நாங்க என்ன செய்ய முடியும்? அதோ இதோன்னு அதானி இங்கேயும்
துரை சண்முகம்

நாங்க என்ன செய்ய முடியும்?
அதோ இதோன்னு
அதானி இங்கேயும்!
நாங்க என்ன செய்ய முடியும்?
தேசிய நெடுஞ்சாலை அவர்களுடையது.
ஏகலைவன்
கட்டை விரல்
அனிதா..
எல்லாம் சொன்னீர்களே!
நாங்க என்ன செய்ய முடியும்?
அதிகாரம்
ஒன்றிய அரசின் கையில்.
நாங்கள் வந்தால்
மாதாமாதம் மின் கட்டணம்,
மின் கட்டணம்
உயராது என்றீர்களே!
நாங்க என்ன செய்ய முடியும்?
எல்லாம்
மின்சார வாரியம் கையில்.
புதிய பென்ஷன் திட்டம்
கொண்டு வர மாட்டோம் என்றீர்களே!
நாங்க என்ன செய்ய முடியும்?
எல்லாம் மேலிடத்து உத்தரவு.
தூய்மை பணியாளர் நிரந்தரம்
ஊதிய உயர்வு
என்றீர்களே!
நாங்க என்ன செய்ய முடியும்?
எல்லாம் தனியார் மயம்.
பன்னாட்டு கம்பெனிகளில் தொழிலாளர் சங்கம் வைக்க கூட முடியவில்லையே!
நாங்க என்ன செய்ய முடியும்?
உலகமய ஒப்பந்தங்கள் அப்படி.
தொழிலாளர் சட்டங்களை ஒன்றிய அரசு திருத்தது,
நாங்க என்ன செய்ய முடியும்?
புதிய வேளாண் சட்டங்களை
இந்திய அரசு புகுத்தது,
நாங்க என்ன செய்ய முடியும்?
புதிய காவல் சட்டங்களை
ஒன்றிய அரசு தினிக்குது,
நாங்க என்ன செய்ய முடியும்?
புதிய விமான நிலையங்கள் கார்ப்பரேட் திட்டங்கள்
நிலங்களைக் கேட்குது
மூலதனம் நெருக்குது,
நாங்க என்ன செய்ய முடியும்?
இது பெரியார்மண்!
மாடுபிடியில் கூட
ஏன் சாதி வந்து முட்டுது?
நாங்க என்ன பண்ண முடியும்?
இது ரொம்ப நாளா நடக்குது.
எதையுமே செய்ய
அதிகாரம் இல்லாமல்
எதுக்குதான் ஆட்சி நடக்குது?
முதலாளிகளுக்கு என்றால் முடியுது
தொழிலாளர்க்கு என்றால் இடிக்குது
என்னதான் இங்க நடக்குது?
நாங்க என்ன பண்ண முடியும்?
ஏதோ பாசிசம் பூந்துடாம...
என்னது??
நாங்களே
உங்களை பாசிசத்துக்கு பழக்கத்தான்
திராவிட மாடல் உழைக்குது!
- துரை. சண்முகம்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு