உண்மையில் இந்தத் தேர்தல் எப்படிப்பட்டது ? யாருக்கானது ?
Chandran Dhamodaran
கோடை வெய்யிலை விட தீவிரமாக தீப்பிடிக்கத் துவங்கியிருக்கிறது தமிழ்நாட்டு தேர்தல் களம்.
அதன் விளைவாக முகநூலும் கொதிக்கிறது.
எந்தக் கட்சி எத்தனை இடங்கள் பிடிக்கும்,
எத்தனை சதவிகித வாக்குகள் வாங்கும்,
எந்த தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள்
என்பது வரை பல பக்கங்களுக்கு எழுதுவதை பார்க்க முடிகிறது.
நல்ல விசயம்தான்.
ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னால் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஆளும் பா ஜ க மீது வாக்குப்பதிவு இயந்திர விசயத்தில் பாராளுமன்றத்திற்கு உள்ளும், வெளியிலும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
தேர்தலில் இயந்திரங்களால் மோசடி செய்யப்பட்டு வெற்றி பெற்றதை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினார்.
இதை மற்ற எதிர்க்கட்சிகளும் ஏற்று ஆளும் அரசுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்தினர்.
இதற்கான அடிப்படையே தேர்தல் ஆணையரை நியமிக்கும் அதிகாரத்தையே தங்கள் கையில் எடுத்துக் கொண்ட சட்டத்திருத்தம்தான் என்பது மோ டி அரசு மீதான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.
இந்தத் தேர்தலில் மேற்குவங்கத்தில் இதுதான் தேர்தலின் மையப்புள்ளி.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல கேரளாவிற்கு வந்த தேர்தல் ஆணையத்தின் அரசு அறிவிப்பில் பா ஜகவின் சீல் வைக்கப்பட்டிருந்தது.
மேற்கண்டவைகளிலிருந்து எதிர்க்கட்சிகள் கூறியபடி வாக்கு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியுமென்பதும், மோடி தலைமையிலான பா ஜக செய்திருக்கிறது,
இன்னும் செய்யும் என்பதுவும் தெள்ளத்தெளிவான உண்மை என்பது நிரூபணமாகிறது.
அப்படியானால் மேலே குறிப்பிட்டபடி எழுதப்படுகிற ரைட்அப் களுக்கு என்ன மதிப்பு இருக்க முடியும்.
ஒருவேளை பா ஜக கூட்டணி அல்லாத திமுக கூட்டணி வெற்றி பெறுமானால்
மேலே சொன்ன குற்றச்சாட்டுகளை நாமே மறுக்கப் போகிறோமா ?
அல்லது தேர்தல் மற்றும் ஜனநாயகத்தை காப்பாற்ற ஆளும் வர்க்கமே எதிர்க்கட்சிகளின் வெற்றியை அனுமதிக்கும் வகையில் தேர்தலில் நடந்து கொள்ளும் என்று அதற்குக் காரணம் சொல்லப் போகிறோமா ,
அப்படிச் சொல்வோமானால்
அது கூட ஆளும் வர்க்கம் தருகிற வாய்ப்புத்தானே தவிர எதிர்க்கட்சிகள் மற்றும் மக்களின் வாக்குகளால் நிகழ்ந்த மாற்றமல்ல என்றுதானே அர்த்தமாகிறது.
அப்படியானால் உண்மையில் இந்தத் தேர்தல் எப்படிப்பட்டது ?
யாருக்கானது ?
யாரால் தீர்மானிக்கப்படுகிறது?
எதை அடிப்படையாக வைத்து நாம் செயல்படுவது ?
தேர்தலில் செலவிடப்படும் பணத்தின் நோக்கமென்ன ?
இந்த அடிப்படையில் நாட்டில் நிலவுகிற ஜனநாயகத்தின் உண்மையான மதிப்பு என்ன ?
நோக்கம் என்ன ?
இதில் இடதுசாரிகளின் பயண திசைவழி என்ன ?
ஆற்றப் போகும் பங்களிப்பென்ன ?
" விடுகதையா இந்த வாழ்க்கை ... "
Chandran Dhamodaran
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு