இந்திய கட்சிகளின் ஏகாதிபத்திய சார்பு நிலை
பாட்டாளி வர்க்கம் உலகப் போரை உள்நாட்டு போராக, புரட்சியாக மாற்ற வேண்டும் என்றார் லெனின். பாட்டாளி வர்க்கம் அதன் படி ரஷ்ய நாட்டில் உள்நாட்டு புரட்சியை நடத்தி முடித்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியது .
தோழர் லெனின் ரஷ்ய நாட்டின் பாட்டாளி வர்க்கப் புரட்சியை வழி நடத்திக் கொண்டிருந்த வேளையில் முதல் உலகப் போர் தொடங்கியது.
1914-18 நடந்த உலகப் போர் எந்தெந்த வர்க்கங்களின் நலன்களுக்காக எந்தெந்த வர்க்கங்கள் உலகை மறுபங்கீடு செய்ய போரை நடத்துகிறார்கள் என்பதை ஆய்வு செய்து பாட்டாளி வர்க்கத்திற்கு வழி காட்டினார்.
இந்த போரால் உலகெங்கும் உள்ள பாட்டாளி வர்க்கத்திற்கு உழைக்கிற வர்க்கங்களுக்கு எந்த பலனும் இல்லை என்றார்.
அதனால் பாட்டாளி வர்க்கம் உலகை மறுபங்கீடு செய்ய ஏகபோக முதலாளித்துவ வர்க்கங்கள் இரண்டு முகாம்களாக (பிரிட்டிஷ் தலைமையிலான முகாம் × ஜெர்மனி தலைமையிலான முகாம்) பிரிந்து நடத்தும் இந்த போரில் எந்த முகாமையும் ஆதரிக்கக் கூடாது, பாட்டாளி வர்க்கம் உலகப் போரை உள்நாட்டு போராக, புரட்சியாக மாற்ற வேண்டும் என்றார். பாட்டாளி வர்க்கம் அதன் படி ரஷ்ய நாட்டில் உள்நாட்டு புரட்சியை நடத்தி முடித்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியது .
அந்த பாட்டாளி வர்க்க அரசியல் நிலைப்பாடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமல்ல அனைத்து இயக்கங்களுக்கும் ஒரு மிகச் சிறந்த வழிகாட்டுதல். இந்த நிலைப்பாட்டை இந்தியாவில் உள்ள எந்த கட்சியும் எந்த தலைமையும் ஆதரிக்கவில்லை.
ஏதாவது ஒரு ஏகாதிபத்திய முகாமை ஆதரித்தவர்களாக இருந்தனர்.
காந்திய முகாம் ஒரு ஏகாதிபத்திய முகாமை ஆதரித்தது என்றால் நேதாஜி முகாமும் ஒரு ஏகாதிபத்திய முகாமை ஆதரித்தது.
இரண்டாம் உலகப் போரில் மேலே நாம் எடுத்துக் காட்டிய லெனினிய நிலைப்பாட்டை தோழர் ஸ்டாலின் முன்னெடுத்தார்.
இரண்டாம் உலகப் போரின் முதல் கட்டடம் இரண்டு ஏகாதிபத்திய முகாம்களுக்கு இடையே போர் தொடங்கியது. அந்த நேரத்தில் பாட்டாளி வர்க்கம் போரை நடத்தும்
இரண்டு ஏகாதிபத்திய முகாம்கள் எதையும் ஆதரிக்கக் கூடாது என்றார்.
இரண்டாம் உலகப் போரின் இரண்டாம் கட்டம் போரின் வர்க்கத் தன்மை அடிப்படையில் மாறியது.
ஏகாதிபத்திய முகாமுக்கும் சோசலிச நாட்டுக்கும் இடையிலான போராக மாறியது. சோசலிச தாயகத்தை பாதுகாக்க பாசிச அபாயத்தை முறியடிக்க மற்றொரு ஏகாதிபத்திய முகாமுடன் சேர்ந்து பாசிசத்தை முறியடித்தார் தோழர் ஸ்டாலின்.
இந்த புரிதல் அன்று மட்டுமல்ல இன்றும் இல்லை. உக்ரைன் போர் இரண்டு ஏகாதிபத்திய முகாம்களிடையே நடைபெறுகிறது.
அதில் ஒரு முகாமை (ரஷ்ய முகாமை)ஆதரிக்கிறது சிபிஐ சிபிஎம் கட்சிகள்.
மற்றொரு முகாமை (அமெரிக்க-நேட்டோ முகாமை) ஆதரிக்கிறது
மார்க்சிய லெனினியம் பேசும் மற்றொரு கும்பல்.
நாம் இரண்டு ஏகாதிபத்திய முகாம்களையும் எதிர்க்க வேண்டும் என்கிறோம்....
- Thirumeni Gt
(முக நூலிலிருந்து)