நவம்பர் புரட்சியின் லட்சியங்களை நினைவு கூர்வோம்

Sidhambaram Voc

நவம்பர் புரட்சியின் லட்சியங்களை நினைவு கூர்வோம்

நவம்பர் புரட்சியை நினைவு கூர்வது வெறும் சடங்கு அல்ல. நவம்பர் புரட்சியின் இலட்சியங்களுக்காக நம்மை ஒப்பு கொடுப்பதாகும். அதாவது நவம்பர் புரட்சிக்கு வழிகாட்டிய லெனினியத்தை உயர்த்திப் பிடிப்பதும் லெனினியத்தை நடைமுறைப்படுத்த புரட்சிகர நடைமுறையில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வதுமாகும். 

ஏகாதிபத்தியம் மற்றும் பாட்டாளி வர்க்கப் புரட்சிகர  சகாப்தத்தின்  மார்க்சியமே லெனினியம் என்பதை ஏற்பது ; 

 

ஏகாதிபத்தியங்களின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியையும் தனி நாட்டில் புரட்சி சாத்தியம் என்பதையும் மறுக்கும் டிராட்ஸ்கியத்தை எதிர்ப்பது  ; 

ஜனநாயகப் புரட்சியும் சோசலிசப் புரட்சியும் புரட்சி எனும் ஒரே சங்கிலியின் இரு கரணைகள் என்பதை ஏற்பது ;  

ஜனநாயகப் புரட்சியை ஏகாதிபத்திய எதிர்ப்பு ,  நிலவுடமை எதிர்ப்பு என இரு கட்டங்களாக பிரிப்பதும், நிலவுடமை எதிர்ப்பையும் கூட வெறும்  பார்ப்பனிய எதிர்ப்பாக குறுக்கி பாராளுமன்ற சோசலிசத்தை முன்வைப்பதுமான பிரசந்தா கலைப்புவாதத்தை எதிர்ப்பது ; 

ஸ்தாபன கோட்பாடுகள் குறித்த லெனினியத்தை எற்பது ; 

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் கம்யூனுக்கான அவசியமான  இடைக்கால அரசு வடிவம் என்பதை மறுக்கும் திருத்தல்வாதத்தை எதிர்ப்பது ; 

மாபெரும் லெனினியவாதிகளான ஸ்டாலின்,  மாவோவின் பங்களிப்புகளை மதிப்பது ; 

அரசியல் எழுச்சி, அதன் தொடர்ச்சியாக ஆயுத எழுச்சியின் மூலம் புரட்சியை சாதிப்பது என்பதை மறுத்து பாராளுமன்றவாத சோசலிசத்தை முன்வைக்கும் குருசேவின் திருத்தல்வாதத்தை மறுப்பது ; 

மூன்றுலக கோட்பாட்டை ஏற்று காலனிய நாடுகள் சுதந்திரம் பெற்றுவிட்டதாக கூறும் டெங் திரிபுவாதத்தை எதிர்ப்பது ; 

புதிய காலனியம் குறித்த மாவோவின் வழிகாட்டுதலை மறுத்து காலனியம் முற்றுபெற்றுவிட்டதாக கூறிய குருசேவ் திரிபுவாதத்தை  எதிர்ப்பது ; 

ஏகாதிபத்தியங்களின் மறுபங்கீட்டிற்கான யுத்தம் குறித்த லெனினியத்தை மறுத்து ஏகாதிபத்திய யுத்தங்களில் ஒரு  ஏகாதிபத்திய முகாமை  ஆதரிக்கும் காவுத்ஸ்கியத்தை எதிர்ப்பது ; 

பாசிசம் என்பது கார்ப்பரேட்டுகளின் ஏகபோக சர்வாதிகாரத்திற்கான அரசு வடிவம் ஆகும். ஆகவே பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி அரசு என்பது பாட்டாளி வர்க்க அல்லது மக்கள் ஜனநாயக குடியரசுதானே தவிர பாராளுமன்ற கார்ப்பரேட் எடுபிடி கட்சிகளுடனான  கூட்டுக்  கதம்பம் அல்ல எனும் மூன்றாம் அகிலத்தின் வழிகாட்டுதலை  ஏற்பது ;  

இவைதாம் நவம்பர் புரட்சியின் இலட்சியங்களை நினைவு கூர்வதற்கான உண்மையான அர்த்தம் ஆகும்.

- Sidhambaram Voc

(முகநூலிலிருந்து) 

கட்டுரையாளரின் முகநூல் பக்கத்திற்கு செல்ல கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0Tbxy4wS9KxCBfztV22HcFaqedySLucesWMtyHzRKQPhXYZGV74Mccb7XXgiY6ZJ3l&id=100028720695743&sfnsn=wiwspwa