SIR குளறுபடிகள் - ஆதார் தீர்ப்பு மோசடிகள்

ஷாஜகான்

SIR குளறுபடிகள் - ஆதார் தீர்ப்பு மோசடிகள்

SIR பற்றித் தேடிப் படிக்கப்படிக்க எவ்வளவு தில்லுமுல்லு என்று வியப்பாக இருக்கிறது.

அத்தனையும் விஷம்.

முதலாவதாக, 1960 விதிகளின்படி SIR என்றே ஒன்று கிடையாது!

SR - Summary Revision உண்டு

IR - Intensive Revision உண்டு.

Summary Revision என்பது தேர்தலுக்கு முன்பாக நடத்தப்படுவது

 Intensive Revision என்பது, தேர்தலுக்குத் தொடர்பற்றது, அவ்வப்போது நடத்தப்படுவது.

SIR என்று ஒன்று கிடையவே கிடையாது.

ஆனால், 2003இல் SIR நடத்தப்பட்டது என்று நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.

சரி, அதற்கான ஆதாரங்களைக் காட்டு என்று கேட்டதற்கு, தொலைந்து போய்விட்டது என்று சொல்லியிருக்கிறது.

SIR என்பது புதிதல்ல, 1951க்குப் பிறகு பலமுறை நடந்ததுதான் என்று இப்போதும் சங்கிகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா... அது முழுப்பொய். 

SR அல்லது IR தான் நடத்தப்பட்டுள்ளது.

சரி, அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம். SR - IR இரண்டையும் சேர்த்து SIR ஆக்கியிருக்கிறார்கள், அவ்வளவுதானே ... என்ன பெரிய வித்தியாசம் என்று நினைத்து விடாதீர்கள். 

இதற்கு முந்தைய SR / IR வாக்காளர் பட்டியல் சீரமைப்புப் பணிகளில், பழைய பட்டியலின் அடிப்படையில் முகவரியில் இல்லாதவர்கள் சரிபார்த்து நீக்கப்படுவார்கள், இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்படும், புதியவர்கள் சேர்க்கப்படுவார்கள். எந்தப் பெரிய குழப்பமும் இல்லாமல் இயல்பாக நடக்கும். புதிய வாக்காளரை சேர்ப்பது தேர்தல் ஆணையத்தின் கடமையாக இருந்தது.

ஆனால்,

புதிய வாக்காளராக சேர்வதையும் உங்கள் மீதே சுமத்துவது SIR.

நேரடியாக இல்லாமல் மறைமுகமாக குடியுரிமை மறுப்பையும் செய்வதுதான் SIR. 

இந்தியக் குடிமகனாக இருக்கும் நீங்கள் இந்தியக் குடிமகன்தான் என்று நிரூபிக்கும் தலைவலியையும் உங்கள் மீதே சுமத்துவதுதான் SIR 

SIR என்ற ஒன்று இதுவரை நடந்ததே இல்லை என்பதை மறைக்கத்தான், இப்போதைய படிவத்தில் வேண்டுமென்றே முந்தைய SIR என்ற சொல்லையும், எல்லா இடங்களிலும் அதே போல SIR என்ற சொல்லையும் பயன்படுத்துகிறது தேர்தல் ஆணையம்.

================================================================

SIR விவகாரத்தில், ஆதாரையும் ஓர் ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்லி விட்டது என்று சில மாதங்களுக்கு முன்னால் அடிச்சாண்டா ஆர்டரு என்று சில்லறையை சிதற விட்டோம்.

உண்மையில் ஆதார் என்பதை அடையாளத்துக்கான ஆதாரமாகத்தான் கொள்ளப்படலாமே தவிர, குடியுரிமைக்கான ஆதாரமாகக் கருதப்பட முடியாது என்றுதான் அந்தத் தீர்ப்பின் பொருள்.

SIR-க்காக ஏற்கப்படக்கூடிய 13 ஆவணங்கள் என்பதில், 12ஆவது இடத்தில் உள்ளதை இப்படி எழுதியிருக்கிறது தேர்தல் ஆணையம். 

For Aadhaar, the Commission’s directions issued vide letter No. 23/2025-ERS/Vol.II dated 09.09.2025 (Annexure II) shall appy.

ஆதார் அட்டைக்கு இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கடித எண் 23/2025-ERS/Vol.II நாள் 09.09.2025இல் (இணைப்பு II) வெளியிடப்பட்ட அறிவுரைகள் பொருந்தும்.

இது என்னதான் சொல்கிறது என்று புரியாமல் தேடிப் பார்த்தேன்.

அதாவது, தேர்தல் ஆணையத்தின் 9-9-2025 தேதியிட்ட கடிதத்தின்படி பார்க்க வேண்டும்.

அந்தக் கடிதத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் ஒரு பத்தியை சேர்த்து, ஆதார் ஓர் அடையாள சான்றாகக் கருதப்படலாம், ஆனால் அது குடியுரிமை சானறாகக் கருதப்படாது என்று கூறியிருக்கிறது தேர்தல் ஆணையம்.

<<ஆதார் அட்டைக்கு ஒதுக்கப்பட்ட சட்டப்பூர்வ அந்தஸ்தின்படி, அது குடியுரிமைக்கான சான்றாக இல்லை, எனவே குடியுரிமைக்கான சான்றாக ஏற்றுக்கொள்ளப்படாது என்பதில் எந்த சர்ச்சையும் இல்லை. இருப்பினும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 இன் பிரிவு 23(4) ஐக் கருத்தில் கொண்டு, ஆதார் அட்டை என்பது ஒரு நபரின் அடையாளத்தை நிறுவுவதற்காக பட்டியலிடப்பட்ட ஆவணங்களில் ஒன்றாகும். அதன்படி, பீகார் மாநிலத்தின் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது அல்லது விலக்குவது நோக்கத்திற்காக ஆதார் அட்டையை அடையாளச் சான்றாக ஏற்றுக்கொள்ளுமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் அதன் அதிகாரிகளுக்கும் நாங்கள் அறிவுறுத்துகிறோம். இந்த நோக்கத்திற்காக, ஆதார் அட்டை, அதிகாரிகளால் 12வது ஆவணமாகக் கருதப்படும். இருப்பினும், பிற ஆவணங்களைப் போலவே, ஆதார் அட்டையின் நம்பகத்தன்மையையும் உண்மைத் தன்மையையும் மேலும் ஆதாரம்/ஆவணங்களைத் தேடுவதன் மூலம். சரிபார்க்க அதிகாரிகளுக்கு உரிமை உண்டு. >> 

என்று உச்சநீதிமன்றம் சொல்லியிருப்பதை சுட்டிக்காட்டி,

ஆகவே, <<ஆதார் அட்டையை குடியுரிமைக்கான சான்றாக அல்லாமல் அடையாளச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பயன்படுத்த வேண்டும்.>>

என்றுதான் தேர்தல் ஆணையம்கூறுகிறது.

தேர்தல் ஆணையத்தின் வேலை தேர்தலை நடத்துவதே தவிர, குடியுரிமையை சரிபார்ப்பது அல்ல. அது இந்திய அரசின் பணி, உள்துறை அமைச்சகத்தின் பணி.

ஆனால், இரண்டும் கூட்டுக்களவாணிகளாகச் சேர்ந்து, மிகத் தந்திரமாக இந்த வேலையைச் செய்துள்ளன.

உச்சநீதிமன்றம் வழக்கம்போல, திருவிளையாடலில் “பேசறதெல்லாம் வக்கணையா பேசு, கடைசியில் பாட்டெழுதறதில் கோட்டை விட்டுடு” என்று நாகேஷ் சொல்வது போல, தாம் தூமென்று கேள்விகளை எல்லாம் கேட்டு, தீர்ப்பில் கோட்டை விட்டு விட்டது. தேர்தல் ஆணையம் என்ன நினைத்ததோ அதையேதான் வழங்கியிருக்கிறது.

<<வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது அல்லது விலக்குவது நோக்கத்திற்காக ஆதார் அட்டையை அடையாளச் சான்றாக ஏற்றுக்கொள்ளுமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் அதன் அதிகாரிகளுக்கும் நாங்கள் அறிவுறுத்துகிறோம். >>

சேர்ப்பதற்கு / நீக்குவதற்கு ஆதாரை சான்றாகக் கொள்ளலாம் என்று அறிவுறுத்துவார்களாம், ஆனால் அது ஆதாரம் ஆகாதாம்! 

நாளை உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு வரும்போது திமுக தரப்பு வழக்கறிஞர்கள் இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு “உங்கிட்ட ஃபினிஷிங் சரில்லயப்பா” என்று வாதம் புரிவார்கள் என்று நம்புகிறேன். 

முடிவுரை: அதான் ஆதார் இருக்கே என்று யாரும் அலட்சியமாக இருந்து விடாதீர்கள் - இப்போதைக்கு.

https://www.facebook.com/story.php?story_fbid=25214670348129067&id=100000383483109&rdid=t1o2CXpn14A8JsWv

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு