கரப்பான் பூச்சி கட்சியும் ஆளும் வர்க்க தொடர்பும்

இரா. முருகவேள்

கரப்பான் பூச்சி கட்சியும் ஆளும் வர்க்க தொடர்பும்

கபில் சிபில் தான் கரப்பான் பூச்சி கட்சிக்கு சட்ட ஆலோசகராமே. பீஸ் வாங்குவதற்கு பதில் ஒரு கோடி ரூபாய் கரப்பான் பூச்சி கட்சிக்கு நன்கொடை கொடுத்து உள்ளார். கரப்பான் பூச்சி வழக்குகளை அவர்தான் நடத்த உள்ளார். 

கபில் சிபில்  முன்னாள் காங்கிரஸ் காரர். இனி அவர் கரப்பான் பூச்சியில் ஆளும் வர்க்க ஆளாக   இருப்பார். 

கரப்பான் பூச்சி அரசின் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள ஒரு முன்னாள் காங்கிரஸ் காரருடன் இணைந்துள்ளது. அடுத்து வர இருக்கும் UAPA, NSA போன்றவற்றில் இருந்து அது தப்பியாக வேண்டும். எனவே அதற்கு ஆளும் வர்க்க தொடர்புகள் கொண்ட ஆள் வேண்டும்.

இன்னொரு போராட்டத்தை எப்படியாவது தவிர்த்து விட வேண்டும் என்று பதறித் 

கொண்டிருக்கும் பிஜேபி தன் பங்குக்கு ஒரு காங்கிரஸ் காரரைப் பிடித்துள்ளது. நந்தன் நிலகேனி.

பிஜேபி அரசு ஏதாவது வில்லங்கம் செய்து பெரும் பிரச்சினை ஆகிவிடப் போகிறது என்று பயந்து இருந்த அதிகார வர்க்கமும், முதலாளித்துவ அமைப்புகளும் பழம் பெருச்சாளிகளான முன்னாள் மற்றும் இந்நாள் காங்கிரஸ் காரர்கள் பொறுப்பெடுத்து கொண்டதும் நிம்மதி பெருமூச்சு விடுகின்றன.

கபில் சிபில் வேலையை தொடங்கி விட்டார். பிஜேபி அரசு வாக்குறுதியை மீறி போராடிய இளைஞர்கள் மேல் வழக்குகள் போடுகிறது. அதை எதிர்த்து போராடுவதற்கு பதில் சட்டப் போராட்டம் என்று கோர்ட்டுக்கு தள்ளி விட்டு விட்டார். 

எனவே கரப்பான் பூச்சி கட்சி ஆளும் வர்க்க தொடர்பு எல்லைக்குள் வந்து விட்டது. 

கட்டுப்பாடு இல்லாத பீரங்கி போல நினைத்தபடி எல்லாம் நடந்து கொண்டிருந்த பிஜேபி நந்தன் நிலகேனி மூலம் தரைக்குக் கொண்டு வரப் பட்டுள்ளது.

காங்கிரஸ் தனது தொடர்புகள் மூலம் எல்லாத் தரப்பிலும் அரசியல் லீவரேஜ் எனப்படும் அழுத்தம் கொடுக்கும் இடத்தை அடைந்து விட்டது.

எனவே குமுதா ஹேப்பி. அனைவருக்கும் மகிழ்ச்சி. அரசியல் நெருக்கடி ஆளும் வர்க்கத்தால் ஹேண்டில் செய்யப் பட்டுக் கொண்டிருக்கிறது. ( பிஜேபி காப்பாற்றப் படுமா இல்லையா என்று தெரியவில்லை. இப்போதைக்கு ஆளும் வர்க்கத்தின் கவனம் நெருக்கடியை தவிர்ப்பதில் தான் இருக்கிறது ). 

கபில் சிபில் கொண்டாடப் படுவார். பிரகாஷ் ராஜ் போன்றவர்கள் எதுவும் சிக்கா விட்டாலும் கடைசியில் டிராஸ்பார்மர் பின்னால் ஒண்ணுக்கு அடித்ததாகக் கூட கூறப்பட்டு உள்ளே அனுப்பப்பட வாய்ப்பு உள்ளது. 

பியூர் டிப்ள மசி.

பின் குறிப்பு: நாக்பூர் சதி பார்த்தீர்களா? எவ்வளவு திறமை என்று நண்பர்கள் வந்தால் பத்து நிமிடம் கதறி அழுதுவிட்டு அருகே உள்ள சுவரில் முட்டிக் கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை.

இரா. முருகவேள்

https://www.facebook.com/story.php?story_fbid=10216794887140571&id=1714910257&rdid=Fnl99BSN7gUQa7SO

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு