பீகார் பாங்கிபூர் இடைத்தேர்தலில் பா.ஜ.க படுதோல்வி! மாணவர்கள் இளைஞர்கள் மீதான பாசிச ஒடுக்குமுறையின் எதிரொளி...
செந்தளம் செய்திப்பிரிவு
குஜராத் , மத்திய பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஜூலை 30 ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் இன்று (ஆக. 3) அத்தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
குறிப்பாக பீகார் மாநிலம் பாங்கிபூரில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன் மாநிலங்களவை உறுப்பினராவதற்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த இடைத்தேர்தலில் பாங்கிபூர் தொகுதியில் மிக மிகக்குறைவாக 34% வாக்குகளே பதிவானது.
இந்த பாங்கிபூர் தொகுதி பாஜகவின் கோட்டையாகத் திகழ்கிறது. இத்தொகுதியிலிருந்து போட்டியிட்ட எந்தவொரு பா.ஜ.க வேட்பாளரும் இதுவரை தோல்வி கண்டதில்லை.இந்நிலையில் இன்று நடைபெற்ற இத்தொகுதி வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பா.ஜ.க பெரும் தோல்வி அடைந்துள்ளது.சென்ற சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியடைந்த ஜன் சுராஜ் கட்சியின் பிரசாந்த் கிஷோர் வெற்றியடைந்துள்ளார்.
நீட்தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரியும் டெல்லி ஜந்தர்மந்தரில் மாணவர்கள் இளைஞர்கள் நடத்தியப் போராட்டம் நாடு முழுவதும் பரவியதை தொடர்ந்து, பீகாரிலும் போராட்டம் தீவிரமாக நடைபெற்றது.டெல்லி ஜந்தர்மந்தரில் மாணவர்கள் இளைஞர்கள் மீது பாஜக அரசு நடத்திய தாக்குதல்களையும் தாண்டி, மிகக்கொடூரமாக பிகாரின் பா.ஜ.க அரசு அடக்குமுறையை கையாண்டது.
அதன் பாசிச கொடூரத்தன்மையை குறிப்பிட்டு சொல்வதெனில் டெல்லியில் மாணவர்கள் இளைஞர்களுக்கு எதிராக பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன என்றால், பிகாரில் போராடிய மாணவர்கள் இளைஞர்களுக்கு எதிராக போரில் பயன்படுத்தக்கூடிய ஏகே-47 துப்பாக்கியை பயன்படுத்தியது பிகார் பா.ஜ.க அரசு. பா.ஜவின் இக்கொடிய அடக்குமுறைகள் மக்களிடத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தோல்வியே கண்டிராத பிகார் பாங்கிப்பூர் இடைத்தேர்தலில் பா.ஜ.க தோல்வியடைந்திருப்பது முக்கியமாக பார்க்கப் படுகிறது.
- செந்தளம் செய்திப்பிரிவு