல் நடப்பதாக கூறுவது விமர்சனத்திற்கு உரியது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு