RSS பயங்கரவாத அமைப்பு இல்லை: திமுகவின் கரசேவை
Sidhambaram Voc
ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்ய தி.மு.க அரசிற்கு அதிகாரம் இல்லை என கழக உடன்பிறப்புகள் தி.மு.க ஆட்சிக்கு காவடி தூக்கி முட்டுக் கொடுத்தனர்.
பி.எப்.ஐ உள்ளிட்ட அமைப்புகளை தடை செய்வதற்கான காரணம் பற்றி மோடி ஆட்சி கூறும்போது, குஜராத், ம.பி , உ..பி போன்ற மாநில அரசுகள் அவ்வமைப்புகள் பற்றி தந்த அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு தடை விதிப்பதாக கூறுகிறது.
மாநில அரசால் ஒரு அமைப்பை தடை செய்ய முடியாமல் இருக்கலாம். ஆனால் மாநில அரசுகளின் ஒத்துழைப்பின்றி அவர்களின் ஆலோசனைகள் இன்றி மத்திய அரசு தடை செய்ய முடியாது என இதன் மூலம் நாம் அறியலாம். புலிகள், மாவோயிஸ்ட்டுகள் மீதான தடையும் அவ்வாறுதான் செயல்படுத்தப்பட்டது.
ஹிட்லருக்கும் முசோலினிக்கும் பிறந்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைப்பை தடை செய்வதற்கான சட்டமன்ற தீர்மானம் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பி நிர்பந்திக்கவோ அல்லது சட்டப் போராட்டம் நடத்தவோ பாஜக ஆட்சியில் இல்லாத மாநில அரசுகள் தயாரில்லை. அதற்கான துணிச்சலும் இல்லை. கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க CPM CPI கட்சிகளின் அமைதி ஊர்வலத்திற்கு கூட அனுமதி தராமல் ஒடுக்கி சங்பரிவாரங்களின் மனங்களை குளிர்விக்கிறது தி மு.க அரசு.
தி.மு.க அரசு RSS பேரணி என்பது வெறும் சட்ட ஒழுங்கு பிரச்சினை என நீதிமன்றத்தில் சொல்கிறது. உயர்நீதி மன்றத்தில் RSS ஒரு பயங்கரவாத அமைப்பு என சொல்ல தி.மு.க அரசிற்கு வக்கில்லை. சொல்லவும் வாய்ப்பில்லை. காரணம் மு.க. ஸ்டாலின் அவர்கள் "RSS ஒரு சமூக கலாச்சார இயக்கம்" என்று சொன்ன கலைஞர் கருணாநிதி அவர்களின் வாரிசு அல்லவா ?
- Sidhambaram Voc
(முகநூல் பக்கத்திலிருந்து)