புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்யக் கோரி முதல்வர் இல்லத்தை முற்றுகையிட முடிவு

CPS ஒழிப்பு இயக்கம் அறிக்கை

புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்யக் கோரி  முதல்வர் இல்லத்தை முற்றுகையிட முடிவு

பத்திரிக்கை செய்தி

திமுக-வின் தேர்தல் கால வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்ய வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் இல்லத்தை முற்றுகையிட முடிவு

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்திலன் சார்பில் போராட்ட ஆயத்த மாநாடு 28.10.2023(சனிக்கிழமை) காலை 10.00 மணிக்கு திருச்சி, மேலப்புதூர் புனித மரியன்னை பேராலய மண்டபத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் பி.பிரெடெரிக் எங்கெல்ஸ் தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மு.செல்வகுமார் மற்றும் சு.ஜெயராஜராஜேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்றது. இம்மாநாட்டினை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜெ.லெட்சுமி நாராயணன் துவக்கி வைத்தார்.

தமிழ் நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட செயலாளர் ஜி.சதிஷ்பாபு, தமிழ்நாடு வணிகவரிப் பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் நா.ஜனார்த்தனன், வணிகவரி அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் க.லெட்சுமணன், VHN,SHN, CHN சங்க கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சு.தமிழ்ச்செல்வி, JSR தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் டே.குன்வர் ஜோஸ்வா வளவன், கால்நடைப் பராமரிப்பு ஆய்வாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.தமோதரன், சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஆலோசகர் ச.இ.கண்ணன், பதிவுமூப்பு இடைநிலை ஆசிரியர்கள் இயக்க (SSTA) பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட், தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.ராஜசேகர், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி துணைப் பொதுச் செயலாளர் ஜி.நாகராஜ், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சி மாநகரச் செயலாளர் அ.பெர்ஜித்ராஜன், தமிழக பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில பொருளாளர் ப.அமுல்ராஜ், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எம்.பழனியப்பன், தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் மகளிர் ஊர்நல அலுவலர்/மேற்பார்வையாளர் சங்க(TRNSA) மாநிலத் தலைவர் இரா.சங்கர்பாபு ஆகியோர் கருத்துரையாற்றினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவரும், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவரும், ஜாக்டோ-ஜியோவின் முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளரும், சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஆலோசகருமான மு.சுப்பிரமணியன் நிறைவுரையாற்றினார். மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ஆ.ஜான்சன் சகாய நாதன் நன்றி கூறினார். மாநிலம் முழுவதிலுமிருந்து 200 பெண்கள் உள்ளிட்ட 1000-திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றனர். மாநாட்டின் முடிவில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரின் இல்ல முற்றுகை உள்ளிட்ட தொடர் போராட்டங்களை அறிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 28.10.23 திருச்சியில் நடைபெற்ற போராட்ட ஆயத்த மாநாட்டில அறிவிக்கப்பட்ட போராட்டங்கள்

31.10.23 - மாநில ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர்கள் போராட்ட முடிவை சென்னையில் தமிழக அரசிடம் வழங்குவது

18.11.23 -  குடும்பத்துடன் மாவட்ட அளவில் உண்ணாவிரதம்

27.12.23 - மாவட்ட அளவில் மறியல்

23, 24.1.23 - இரண்டு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம்

8.2.24 - முதல்வர் இல்ல முற்றுகை

- சேரன் வாஞ்சிநாதன்

(முகநூலில்) 

Disclaimer: இந்த பகுதி பதிவரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு