மோடி ஆட்சியில் நடந்துள்ள 10 லட்சம் கோடி வங்கி ஊழல்..
நந்தினி ஆனந்தன்
ஒரு உதாரணம்..
'அனில் அம்பானிக்கு சொந்தமான Alok Textiles' எனும் கம்பெனிக்கு பதினைந்து வங்கிகள் 30 ஆயிரம் கோடி ரூபாய் கடன் கொடுக்கிறார்கள்.
30 ஆயிரம் கோடி ரூபாய் கடனை வாங்கிவிட்டு அனில் அம்பானியின் கம்பெனி வட்டியும் கட்டாமல், அசலும் கட்டாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. கேட்டால் கம்பெனி நட்டமாகிவிட்டதாக காரணம் சொல்கிறார்கள். இதனால் அனில் அம்பானி வாங்கிய 30,000 கோடி கடனை வாராக்கடனாக வங்கிகள் அறிவிக்கின்றன.
30,000 கோடி கடன் கொடுத்த வங்கிகள் NCLT ( National Company Law Tribunal) என்ற தீர்ப்பாயத்திடம் போய் அனில் அம்பானியின் நிறுவனம் கடன் வாங்கி விட்டு திருப்பி கட்டாமல் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்களென புகார் கொடுக்கிறார்கள்....
NCLT யிடம் Alok Textiles திவாலாகி விட்டதாகவும் கடனை கட்ட முடியாது எனவும் அனில் அம்பானி தெரிவிக்கிறார். இதை ஏற்று இந்த கம்பெனியை திவால் என NCLT அறிவிக்கிறது.
Alok Textiles கம்பெனியை ஏலத்தில் விட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து, கடனை கட்டலாம் என்று ஏலத்தை நடத்துகிறார்கள். அந்த ஏலத்தில் முகேஷ் அம்பானி 30 ஆயிரம் கோடி கடன் உள்ள அனில் அம்பானியின் இக்கம்பெனியை 5000 கோடிக்கு வாங்கிக் கொள்ள முன்வருகிறார்.
NCLT எல்லா 'பேங்க்' ஆட்களையும் கூப்பிட்டு Alok Textiles கம்பெனியை 5000 கோடிக்கு முகேஷ அம்பானிக்கு கொடுத்து விடலாமா? எனக் கேட்டு ஓட்டெடுப்பு நடத்துகிறது.
ஓட்டுப்பதிவில் குறைந்தது 75 சதவீதம் ஆதரவு இருந்தால் தான் முடிவெடுக்க முடியும்.ஆனால் கிடைத்தது என்னவோ 71 சதவீத ஆதரவுதான். அதனால் 5000 கோடிக்கு முகேஷ் அம்பானிக்கு Alok Textiles ஐ மாற்ற முடியவில்லை. இந்நிலையில் 75 சதவீத ஆதரவெல்லாம் தேவையில்லை.66 சதவீதமே போதும் என்று என்று மோடி அரசு விதிகளை மாற்றுகிறது. இதனால் 5000 கோடிக்கு அந்தக் 'கம்பெனியை' முகேஷ் அம்பானி வாங்கி விட்டார்.
30 ஆயிரம் கோடி கடன் வாங்கினவனும்,
(அனில் அம்பானி) 5000 கோடி கொடுத்து அந்த கடனை அடைத்தவனும்
(முகேஷ் அம்பானி) அம்பானி குடும்ப வாரிசுகள். (தொழில் நட்டமாகியதால் வங்கி கடனை கட்ட முடியவில்லை என திவால் நோட்டீல் கொடுத்த அனில் அம்பானி வெளி நாடுகளில் சொத்துகளை குவித்துள்ள விவகாரம் அம்பலமாகியுள்ளது)
_______________
https://tamil.indianexpress.com/india/black-money-act-order-against-anil-ambani-463462/
__________________
ஆக மொத்தம் 25000 கோடி மக்கள் பணம் மோடியின் துணையோடு அம்பானி குடும்பத்தால் கொள்ளையடிக்கப்பட்டு விட்டது.
முகேஷ் அன்பானி கொடுத்த "5000 கோடியை கடன் கொடுத்த பதினைந்து வங்கிகளும் சண்டை போடாமல் பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். 25000 கோடி ரூபாயை காந்தி கணக்கில் எழுதுங்கள்" என NCLT முடிவை அறிவித்துள்ளது.
அதாவது 30,000 கோடி கடனில் (16.67% மட்டுமே) 5000 கோடி திருப்பி வங்கிகளுக்கு சென்றுள்ளது.. 83.33% மக்கள் பணம் பாஜக-அம்பானி குடும்பத்தாரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது..
(உதாரணமாக 1 கோடி கடனில் 16.67 லட்சம் மட்டுமே வங்கிகளுக்கு திரும்ப வசூல் ஆகியுள்ளது... மீதமுள்ள 83.33 லட்சம் வங்கிகளுக்கு நட்டம்..)
மோடி ஆட்சியில் 2014-21 காலகட்டத்தில் மட்டும் இது போல 10.72 லட்சம் கோடி ரூபாய்களை வாராக்கடனாக வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன. இது 2021 டிசம்பர் வரையுள்ள காலத்துக்கு ரிசர்வ் வங்கி கொடுத்துள்ள கணக்கு.
அதற்கு பிறகு உள்ள காலகட்டத்தில் சராசரியாக ஆண்டுக்கு 2 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. (கடைசி ஐந்து நிதி ஆண்டுகளில், 10 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடனை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.) இதில் பல லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது.
_____________
https://m.dinamalar.com/detail.php?id=3193794
________________
வங்கி ஊழலால் ஆதாயமடைந்த மோடிக்கு நெருக்கமான கார்ப்பரேட்டுகள்.. இதற்கு கைமாறாக பாஜக கட்சிக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை கட்சி நிதியாகவும் தேர்தல் நிதியாகவும் அளிக்கின்றன. இந்த பணத்தை வைத்து எதிர்கட்சிகளை உடைப்பது, MLA க்களை விலைக்கு வாங்கி மாநில ஆட்சிகளை முறைகேடாக கைப்பற்றுவது, பொது தேர்தலில் EVM மோசடிகளை செய்து அதிகாரத்தை கைப்பற்றுவது ஆகிய சட்டவிரோத செயல்களை பாசிச பாஜக தொடர்ந்து செய்கிறது.
இந்த ஊழல் அம்பலமாகிவிடக் கூடாது என்பதற்காக வாராக்கடன் தள்ளுபடியால் பலனடைந்தவர்களின் பட்டியலை வெளியிட முடியாது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திமிராக பாராளுமன்றத்திலேயே பேசுகிறார். ரிசர்வ் வங்கி சட்டத்தில் இதற்கு இடமில்லை என்கிறார். சாமானியர்கள் கடன் வாங்கி கட்டவில்லை என்றால் பத்திரிக்கைகளில் போட்டு அசிங்கப்படுத்தி ஜப்தி நடவடிக்கை எடுக்கும் வங்கிகள் கார்ப்பரேட்டுகளின்
கடன் விபரங்களை மூடி மறைப்பது ஏன்? சாமானிய மக்களுக்கு ஒரு சட்டம்..கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வேறு ஒரு சட்டமா? என்று கேள்வி கேட்டால் பதில் இல்லை..
வாராக்கடன் தள்ளுபடி ஊழலால் வங்கிகளுக்கு ஏற்படும் நட்டத்தை ஈடுகட்டுவதற்காக வங்கிகள் கடன்களுக்கான வட்டியை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. மேலும் அபராத வட்டி, சேவை கட்டணம், குறைந்த பட்ச இருப்பு தொகை (Minimum Balance) இல்லை என்பதற்கான அபராதம், ATM பயன்பாட்டு கட்டணம் என பல விதங்களில் கோடிக்கணக்கான மக்களிடம் இருந்து பணம் பிடுங்குகின்றன.
விவசாய கடன்,கல்விக்கடன், சிறுதொழில் கடன் இவற்றையெல்லாம் கறாராக வசூல் செய்யும் வங்கிகள் மோடி அரசின் அரசியல் அழுத்தம் காரணமாக கார்ப்பரேட் கொள்ளையர்களின் பல லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்கின்றன.
மோடி ஆட்சியில் நடந்துள்ள வாராக்கடன் தள்ளுபடி ஊழல் தான் இந்தியாவில் இதுவரை நடந்துள்ள ஊழல்களிலேயே மிகப்பெரிய ஊழலாகும். பாசிச ஆட்சியின் நெருக்கடிக்கு பயந்து எதிர்கட்சிகள் இந்த ஊழலைப் பற்றி பேச மறுக்கின்றன. ஊடகங்களும் இவ்வளவு பெரிய ஊழலை மூடி மறைக்கின்றன.
எதிர்கட்சிகளை ஊழல் கட்சிகள் என்று சொல்லும் பாஜக கும்பல் தாங்கள் உத்தமர்கள் போல நடித்து நாட்டு மக்களை ஏமாற்றி வருகிறது.
பாசிச மோடி ஆட்சியின் 10 லட்சம் கோடி வங்கி ஊழலை அம்பலப்படுத்தி இவர்களது முகத்திரையை கிழிப்பதற்காகவே வாராக்கடன் தள்ளுபடி ஊழலுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுகிறோம். இதை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக மக்களிடத்தில் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கிறோம். தொடர் முயற்சிகளால் இது மக்களிடத்தில் பேசு பொருளாக மாறி வருகிறது. இந்த ஊழல் வெளியே தெரிந்து பெரிய விவாதமாகி விடக்கூடாது என்பதற்காக பாஜக ரௌடிகளை ஏவிவிட்டு எங்கள் பிரச்சாரத்தையும் போராட்டங்களையும் முடக்கப் பார்க்கிறது.
திமுக அரசின் காவல்துறை மோடியின் அடியாட்களாக செயல்பட்டு எங்கள் மீது தொடர்ந்து அடக்குமுறையை ஏவுகிறது. இவற்றை சமாளித்து தொடர்ந்து இந்த ஊழலை வெளிக்கொண்டுவர போராடுவோம்.
- நந்தினி ஆனந்தன்
(முகநூலில்)