செவிலியர்களின் போராட்டத்தை ஒடுக்கும் திமுக அரசு

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் கண்டனம்

செவிலியர்களின் போராட்டத்தை ஒடுக்கும் திமுக அரசு

----------------------------------------------------------

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்

பதிவு எண் :- 133 /2021

மாநில மையம்...

No3 (G1)கிருஷ்ணப்பர் தெரு, சேப்பாக்கம், சென்னை - 5

----------------------------------------------------------

திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி பணிநிரந்தம் செய்யக்கோரி ஜனநாயக ரீதியாக போராடச் சென்ற MRB செவிலியர்கள் DMS வளாகத்திற்குள் செல்வதை தடுக்க வாயில் கதவு பூட்டு போட்ட காவல்துறை

அமைதியாகப் போராடிய செவிலியர்கள் வலுக்கட்டாயமாக கைது.!

பெண் செவிலியர்களை அடித்த ஆண் காவலர்கள்

கைது செய்யப்பட்ட செவிலியர்கள் 10 க்கும் மேற்பட்ட மண்டபங்களில் சிறை வைப்பு.! காவல் துறையின் அடாவடிதனத்தை அத்துமீறலை வண்மையாக கண்டிக்கிறோம்.

______________________________________

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றப் போராடும் அரசு ஊழியர் ஆசிரியர்களை காவல் துறையின் அடக்குமுறை மூலம் ஒடுக்கி விடலாம் என்ற தமிழக முதல்வரின் நடவடிக்கை திமுக ஆட்சிக்கு முடிவுகட்டும் என்பதை எச்சரிக்கையாக தெரிவிக்க விரும்புகிறோம்.

தமிழக அரசு அடக்குமுறையை கைவிட்டு கைது செய்யப்பட்ட செவிலியர்களை நிபந்தனை இல்லாமல் உடனடியாக விடுதலை செய்வதுடன், போராடும் செவிலியர் சங்கத் தலைவர்களை அழைத்துப் பேசி தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்

சு.தமிழ்ச்செல்வி,

மாநிலத் தலைவர்

ஜெ.லட்சுமி நாராயணன்

பொதுச் செயலாளர்

- சேரன் வாஞ்சிநாதன்

(முகநூலில்)

Disclaimer: இந்த பகுதி பதிவரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு