கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்?
சேரன் வாஞ்சிநாதன்

கேரளாவில் UPS
கேரளா மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்தப்படும் என்று 7.2.25 அன்று நடைபெற்ற கேரளா நிதி நிலை அறிக்கையில் கேரளா நிதி அமைச்சர் K.N. பால கோபால் அறிவிப்பு
படிப்பது இராமயாணம்... இடிப்பது பிள்ளையார் கோவிலா.?
2003 ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டத்தை CPI (M) கட்சி எதிர்த்ததால் 10 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் சட்டமாக்க முடியவில்லை.
திரிபுராவில் CPI(M) கட்சி சட்டமன்றத் தேர்தலில் தோற்று BJP ஆட்சிக்கு வரும் வரை பழைய ஓய்வூதியத் திட்டமே அமுலில் இருந்தது.
1.7.2018 முதல் திரிபுராவில் BJP கட்சி புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்தியது.
மேற்கு வங்காளத்தில் CPI(M) கட்சி ஆட்சியில் இருந்த வரை புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்தவில்லை.
CPI(M) க்கு பின்பு மேற்கு வங்காளத்தில் ஆட்சிக்கு வந்த திரினாமுல் காங்கிரஸ் கட்சி இன்று வரை புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்தவில்லை.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை சட்டமாக்கிய காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான், சட்டீஸ்கர், இமாச்சல் பிரதேச மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்தி உள்ளது.
2016 ல் நடைபெற்ற கேரளா சட்டமன்ற தேர்தலில் CPI(M) கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதியில்...
CPI(M) ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதியத் திட்டம் அமுல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார்கள்.
ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகளாகத் தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை கேரளாவில் அமுல்படுத்தாமல்..
2024 நிதி நிலை அறிக்கையில், ஆந்திரா போன்று உத்திரவாத ஓய்வூதியத் திட்டம் (Assured Pension Scheme) அமுல்படுத்தப்படும் என்று கேரளா CPI(M) அரசு அறிவித்தது.
2024 நிதி நிலை அறிக்கையின்படி கடந்த ஓராண்டாக உத்திரவாத ஓய்வூதியத் திட்டத்தை CPI (M) கேரளா மாநில அரசு அமுல்படுத்தவில்லை.
இந்நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய அரசு அறிவித்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் மோசடி திட்டம் என்று எதிர்ப்பு தெரிவித்த CPI (M) கட்சி...
கேரளாவில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அமுல்படுத்தப்படும் என்று CPI (M) கட்சி தற்போது அறிவித்துள்ளது.
கொள்கை வேறு. ஆட்சி வேறு. இது CPI (M)..ன் நிலைபாடு.!
CPI(M) கட்சி ஆளும் கேரளாவில் UPS திட்டத்தை அமுல்படுத்துவதாக அறிவித்த நிலையில், தமிழ்நாட்டில் CPI(M) வழிகாட்டலில் செயல்படும்...
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், தலைமை செயலக சங்கம் மற்றும் ஜாக்டோ ஜியோ...
UPS திட்டத்தை அறிவித்த திமுக அரசுக்கு எதிராக... உண்மையாக எப்படி போராட்டம் நடத்துவார்கள்.?
CPI( M) வழிகாட்டலில் செயல்படும்...
அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள்...
UPS திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்துவது என்பது...
அரசு ஊழியர்களை, ஆசிரியர்களை ஏமாற்ற நடத்தும் நாடகம் என்பதை புரிந்து கொள்ளவோம்.
எதிரியை எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம்...
ஆனால் ....
சேரன் வாஞ்சிநாதன் (முகநூலில்)
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு