CSR - ஓநாயின் கருணை!
சாவித்திரி கண்ணன்
அடடா! இவர்களின் கருணையை எண்ணி எனக்கு கண்ணீர் பெருகிறது..!
ஆடு நனையுதே என்று ஓநாய் வருத்தப்பட்ட கதையாக இருக்கிறது!
ஐயோ, அரசு பள்ளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கிறதே என்று தனியார் பள்ளி முதலைகள் மன்னிக்கவும், முதலாளிகள் கண்ணீர் சிந்துவது!
உலகத்திலே ஹீட்லர், முசோலினி உள்ளிட்ட பாஸிஸ்ட்டுகளுக்கு கூட மனதில் ஏதோ ஒரு ஓரத்தில் கொஞ்சம், ஈரம், இரக்கம் இருந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால், இந்த தனியார் பள்ளி முதலாளிகளில் மிகப் பெரும்பாலோருக்கு அதுவும் இருக்க வாய்ப்பில்லை. இதில் விதிவிலக்காக ஒரு சில நல்லவர்களும் இருக்கலாம்.
# நீங்க வாங்குகிற கல்வி கட்டணத்தில் ஏதாவது தர்ம, நியாயங்கள் இருக்கிறதா? உங்க வரவு செலவு கணக்கை நீங்க வெள்ளை அறிக்கையாக தருவீங்களா? ஆக, முதலில் உங்க கல்வி கட்டணத்தை நியாயமாக்குங்கள்!
# கல்வி கட்டணத்தை தவிர்த்து இடைப்பட்ட காலங்களிலும், வெவ்வேறு தலைப்புகளில் பணம் கறக்கும் பார்முலாவை, இந்த பித்தலாட்டத்திற்கு முற்றுப் புள்ளி வையுங்க.
# உங்க பள்ளியில் உயிரைக் கொடுத்து வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு அடிமாட்டுக் கூலி தருவதை மாற்றி, கண்ணியமான ஊதியம் வழங்கிவிட்டு, அப்புறம் சமூகப் பணியைப் பற்றி பேசலாம் வாங்க..!
# அரசு பள்ளிகளுக்கு உதவுவதாக சொல்லக் கூடிய தாரளமான மனம் இருந்தால், உங்க மனசாட்சிக்கு விரோதமில்லாமல் 25% ஏழை மாணவர்களுக்கு கல்வி தருவதாக அரசிடமிருந்து தனியார் பள்ளிகள் வாங்கிக் கொண்டிருக்கும் பெரும் நிதியை வேண்டாமென்று மட்டும் சொல்லுங்க, போதும்.
# தனியார் பள்ளிகள் என்பவை தமிழை கொன்றொழித்து அன்னிய மொழியை திணிப்பவர்கள். அரசு பள்ளிகளில் தான் தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதை கெடுத்துவிடாதீர்கள்.
# அரசு பள்ளிகளை வாழ வைக்கிறோம் என உங்க பள்ளி மாணவர்களிடம் இன்னும் கட்டணத்தை அதிகரிப்பீர்கள்.
படிக்கவும்: நம்ம ஸ்கூல் திட்டம் : கல்வியைப் பறிமுதல் செய்யும் 'கார்ப்பரேட் நீதி'
# அரசு பள்ளிகளுக்கு உதவுவதாக உள்ளே நுழைந்து அந்த பள்ளிகளின் கட்டமைப்பை மெல்ல,மெல்ல உங்க கண்ட்ரோலுக்கு எடுத்துக்கிட்டு பள்ளி மைதானம், கூட்ட அரங்கம்.. எல்லாவற்றையும் ’ஸ்வாகா’ பண்ணுவீங்க..
# கள்ளக் குறிச்சி சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவியை கற்பழித்து கொன்ற தனியார் பள்ளி தாளாளர் ரவிக்கு ஆதரவாக பள்ளிக் கூடங்களை இழுத்து மூடி ஸ்ட்ரைக் செய்த திருக்கூட்டமல்லவா நீங்கள்!
# இறுதியாக தமிழ்நாடு ( திமுக) அரசுக்கு, பாசிச பாஜகவை எதிர்க்கிறோம்ங்கிற போர்வையை போர்த்திக்கிட்டு, அரசு பள்ளிகளில் ஏற்கனவே தேசிய கல்வித் திட்டத்தின் கூறுகளுக்கு அருமையான தமிழ் தலைப்பிட்டு எண்ணும்,எழுத்தும், இல்லம் தேடிக் கல்வி, நம்ம ஸ்கூல் பவுண்டேசன், வானவில் மன்றம், பள்ளி மேலாண்மைக் குழு என சூழ்ச்சியாக அரசு பள்ளிகளின் கட்டமைப்பை கலகலக்கச் செய்து வருவதைப் போலவே தேசிய கல்விக் கொள்கையில் உள்ள TWINING என்ற திட்டப்படி தான் தனியார் பள்ளி முதலாளிகளை அரசு பள்ளிகளுக்குள் சூதானமாக இறக்குகிறீர்கள்..!
# சுதந்திர இந்தியாவில் ஜனநாயகம் என்பதே மக்களிடம் ஓட்டை வாங்கி மக்களை மடையர்களாக்கியதோடு, ஓட்டாண்டியாக்குவது தானா?
சாவித்திரி கண்ணன் (முகநூலில்)
https://www.facebook.com/share/p/15Z3JeJZkA/?mibextid=oFDknk
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு