முதல்வருக்கு 2026 தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பரிசளிக்க தயார் - அரசு ஊழியர்கள் சங்கம் அறிக்கை
சேரன் வாஞ்சிநாதன்
பத்திரிக்கை செய்தி
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் *தமிழ்ச்செல்வி* மற்றும் பொதுச் செயாலாளர் *க.ஜெயராஜராஜேஸ்வரன்* ஆகியோர் கூட்டாக வெளியிடும் பத்திரிக்கை செய்தி
*தமிழக முதல்வரின் துரோகச் செயலாகவே பார்க்கிறோம்...*
கடந்த காலங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடிய இடத்திற்கெல்லாம் வந்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேணறும். பாலாறும் ஓடும் என்ற வகையில் வாக்குறுதிகளை அள்ளிவிட்ட இன்றைய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வுதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது. ஆனால் வெற்றி பெற்று மூன்றரை ஆண்டுகள் முடிவடைத்தும் இதுவரை கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பது தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.
இவர்கள் ஆட்சிக்கு வந்த மூன்றரை ஆண்டுகளில் 24 மாதகால அகவிலைப்படியை முடக்கிணர்கள் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பெற்று வந்த ஊக்க ஊதிய உயர்வை முடக்கிணர்கள். அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஆண்டாண்டு காலமாக பெற்று வந்த ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை முடக்கிணர்கள் கருணை அடிப்படையிலான பணிநியமனத்தை 25%-லிருந்து 5%-மாக குறைந்ததன் மூலம் கருணை அடிப்படையிலான பணிநியமனத்தையும் முடக்கினார்கள். பல துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கனை நிரப்பாமல் அப்பணியிடங்களை ஒப்படைத்ததற்கான எவ்விதமான அரசாணைகளும் வெளியிடாமல் மௌனமாக பணியிடங்களை மொத்தப் பணியிட எண்ணிக்கையிலிருந்து முடக்கி எதிர்கால இளைஞர்களின் அரசுப் பணி கனவை முடக்கினார்கள்.
இவர்களை ஆட்சிக்கட்டிலில் வைத்து அழகு பார்த்த அரசு ஊழியர்கள். ஆசிரியர்களின் அனைத்து உரிமைகளையும் பறித்தது தான் இவர்களின் மூன்றாண்டு கால சாதனையாக உள்ளது.
கடந்த ஆறு மாதத்திற்கு முன்னர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் திருமண நிகழ்வொன்றில் தேர்தல் வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாகத் தெரிவித்திருந்தார். அதைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி இருந்தோம். தற்போது தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை ஆய்வு கூட்டத்தில் தமிழக முதல்வர் நிதிராராத கோரிக்கைகளை மட்டுமே நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளதாக தகவல் வருகிறது. புதிய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட நிதிசார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளதன் மூலம் அரசுஊழியர்கள் ஆசிரியர்களுக்கு துரோகம் இழைத்துள்ளார். இதை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
உண்மையிலேயே நிதி நிலை மோசமாக உள்ளது என்றால், நிதி நிலை சரியாகும் வரை எங்ளுக்கு ஊதியம் வேண்டாம் என்று மாண்புமிகு தமிழக முதல்வரும், அவரின் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் சகாக்களும் அறிவிப்பார்களா?* நிதிநிலை சரியாகும். வரை எங்களுக்கான ஓய்வூதியம் வேண்டாம் என்று முன்னான் சட்ட மன்ற உறுப்பினர்கள் தெரிவிப்பார்களா? நிதி நிலை மோசம் என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் இந்திய ஆட்சிப் பணியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் உயர் அலுவலர்கள் தங்கள் ஊதியத்திலிருந்து 10% விட்டுக் கொடுப்பார்களா? என்ற கேள்வியை முன்வைக்க விழைகிறோம்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட சிபிஎஸ் சந்தா தொகை தமிழக அரசால் தவறுதலாக கையாளப்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற பகிரங்க குற்றச்சாட்டை முன்வைக்கின்றோம். போக்குவரத்துத் துறை ஊழியர்கள் எப்படி தற்போது ஓய்வூதியப் பலன்கள் எதும் கிடைக்காமல் நடுத்தெருவில் விடப்பட்டார்களோ. அதே நிலைமை நான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் வரப்போகிறது. இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. எதிர்கட்சித் தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் சந்தித்துப் பேசுவார் என்றால் 2026-இல் அதை அவருக்கு பரிசளிக்க அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் இருக்கிறோம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம். 10.11.2024-இல் எங்களது மாநில செயற்குழு கரூரில் நடைபெற உள்ளது. அதில் தீவிரமான போராட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக விவாதித்து அறிவிக்க உள்ளோம்.
நன்மதிப்புக்களுடன்
சு.தமிழ்செல்வி, மாநிலத் தலைவர், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்.
- சேரன் வாஞ்சிநாதன் (முகநூலில்)
Disclaimer: இந்தப் பகுதி சங்கத்தின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு