இலங்கையின் சாவர்க்கர் தர்மபாலாவை கொண்டாடும் அம்பேத்கரைட்டுகள்

இந்துமதவெறி மோடி கும்பலுக்கும் பௌத்த மதவெறி பக்சே கும்பலுக்கும் இடையிலான கார்ப்பரேட் உறவிற்கு பாலம் அமைத்து கொடுக்கிறது ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் எனும் ஏகாதிபத்திய தொண்டு நிறுவனம்

இலங்கையின் சாவர்க்கர் தர்மபாலாவை கொண்டாடும் அம்பேத்கரைட்டுகள்

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக பௌத்த பாசிச கருத்தியலை கட்டியமைத்த சிங்கள இனவெறியனும்  பௌத்த மதவெறியனும் இலங்கையின் சாவர்க்கருமான தர்மபாலாவை கொண்டாடுகிறது ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் " மெய் அறிவு"தளம். 

இந்துமதவெறி மோடி கும்பலுக்கும்  பௌத்த மதவெறி பக்சே கும்பலுக்கும் இடையிலான கார்ப்பரேட்  உறவிற்கு பாலம் அமைத்து கொடுக்கிறது ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் எனும் ஏகாதிபத்திய தொண்டு நிறுவனம். 

பக்சே கும்பல் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்களை கொன்று குவித்து இரத்தம் குடித்தது. இந்த ஓ.நாய்களுக்கு எதிரான  புலிகளின் விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்கு இந்திய ஆளும் வர்க்கம், இலங்கை ஆளும் வர்க்கம் , அமெரிக்க ஏகாதிபத்தியம்  மூன்றும்  கைகோர்த்து  புலிகளின் அமைப்பிற்குள் தலித்தியத்தை பரப்பி "கருணாக்கள் " மூலம் அவ்வமைப்பை உடைத்தன. இந்த துரோகத்தனமான  நீசத்தனமான திருப்பணியை  அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரை போன்ற  ஏகாதிபத்திய தொண்டு நிறுவன கைக்கூலிகள்  தலைமை தாங்கி நடத்தினார்கள். ஒரு புறம் தலித்தியம்  பேசிக்கொண்டே ஈழத்தமிழர்களில் உள்ள இலட்சக்கணக்கான தலித்துகளை பக்சே கும்பல் கொன்று குவிக்க துணை போனது இந்த கும்பல். 

ஈழத்தில் இன்னமும் புத்தரின் இரத்தப் பசி தீரவில்லை. ஈழம் சிங்களமயமாக்கப்படுவதும்  பௌத்தமயமாக்கப்படுவதும் இன்று வரை தொடர்கிறது. தமிழர்களின் வழிபாட்டுத்தலங்கள் இடிக்கப்பட்டு பௌத்த விகாரம் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலைமையில்தான் ரஞ்சித்தின் 

" அம்பேத்கரைட்டுகள் "  அ.மார்க்ஸ், எஸ்.வி.ஆரின் திருப்பணிகளை தற்போது பௌத்த மீட்பு எனும் பிற்போக்கு அடையாள அரசியலின் மூலம் மீட்டுருவாக்கம் செய்ய முயல்கின்றனர். 

நல்ல வேளை ரெனேவை கம்யூனிஸ்ட்டாக காட்டாமல் அம்பேத்கரைட்டாக காட்டினார் ரஞ்சித். பௌத்த பிற்போக்குதனத்தையும்  கட்டற்ற பாலுறவு  எனும் சீரழிவு கலாச்சாரத்தையும் கம்யூனிஸ்ட்கள் கொண்டாடமாட்டார்கள். 

அநகாரிக தர்மபாலா, ஆறுமுக நாவலர் : இனவாத நாணயத்தின் இரு முகங்கள்

இந்திய - இலங்கை - அமெரிக்க - சீன - ரசிய  கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காக பௌத்த பேரினவாத பாசிசத்தை ஏவி ஈழதமிழர்களையும் புலிகள் அமைப்பையும் கொன்று குவித்த போர்க்குற்றவாளிகளை கருவறுப்பது நம் கடமை. அதே போல்  பௌத்தத்தின் பேரில் இந்த துரோகிகளுக்கு எச்சில் இலை பொறுக்கும் இந்த தலித்திய -  பௌத்தமதவாத அடையாள அரசியல்  மீது காரி உமிழ்வதும் நமது முக்கிய  கடமையாகும்.

- Sidhambaram Voc

(முகநூலிலிருந்து)

பதிவரின் முகநூல் பக்கத்திற்கு செல்ல கீழேயுள்ள இணைப்பை சொடுக்கவும்

https://www.facebook.com/100028720695743/posts/pfbid0Torj3gRrrQfvZ915D51ZaJPW8noNfbNGQ9BJ8jaRfDVrQjA47AgN77v6QRCZGtjSl/?app=fbl