முதல் போட்டவன்… நோக்கியாவை முன்வைத்து ஒரு விவாதம்!
க.கனகராஜ்
2014ஆம் ஆண்டின் இறுதியில் தமிழ் நாட்டில் நோக்கியா நிறுவனம் மூடப்பட்டது. அது மூடப்பட்டபோது சுமார் 100 கோடி மொபைல் போன்களை உற்பத்தி செய்து விற்றிருந்தது. அந்த நிறுவனம், சிஐடியு போரா டியதால்தான் மூடப்பட்டது என்று சிலர் தெரியாம லும், சிலர் உள்நோக்கத்துடனும் பேசி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் சிறப்பு பொருளாதார மண்ட லத்தில் (SEZ) 2005ல் தொடங்கப்பட்ட அந்த நிறுவனம் 2014ல் மூடப்பட்டது. 2003ம் ஆண்டு சிறப்பு பொருளாதார மண்டலங் கள் (SEZ) உருவாக்கப்பட்டால் என்னென்ன சலுகை கள் தரப்படும் என்று மத்திய சட்டம் ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தது. அதைப் பயன்படுத்திக் கொள்வ தற்காக வந்த நிறுவனம் அது.
வரி ஏய்ப்பு செய்த நோக்கியா
மொபைல் போனில் வளர்ந்து வந்த ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்திற்கு நோக்கியா முதலீடு செய்யாத தால், ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன் படுத்தி வந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, உலகம் முழுவதுமிருந்த மொபைல் போன்கள் தயாரிக்கும் தனது ஆலைகளை நோக்கியா விற்றுவிட்டது. ஆனால், தமிழ்நாட்டிலிருந்த நிறுவனத்தையும் வாங்க முதலில் ஒப்புக்கொண்ட மைக்ரோசாப்ட் நிறுவனம், பின்னர் இதை மட்டும் ஒப்பந்தத்திலிருந்து விலக்கிவிட்டது. அதற்கு அடிப்படையான காரணம் நோக்கியா நிறு வனம் தமிழ்நாடு அரசுக்கு ரூபாய் 2430 கோடி வரி ஏய்ப்பு செய்திருந்தது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந் தது. மற்றொரு பக்கம், ஒன்றிய அரசுக்கு ரூபாய் 22,000 கோடி அளவிற்கு வரி செலுத்தாமல் ஏமாற்றியி ருந்தது. அந்த வழக்கு தில்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது. எனவே, இந்த சுமார் ரூ.25000 கோடி வரி பாக்கி காரணமாகவே மைக்ரோசாப்ட் நிறு வனம், நோக்கியாவின் தமிழ்நாடு ஆலையை வாங்க வில்லை. அதாவது, நோக்கியா நிறுவனத்தின் மீது திருட்டு வழக்கு அல்லது ஏமாற்று வழக்கு இருந்ததால் மைக்ரோசாப்ட் வாங்கவில்லை. அதனால் வேறு வழியின்றி நோக்கியா நிறுவனம் மூடப்பட்டது. தொழிலாளர் பிரச்சனையால் மூடப்பட்டது என்று ஒன்றிய அரசோ, நோக்கியாவோ, மைக்ரோசாப் ட்டோ, தமிழ்நாடு அரசோ, தமிழ்நாடு தொழிலாளர் துறையோ சொல்லவில்லை. ஆனால், இந்த உண் மையை மறைத்து இப்போது சிலர் அப்படியொரு புளுகுமூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார்கள். இது ஒருபுறமிருக்க, இன்னொரு கேள்வியை சில ‘நலன் விரும்பிகள்’ விதைத்துக் கொண்டு அலைகி றார்கள். நூற்றுக்கணக்கான கோடிகளை முதலீடு செய்கிறவன் ‘சட்டம் பேசலாம்’; அதாவது, சட்டத்தை அமல்படுத்த முடியாது என்று சட்டம் பேசலாம்; கூலிக்கு வேலைக்கு போனவர் சட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்று சட்டம் பேசலாமா? என்று கேட்கிறார்கள். இது ஒரு நியாயமான வாதம் என்பது போல பலருக்கும் தோன்றலாம் மூலதனம் போட்ட வன் சட்டத்தை மீறுவேன் என்று ‘சட்டம் பேசாமல்’ வேறு எப்படி இருப்பான் என்றெல்லாம் தோன்றும். எனவே, நோக்கியா எவ்வளவு முதலீடு போட்டது? அந்தப் பணம் யாருடைய பணம்? என்ற கேள்விக்கு விடை காண வேண்டியுள்ளது.
நோக்கியா முதலீடு போட்டதா?
நோக்கியா நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் தேதி போடப்படுகிறது. 2வது புரிந்துணர்வு ஒப்பந்தம் அதே ஆண்டு ஜூலை மாதம் 18ம் தேதி போடப்படுகிறது. இந்த இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி, நோக்கியா நிறுவனம் எவ்வளவு முதலீடு செய்கிறதோ அந்தப் பணத்தை தமிழ்நாடு அரசாங்கம் நோக்கியா நிறுவனத்திற்கு திரும்பக் கொடுத்துவிடும். எப்படி கொடுக்கும் என்றால், அது உற்பத்தி செய்கிற பொருட்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும்; அதற்கு வரி கிடையாது. ஆனால், இந்தியாவிற்குள் விற்றால் இரண்டு வகையான வரி விதிக்கப்படும். தமிழ்நாட்டிற்குள் விற்றால் மதிப்புக்கூட்டல் வரி, வேறு இந்திய மாநிலங்களில் விற்றால் மத்திய விற்பனை வரி. இதில் மதிப்புக்கூட்டல் வரியை தமிழ் நாட்டிலேயே விற்கப்படுவதால் தமிழ்நாடு அரசாங் கம் கணக்கில் வைத்து திரும்பக் கொடுக்கும். வேறு இந்திய மாநிலங்களில் விற்றால் அந்த மாநிலத்தில் மத்திய விற்பனை வரி எவ்வளவு வசூலிக்கப்பட்டதோ அவற்றை கணக்கு பார்த்து தமிழ்நாடு அரசாங்கம் நோக்கியா நிறுவனத்திற்கு கொடுத்துவிடும். இப்படி கொடுப்பது அந்த நிறுவனம் எவ்வளவு முதலீடு செய்கிறதோ அதற்கு இணையான தொகையாக இருக்கும். மேலும், ஆரம்ப முதலீட்டு தொகையோடு, அடுத்த மூன்றாண்டுகளில் செய்யப்படும் முதலீடும் இந்த கணக்கில் வரும்.
மாப்ள அவருதான்... ஆனால், சட்டை என்னோடது!
நோக்கியா 2005ம் ஆண்டில் ரூ.300 கோடியும், 2007ம் ஆண்டு ரூ.338 கோடியும் முதலீடு செய்தது. இந்த தொகை முழுவதையும் தமிழ்நாடு அரசாங்கம் நோக்கியா நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டது. அது தான் புரிந்துணர்வு ஒப்பந்தம். அதாவது மதிப்புக் கூட்டல் வரி தமிழ்நாட்டில் வசூலிக்கப்பட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு செலவழிக்கப்பட வேண்டிய தொகை. மத்திய விற்பனை வரியை திருப்பிக் கொடுத்தது என்பது வேறு வகைகளில் - அதாவது, வீட்டு வரி, சொத்து வரி, தண்ணீர் வரி என்று தமிழ்நாட்டு மக்களிடம் வசூ லிக்கப்பட்ட தொகையை தமிழ்நாட்டு மக்களுக்கு செல வழிக்காமல் நோக்கியாவிற்கு கொடுப்பது. அதாவது, முதலில் மூலதனம் போட்டது நோக்கியாதான். ஆனால், தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்து முழுவதும் நோக்கியாவிற்கு கொடுக்கப்பட்ட பிறகு உண்மையில் அந்த நிறுவனம் தமிழ்நாட்டு மக்க ளுக்கு அதாவது தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான தாக மாறியிருக்க வேண்டும். மாறாக, அது நோக்கி யாவின் நிறுவனமாகவே இருந்தது. காரணம் தமிழ்நாடு அரசாங்கம் நோக்கியாவுடன் போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம். ‘முதல் போட்டவன்’ என்று முக்கி முக்கி கூப்பாடு போடும் ‘நடுநிலை’ ஊடகவியலாளர்கள், தமிழ்நாட்டு நலம் விரும்பிகள், அப்பாவி இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான அம்சம் இது. இது மட்டுமே அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகை அல்ல.
நிலம் கொடுத்தது யார்?
அவர்களுக்கு 211 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசாங்கம் அந்த நிலத்தை விவசாயிகளிட மிருந்து கையகப்படுத்தியது. அந்த நிலத்தை வாங்கும் போது 4 லட்சம் ரூபாயிலிருந்து, 14 லட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்டது. இதுபோக நிலம் கையகப் படுத்துதலை எதிர்த்து நீதிமன்றம் சென்ற விவசாயிகளு க்கு 30 சதவிகிதம் கூடுதல் வழங்கப்பட்டது. இத்தனை யும் செய்து கொடுத்த பிறகு, முதல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஒரு ஏக்கருக்கு 8 லட்சம் ரூபாய் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், 2வது புரிந்து ணர்வு ஒப்பந்தத்தில் நான்கரை லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டது. இதுபோக, முதல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மூலதனத்தில் மானியம், மின்சார கட்ட ணத்தில் மானியம், தண்ணீர், சாலை உள்ளிட்ட வசதி கள் என்று ஏராளமான சலுகைகள் கொடுக்கப்பட்டது. இவை எல்லாவற்றையும் தாண்டி தொழிற்சாலைகள் சட்டம், தொழிற்சங்க சட்டம் இவற்றையெல்லாம் கேள்விக்குள்ளாக்கும் வகையில் பல்வேறு சரத்துகள் தமிழ்நாடு சிறப்பு பொருளாதார மண்டல சட்டம் 2005 மூலம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
முற்றிலும் சட்ட விரோதமாக...
இரண்டாவது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 1.தொழிற்சாலை மற்றும் தொழிலாளர் சட்டங்கள் சம்பந்தமான அனைத்து அதிகாரங்களும் சிறப்பு பொருளாதார மண்டல ஆணையாளரிடம் கொடுக் கப்பட்டது. 2.வேலை நேரத்தை நிர்வாகம் விரும்பிய படி வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லப்பட்டது. 3. சிறப்பு பொருளாதார மண்டலம் மொத்தமுமே பொதுப் பயன்பாடு என்கிற வகையில் எந்த காரணத்திற் காகவும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடி யாதபடி மாற்றப்பட்டது. 4. பெண்கள் இரவு நேர பணி யில் அமர்த்தப்படக்கூடாது என்பதிலிருந்து இந்த பகுதிக்கு விலக்களிக்கப்பட்டது. இதுபோன்று நிரந்தர வேலைக்கு ஒப்பந்த தொழி லாளர்கள், பயிற்சியாளர்களை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் சட்டத்தை மீறி நோக்கியா நிறுவனத்திற்கு அள்ளி வழங்கப்பட்டது. உண்மையில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் சட்ட விரோதமானது. எனவே தான், புரிந்துணர்வு ஒப்பந்தங் களை வெளியிட வேண்டும் என்கிற கோரிக்கைகளை அரசுகள் ஏற்பதில்லை. இத்தனை சலுகைகள் கொடுத்த பிறகும், நோக்கியா நிறுவனம் தொழிலாளர்களுக்கு நியாய மான சம்பளத்தை கொடுத்துவிடவில்லை. குறைந்த பட்சம் ரூ.3500, அதிகபட்சம் ரூ.5400 என்பதுதான் அவர்களின் சம்பளமாக இருந்தது. கேட்டால், ரூ.5400 என்பது குறைந்தபட்ச கூலியை விட 70 சதவிகிதம் அதிகம் என்று அவர்கள் சொன்னார்கள்.
நேர்மையற்ற நிறுவனம்
இத்தனைக்குப் பிறகும் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இயங்கும் அமைப்புகள் முதல் பத்து வருட காலத்தில் எந்தவிதமான வருமான வரியும் கட்டவேண்டியதில்லை. ஆனாலும், நோக்கியா நிறு வனம் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. ஏற்று மதிக்காக உற்பத்தி செய்வதாகச் சொல்லி உள்நாட்டி லேயே விற்றது. அதுதவிர, நோக்கியா பின்லாந்து நிறு வனத்திற்கு 57,928 கோடி ரூபாய் அனுப்பியது. இது போக 3500 கோடி ரூபாய் ராயல்ட்டியாக அனுப்பி வைத்தது. சட்டப்படி இதற்கெல்லாம் அவர்கள் வரி செலுத்தி இருக்க வேண்டும். இத்தனைக்கும் அவர்க ளின் விற்று முதல் ரூ.1,50,700 கோடி (2012 வரை). ஆனாலும் வெறும் 5 சதவிகித அளவிற்கு கூட வரி கட்டுவதற்கு அவர்கள் விரும்பவில்லை. மேலும், விவ சாயிகளிடம் இருந்த நிலம் கட்டாயப்படுத்தித்தான் கையகப்படுத்தப்பட்டது என்பதையும் மறந்துவிடக் கூடாது. எனவே, ‘முதல் போட்டவன்’ என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற அப்பாவித்தனம் போல வைக்கப்படும் வாதம் மிகப்பெரிய அட்டூழியம் செய்த நோக்கியாவின் குற்றச்செயல்களை மறைக்கும் நோக்கம் கொண்டதாகும்.
முதலீடு என்ற பெயரில்...
முதலீடு செய்கிறோம் என்கிற பெயரில் அவர்கள் தமிழ்நாடு அரசின் கையை முறுக்கி சட்டத்தை வளைத்திருக்கிறார்கள். தொழிலாளர்களின் உரிமை களை காவு வாங்கியிருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு சேர வேண்டிய வரியை நிர்ப்பந்தப்படுத்தி திரும்ப பெற்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்து பெற்ற பணத்தை பிற மாநிலங்க ளில் கட்டிய வரிக்காக தமிழ்நாடு அரசிடமிருந்து பறித்தி ருக்கிறார்கள். தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய அர சுக்கும் செலுத்த வேண்டிய வரியை ஏமாற்றியிருக்கி றார்கள். இத்தனைக்கு பிறகும் அவன் ‘முதல் போட்ட வன்; எனவே அவன் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும்’ என்பது மிகப்பெரிய அடிமை மனோ பாவம். ஆனால், இதை ஒரு மாநில அரசு மட்டும் எதிர்த்து நின்று வெற்றி பெற்றுவிட முடியாது. ஒன்றிய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் ஒன்றிணைந்து இத்த கைய வழிப்பறி போன்ற புரிந்துணர்வு ஒப்பந்த சரத்துக் களை ஏற்க முடியாது என்று சொல்ல வேண்டும். ஒன்றிய அரசின் உதவி இல்லாமல் தொழில்களே உரு வாக முடியாது என்கிற நிலையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். சுருக்கமாக சொன்னால், இத்தகைய கார்ப்பரேட் மூலதனத்தின் காட்டுமிராண்டித்தனமான சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களை கூர்மைப் படுத்த வேண்டும். அப்போது மட்டுமே இதற்கு நிரந்தர மான ஒரு தீர்வை காண முடியும். அதுவரை பன்னாட்டு நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்கிற பெயரில் ஒன்றிய அரசையும், மாநில அரசுகளையும் தனது குடிமக்களுக்கு எதிராக காவல்துறையையும், நிர்வாகத்தையும் ஏவச் செய்யும். நிவாரணங்கள் வேண்டுமானால் பெற முடியுமே தவிர நிரந்தர தீர்வு காண முடியாது.
- க.கனகராஜ்
https://www.facebook.com/share/p/pHka1zaGd9T2EoxC/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு