தமிழகத்தின் உயர் கல்வி துறையின் செயலாளர் கார்த்திக் ஐ.ஏ.எஸ் அவர்களின் நவம்பர் 9 ஆம் தேதி கடிதம், அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது! அதில்;
‘அரசு உதவி பெறும் கல்லூரிகள், தாங்கள் நிகர் நிலை பல்கலைக்கழகமாக மாற்ற விரும்பினால், ‘ஆட்சேபணை இல்லை’ என்ற சான்றிதழை (NOC) அந்த கல்லூரி சார்ந்த பல்கலைக் கழகத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற கல்வித் துறையை கல்லா கட்டுவதற்கு துணிந்து திறந்துவிடும் ஒரு கொள்கை அறிவிப்பை, சட்டமன்றத்தைக் கூட்டி விவாதித்து முடிவு எடுக்கப்படவில்லை! முதல்வர் வெளியிடவில்லை! உயர்கல்வித் துறை அமைச்சர் வெளியிடவில்லை!
ஆக, தமிழ் நாட்டில் அதிகாரிகள் வைத்தது தான் சட்டம்! அவங்க ராஜாங்கம் தான் கொடி கட்டிப் பறக்குது போல!
ஏற்கனவே இங்கு அரசு உதவி பெறும் கல்லூரிகள் பல, கொள்ளையடிக்க அங்கீகாரம் பெற்றவர்கள் போல ஏழை, எளிய மாணவர்களை கசக்கி பிழிகிறார்கள்! இந்த லட்சணத்தில், ”இந்தக் கொள்ளை போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா? நிகர் நிலை பல்கலைக் கழகமாக மாறிக் கொள்ளுங்கள்” என அரசே கூறுகிறதென்றால்..? விக்கித்து நிற்பதுவன்றி வேறொன்றும் தெரியவில்லை!
- சாவித்திரி கண்ணன் (முகநூலில்)
Disclaimer: இந்த பகுதி பதிவரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு