மகப்பேறு விடுப்பு ஊதியத்தை பிடித்தம் செய்யும் தமிழக அரசின் மனித நேயமற்ற செயல்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் கண்டன அறிக்கை

மகப்பேறு விடுப்பு ஊதியத்தை பிடித்தம் செய்யும் தமிழக அரசின் மனித நேயமற்ற செயல்

______________________________________

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்

பதிவு எண் 133 /2021

மாநில மையம்

______________________________________

மகப்பேறு விடுப்பு ஊதியத்தை பிடித்தம் செய்யும் தமிழக அரசின் மனித நேயமற்ற செயல்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் கண்டனம்

மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத் துறையில் மருத்துவ தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள் தேசிய சுகாதார குழுமத்தின்   ( NHM )கீழ் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

தொகுப்பூதியத்தில் பணிபுரியும் MRB செவிலியர்களுக்கு 6 மாதங்கள் மகப்பேறு விடுப்பு  வழங்கப்பட்டு வந்தது.

தற்போது தொகுப்பூதியத்தில் பணிபுரியும் MRB செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பு பொருந்தாது என்றும்.,

மகப்பேறு விடுப்புக்கு விடுப்பு ஊதியம் வழங்கப்பட்டு இருந்தால் வழங்கப்பட்ட விடுப்பு ஊதியத்தை மாதாந்திர ஊதியத்தில் பிடித்தம் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.

தமிழக அரசின் செயல் மனித நேயமற்றது மட்டுமல்ல தொழிலாளர் நலச் சட்டத்திற்கும் எதிரானது.

தொழிலாளர் நலச் சட்டங்களின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, தொழிலாளர் நல சட்டப்படி மகப்பேறு விடுப்பு வழங்கப்படுவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது.

தொழிலாளர் நலச் சட்டங்களை அமுல்படுத்துவதில்  முன்மாதிரியாக செயல்பட வேண்டிய தமிழக அரசு தனது கட்டுபாட்டில் பணிபுரியும் செவிலியர்களுக்கு வழங்கப்பட்ட மகப்பேறு விடுப்பு ஊதியத்தை பிடித்தம் செய்வது  கண்டனத்திற்குரியது என்பதோடு மனிதநேயமற்ற செயலும் ஆகும்.

எனவே, மருத்துவ தேர்வு வாரியத்தால் நியமனம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு வழங்கப்பட்ட மகப்பேறு விடுப்பு ஊதியத்தை பிடித்தம் செய்யும் நடவடிக்கையை திரும்பப் பெறுமாறு தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

S.தமிழ்ச்செல்வி, மாநிலத் தலைவர்

J. லெட்சுமிநாராயணன், பொதுச் செயலாளர்

- சேரன் வாஞ்சிநாதன் 

(முகநூலில்)

Disclaimer: இந்த பகுதி பதிவாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு