இந்துத்துவ கருத்தியலுக்கு ஆதரவான கருத்தை முன்வைத்துள்ள அம்பேத்கரை வழிபடும் பக்தர்கள்

Sidhambaram Voc

இந்துத்துவ கருத்தியலுக்கு ஆதரவான கருத்தை முன்வைத்துள்ள அம்பேத்கரை வழிபடும் பக்தர்கள்

ஆரியர்கள் மத்திய ஆசியாவின் ஸ்டெப்பி புல்வெளியில் இருந்து பழங்குடிகளாக கைபர் கணவாய் வழியாக இந்திய துணைக்கண்டத்திற்குள் ஊடுருவி இங்கிருந்த பழங்குடிகளோடு ஒன்று கலந்து உற்பத்தியில் ஈடுபட்டனர். 

ஆரிய பழங்குடிகளுக்கும் இந்தியாவில் இருந்த பல்வேறு பழங்குடிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள், சச்சரவுகள்,  போர்களை  ஆரிய - திராவிட இனவாதப்  போராக முல்லர், ஜோன்ஸ், கால்ட்வெல் போன்றோர் மூலம்  திரித்து தமது காலனியாதிக்கத்தை நியாயப்படுத்தி நிலை நிறுத்தியது ஐரோப்பிய காலனியாதிக்கம். 

ஐரோப்பிய காலனியத்தின் இந்த இனவாத மாயையை அடிப்படையாக கொண்டே காங்கிரசு, ஆர்.எஸ்.எஸ் மற்றும் நீதிக்கட்சி தோற்றம் பெற்று இயங்கின. 

அம்பேத்கர் ஆரிய - திராவிட இனவாதம் என்பது வரலாற்றுக் குப்பை என்று சரியாகவே சொன்னார்.  ஆனால் ஆரியர்கள் சுதேசிகள் என தவறான கருத்தையும்  சொன்னார். இக்கருத்து ஆரியர்கள் சுதேசிகள் என்பதை அடிப்படையாக கொண்டு  ஆர்.எஸ்.எஸ் முன்வைத்த இந்துத்துவ கருத்தியலுக்கு இன்றுவரை வலு சேர்த்து வருகிறது. சாதி இனமல்ல - அது சமூக வகை ; சாதி பார்ப்பனரால் உருவாக்கப்படவில்லை என்று கூறி  பெரியார் பூலேவை அவர் மறுத்துள்ளதும் சரியே. ஆனால் சாதி என்பது  இந்துமதத்தினால் உருவானது எனும்  கருத்து  முதல்வாத கருத்தை முன்வைத்துள்ளார். சாதி, ஆரியம், பார்ப்பனியம் குறித்த அம்பேத்கரின் கருத்திற்கு எதிராகவே அம்பேத்கரிஸ்ட்டுகள் பேசிவருகின்றனர். 

படிக்க: ஏகாதிபத்திய அடிவருடித்தனத்தில் ஆரியமும்-திராவிடமும் ஒன்றே!! ஏ.எம்.கே

இன்று வன்னியரியம், வேளாளரியம், தலித்தியம் உள்ளிட்ட அனைத்து  சாதியவாதமும் பாஜக ஆர்.எஸ்.எஸ் கும்பலின் கார்ப்பரேட் நலன்களுக்கான இந்துத்துவ பாசிசத்திற்கு அக்கம் பக்கமாக சேவை செய்துவருகின்றன என்பது வெளிப்படை. இது இளையராசா விசயத்திலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

இளையராசா மோடியின் தமிழ்ப்பற்று  நாடகத்தையும் - தமிழை காவிமயமாக்கும் துரோகத்தையும்   வியந்து வியந்து பாராட்டுகிறார். ராசாவின் இந்த வலதுசாரி ஆதரவுப்போக்கை விமர்சிப்போரை சாதிவெறியர்கள் என தலித்தியவாதிகள் - அம்பேத்கரிஸ்ட்டுகள்  பேசுவதோடு ராசாவின் செயலை பலவாறு நியாயப்படுத்தியும்  வருகின்றனர். இவ்வாறு பாஜகவின் சாதியவாத செயல்தந்திரங்களுக்கு இவர்கள் சேவை செய்கின்றனர். 

எம்.எஸ்.வி, ராசா, ரகுமான், தேவா போன்ற இசையமைப்பாளர்களின் இசையை அவர்களின் சாதி - மதத்தின் அடிப்படையில் யாரும் (குறிப்பாக கம்யூனிஸ்ட்டுகள் )  ரசிப்பதில்லை. ராசா மீதான விமர்சனமும் சாதி அடிப்படையிலானது அல்ல. அதே போல் அவர் எந்த சாதியாக இருந்தாலும் நாம் அவரை விமர்சித்திருப்போம். ஆதரவு -  எதிர்ப்புக்கான அளவுகோல்  ஒருவரது அரசியல் நிலைப்பாடே தவிர சாதியம் அல்ல. அது சாதியவாதிகளின் அளவுகோல். 

இந்துத்துவ கருத்தியலுக்கு ஆதரவான கருத்தை முன்வைத்துள்ள அம்பேத்கரை வழிபடும் பக்தர்கள் ராசாவின் இந்துத்துவ சார்புத்தன்மைக்கு முட்டுக் கொடுப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. 

பாசிச எதிர்ப்பு அரசியல் இவ்வாறாக பலவாறு சிதறடிக்கப்படுவதை புரிந்துகொண்டு வினையாற்றுவது கம்யூனிஸ்ட்டுகளின் கடமையாகும்.

- Sidhambaram Voc

(முகநூலிலிருந்து) 

https://www.facebook.com/100028720695743/posts/pfbid02Jeu7a5dbWGZrM82MPmGtR2KTQ4DejPC76vBHTjuapX6A6jVNfzembxvNaUcHDtvYl/?app=fbl