சென்னை புத்தகக் காட்சியில் செந்தளம் பதிப்பகம்
தோழர்களின் வாழ்த்துரை
செந்தளம் பதிப்பகம்
பேராசான் லெனின் தொகுப்பு நூல்களை வெளியிட்டது.
பிறகுதான் மற்ற இடதுசாரிப் பதிப்பகங்களும் பேராசான் நூல்களை வெளியிட்டன.
தற்காலத்தில் அந்த வகையில் முன்னோடி செந்தளம்தான்.
மேலும் மேலும் ஆசான்களின் சிறந்த படைப்புகளை வெளியிட்டு வருவதோடு, பல்வேறு வகையான படைப்புகளையும் வெளியிடுகிறது.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் அடையாள அரசியலின் தாக்கம் இடதுசாரிகள் மத்தியில் மேலோங்கியிருக்கும் வேளையில் தோழர் ஜீவாவின் " ஈரோட்டுப் பாதை சரியா " நூலை வெளியிட்டதன் மூலம் கட்சிப் பாகுபாடுகளைத் தாண்டி கம்யூனிச தத்துவத்தை உயர்த்திப் பிடிப்பதே இடதுசாரிப் பதிப்பகத்தின் தலையாய கடமை என்பதை உணர்த்தியுள்ளது.
அதற்காக செந்தளம் பதிப்பகத்தின் தோழர்களுக்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள் ,
பாராட்டுக்கள்,
நன்றிகள்
Kanagu kanagaraj
====================================
சுமார் பத்து ஆண்டுகளாக இடதுசாரி பதிப்பகம் பல தோன்றி உள்ளன. அவைகளில் சில தாக்குபிடிக்கின்றன, பல தடுமாறுகின்றன. சில காணாமல் போய்விட்டன. தொடங்கும் போது சிறு பதிப்பகமாகத்தான் இருக்கும், ஆனால் அதை படிப்படியாக பெரிய நிறுவனமாக வளர்த்தெடுக்க வேண்டும். பெரிய நிறுவனமாக வளர்த்தால்தான் பதிப்பகத்தை நிலைநிறுத்த முடியும். அதுவும் கடினமான செயல் என்பதில் சந்தேகமில்லை.
அப்படி சிறு பதிப்பகமாக தொடங்கியது, செந்தளம் பதிப்பகம். தற்போது அந்தப் பதிப்பகம் நிறைய நூல்களை பதிப்பித்துள்ளனர். குறிப்பாக மார்க்சிய மூலவர்களின் நூல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.
மார்க்சிய மூலவர்களின் நூல்கள் தடைபடாமல் கிடைக்க வேண்டும். இதனை இடதுசாரி பதிப்பபங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
செந்தளம் (முற்போக்கு இலக்கிய களம்) தங்களது நூல்களையும் பொன்னுலகம் புத்தக நிலையத்தின் நூல்களையும், தற்போது நடைபெற்றுவரும் சென்னை புத்தகக் காட்சியில் அரங்கு எண் 535யில் (புது உலகம்) கிடைக்கிறது.
அங்கு கிடைக்கும் மார்க்சிய மூலவர்களின் நூல்களின் பட்டியலை மட்டும் இங்கே தருகிறேன்.
1) இயக்கவியல் பொருள்முதல்வாதம் – மார்க்ஸ்-எங்கெல்ஸ்-லெனின்
2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் – லெனின்
3) இயக்கவியல் பிரச்சினை – லெனின்
4) மார்க்சியமும் மொழியியலும் – ஸ்டாலின்
5) ஏகாதிபத்தியக் கால பொருளாதாரவாதமும் மார்க்சியத்தை இழிவுபடுத்தும் ஒரு கேலி சித்திரமும் – லெனின்
6) வெகுஜனங்களிடையே கட்சியின் பணி – லெனின்
7) தேசிய இனப் பிரச்சினை பற்றி – ஸ்டாலின்
8) யுத்ததந்திரமும் செயல்தந்திரமும் – ஸ்டாலின்
9) அக்டோபர் புரட்சியின் சர்வதே தன்மை – ஸ்டாலின்
10) மார்க்சியமும் திருத்தல்வாதமும் – லெனின்
11) கட்சி மற்றும் தலைமை முறைப் பற்றி – மாவோ
12) இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் – ஸ்டாலின்
13) நடைமுறை பற்றி – மாவோ
14) தேசிய இனப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள் – லெனின்
15) தொழிற் சங்கம் பற்றி – லெனின்
16) டிராட்ஸ்கியும் அவரது ஆதரவாளர்களும் – லெனின்
17) கம்யூனிச சமூகம் – மார்க்ஸ்-எங்கெல்ஸ்-லெனின்
18) காரல் மார்க்ஸ் பற்றி – லெனின்
19) ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் – லெனின்
20) கீழ்திசை மக்களது கம்யூனிஸ்ட் நிறுவனங்களின் 2ம் அகில ருஷ்ய காங்கிரசில் ஆற்றிய உரை – லெனின்
21) மூலதனத்தின் பிறப்பு – மார்க்ஸ்
22) போர்தந்திரம் பற்றி – லெனின்
23) அரசும் புரட்சியும் – லெனின்
24) சோவியத் சோசலிச ஜனநாயகம் – லெனின்
25) நாட்டுப்புற ஏழை மக்களுக்கு – லெனின்
26) ஊழியர் பயிற்சி – லெனின்
27) லெனின் நூல் திரட்டு 4 தொகுதிகள்
28) லெனின் தேர்வு நூல்கள் 12 தொகுதிகள்
லெனின் தேர்வு நூல்கள் 12 தொகுதிகள் சலுகை விலையாக 2500 ரூபாய்க்கு தற்போது கிடைக்கிறது.
மார்க்சிய அடிப்படைகளை எந்தளவுக்கு புரிந்திருக்கிறோமோ அந்தளவுக்கு நமது அரசியல் செயற்பாடு சிறக்கும். அதற்கு நாம் மார்க்சிய அடிப்படை நூல்களைப் படிக்க வேண்டும்.
- அ.கா. ஈஸ்வரன்
https://www.facebook.com/share/p/1451T8NZ7K/
======================================
பேராசான் லெனின் படத்தை பரிசளித்து மகிழ்வித்த முத்து காந்திமதி, லிங்கம் தேவா உள்ளிட்ட தோழர்களுடன் செந்தளம் பதிப்பகத்தார்
=====================================
டிராட்ஸ்கி என்பவர் மிகவும் ஆபத்தானவர். மார்க்சிய அடிப்படைகளை சிதைக்கக்கூடியவர். அவரது தொண்டர்கள் அவரைவிட ஆபத்தானவர்கள். அதுவும் நவீன டிராட்ஸ்கியவாதிகள் மிகமிக ஆபத்தானவர்கள். ஸ்டாலின் பற்றி அவதூறுகளை தொடர்ந்து பரப்பி வருகின்றனர். மேலும் மார்க்சியத்தை சந்தேகிக்க வைக்கின்றனர். மார்க்சியத்தில் நாம் தெளிவோடு இருக்க வேண்டும், நமது தோழர்களையும் தெளிவுபடுத்த வேண்டும்.
டிராட்ஸ்கியைப் புரிந்து கொள்வதற்கும் அவரது தொண்டர்களின் போக்கை புரிந்து எதிர்ப்பதற்கும் உதவும் வகையில் ஒரு நூல் வந்திருக்கிறது. இதனை செந்தளம் “டிராட்ஸ்கியின் துரோக வரலாறும் நவீன டிராட்ஸ்கியமும்” என்கிற தலைப்பில் வெளியிட்டுள்ளனர். இந்த நூல் தற்போது நடைபெறும் சென்னை புத்தகக் காட்சியில் அரங்கு எண் 535ல் (புது உலகம்) கிடைக்கிறது.
மார்க்சிய துரோகிகளை இனம்காண்போம் மார்க்சியத்தைக் காப்போம்
- அ.கா. ஈஸ்வரன்
முழ நூல்பட்டியலையும் இணைப்பில் காணலாம்