CPS திட்டத்தை நீக்கப்போராடும் அரசு ஊழியர்கள் கைது
இராஜஸ்தான். சத்தீஸ்கர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் புதிய ஓய்வூதிய திட்டம் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையிலும் கூட தொடரும் திமுக அரசின் ஏகாதிபத்திய சேவை
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் சு. தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் ஜெ.லெட்சமி நாராயணன் ஆகியோர் இணைந்து வெளியிடும் பத்திரிகை செய்தி
CPS ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் நேற்று சிவகங்கையிலும் இன்று காலை மதுரையிலும் நீதி கேட்டு நடைபயணம் துவங்கிய அரசு ஊழியர்களை கைது செய்த காவல் துறையை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்
சிபிஎஸ் ஒழிப்பு இயக்க சார்பாக நேற்று (15.11.2022) தமிழகம் முழுவதம் அனைத்து மாவட்டங்களிலும் CPS திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி நீதிகேட்டு நடைபயணம் துவக்கி நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் (14.1.2002) மூன்று குழுக்களாக நடைபயணத்தை துவக்கி அம்மாவட்ட ஊழியர்கள் நடத்தி வருகின்றனர். இன்று (15.11.2022) சிவகங்கை மாவட்டம்: திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவகத்தில் இருந்து இரண்டாம் நாள் நடைபயணத்தை துவக்கிய போது, அந்த அறப்போராட்டத்தில் பங்கேற்ற தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இன்று மதுரை தணக்கன்குளத்தில் 2ஆம் நாள் நடைபயணத்தை துவக்க முற்பட்ட அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு ஹார்விபட்டியில் ஒரு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இராஜஸ்தான். சத்தீஸ்கர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் புதிய ஓய்வூதிய திட்டம் இரத்து செய்யப்பட்டு, ஏற்கனவே 2003 க்கு முன்னர் நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வரும் நிவையில் இன்றைய தமிழக முதல்வரும், அவர் தலைவராக இருந்து வழிநடத்தும் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் காலத்தில் புதிய பென்சன் திட்டத்தை தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரத்து செய்வோம் என அறிவித்து விட்டு, இன்று புதிய பென்சன் திட்டத்தை இரத்து செய்ய இயலாது என மாநில நிதியமைச்சர் மூலம் அறிவித்து வரும் நிலையில்... தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கோரி CPS ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் அறவழிப் போராட்டத்தை அடக்க நினைக்கும் தமிழக அரசை தமிழக அரசு ஊழியர்கள் சங்கம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்; கைது செய்யப்பட்டுள்ள அனைத்து ஊழியர்களையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்
தமிழக அரசு அறவழி போராட்டங்களை ஒடுக்க முற்படும் பட்சத்தில், அனைத்து அரசு ஊழியர்களையும் திரட்டி, அரசின் நடவடிக்கைகளை கண்டித்து கடுமையான போராட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் முன்னெடுக்கும் என்பதையும் எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆளும் திமுக அரசு தனது தேர்தல் வாக்குறிதியை உடனடியாக நிறைவேற்றிடும் வகையில் CPS திட்டத்தை இரத்து செய்து உடனடியாக அறிவிப்பை வெளியிடுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
மேற்கண்ட பத்திரிகை செய்தியினை தங்கள் ஊடகத்தில் வெளியிட்டு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
- Cheran Vanjinathan
(முகநூலிலிருந்து)
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு