அதானியின் மீதான தாக்குதல் இந்தியாவின் மீதான தாக்குதல் எனும் வசனங்கள் இனி எடுபடாது
Arukkutti periyasamy
அதானி இனி...
அதானி பங்குகள் விலை வீழ்ச்சி அடைந்தபோதெல்லாம் பங்குகளை வாங்கி சேதாரம் அதிகமாகாமல் பார்த்துக் கொண்ட முதலீட்டு நிறுவனம் GQG. ராஜீவ் ஜெயின் என்னும் இந்தியரால் தோற்றுவிக்கப்பட்ட அமெரிக்க நிறுவனம் இது.அதானி பங்குகளில் 48100 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறார்கள்.அதானி நிறுவன முதலீடுகளை இனி மறுபரிசீலனை செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார் ராஜிவ் ஜெயின். அதாவது இனி வாங்க மாட்டார்; வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் விற்க வருவார்
இனி கடன் பத்திரங்களின் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் மூலதனம் திரட்டுவது இயலாத காரியம். சிங்கப்பூர் ஜப்பான் ஸ்விஸ் வங்கிகளில் இனி கடனும் கிடைக்காது. இந்திய வங்கிகளில் கடன் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. LIC யும் வாய்ப்பு கிடைக்கும் போது விற்கவே செய்வார்கள்
தொடர்ந்து ஆதரித்துக் கொண்டே இருந்தால் ஏற்படும் சேதாரம் குறித்து ஆளும் பாஜகவும் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும். ஆட்சிக்கு ஆபத்து என்றால் அதானியை கை கழுவி விடுவார்கள். செபியின் நிலைமையும் இதேதான். அதானியின் மீது தாக்குதல் இந்தியாவின் மீது தாக்குதல் எனும் வசனங்கள் இனி எடுபடாது
ஹிண்டன்பர்க் தனியார் நிறுவனம். ஆனால் இப்போது அதானி மீது விசாரணை மேற்கொள்ள விருக்கும் SEC அதிகாரம் படைத்த அமெரிக்க பங்கு சந்தை ஒழுங்காற்று நிறுவனம். ஒரு வெளிநாட்டவர் அமெரிக்க முதலீட்டாளர்களை ஏமாற்றி இருப்பதை அவர்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். நியூயார்க் நீதிமன்றத்தில் அதானி மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும்.இந்தியா போல அமெரிக்காவில் 10-15 ஆண்டுகளுக்கு வழக்கை இழுக்க முடியாது. ஆறு மாதம் ஒரு வருடத்திற்குள் தீர்ப்பு வந்துவிடும்.
சூரிய ஒளி மின்சாரத்தின் மூலம் ஒளியேற்றப் போகிறோம் என்று கிளம்பிய அதானி நிறுவனங்களை இருள் சூழ்ந்து விட்டது.
- Arukkutti periyasamy
https://www.facebook.com/share/p/14qDte9FtG/?mibextid=oFDknk
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு