திருப்பூர்: பின்னலாடை தொழிலை நலிவடைய செய்த காங்கிரசு - பாஜக அரசுகள்

தருமர்

திருப்பூர்: பின்னலாடை தொழிலை நலிவடைய செய்த காங்கிரசு - பாஜக அரசுகள்

1990 காலகட்ட பொருளாதார கொள்கைகளால் நாட்டை பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு சூறையாட அனுமதித்த காங்கிரஸ் கட்சியின் அதே கொள்கைகளைத் தான் பாஜக இன்று வரை வீரியமாக மதவெறியோடு சேர்த்து  செயல்படுத்துகிறது.

வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி மன்மோகன்சிங் காலத்து  அறிக்கையில் சிலவற்றை திருத்தி, சிலவற்றை சேர்த்து  மீண்டும் வெளியிட்டுள்ளது. மற்றபடி பாசிச பாஜக கூட்டணியோ, அதிமுக கூட்டணியோ, இந்தியா கூட்டணியோ திருப்பூரின் பின்னலாடைத் தொழிலுக்கு ஒரு ஆணியையும் புடுங்கவில்லை. மேலும் மேலும் சிக்கலைத் தான் கொண்டு வந்தனர். இவர்கள் செய்வதெல்லாம் Smart city என சுமார் ₹1100/- கோடி கடன் வாங்கி நன்றாக இருந்த தார் ரோட்டை பெயர்த்துவிட்டு சிமெண்ட் ரோடு போட்டது, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி இனி மீட்டர் பொருத்தி பணம் புடுங்கப் போவது,வணிக வளாகம், பஸ் நிலைய கட்டடங்களை புதுப்பித்து கட்டணம் வசூலிப்பது தான்.

*********************

ஏற்றுமதி தவிர்த்து இயங்கக்கூடிய, உற்பத்திக்கு உதவக்கூடிய சார்பு நிறுவனங்கள் எனப்படும் ஜாப் ஒர்க் நிறுவனங்களான நிட்டிங், டையிங், பிரிண்டிங், எம்ப்ராய்டரி, சிறு தையல் நிலையங்கள், ஜி.எஸ்.டி வரி முறைக்குள் வந்த பின்னால் நொடிந்து போனது.

500/1000 நோட்டு செல்லாதாக்கியது, அனைவரையும் Digital வர்த்தகத்திற்குள் இழுத்துப் போட்டது, வரைமுறையற்ற GST வரிமுறை ஆயத்த ஆடை ஏற்றுமதி கடும் வீழ்ச்சியை தொடர்ந்து சந்தித்து வந்த நிலையில் வங்கதேச நாட்டிலிருந்து வரியின்றி இறக்குமதி செய்யப்படும் ஆயத்த ஆடைகளால் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. 

 நமது நாட்டில் இயங்கும் பன்னாட்டு ஆயத்த ஆடை நிறுவனங்கள் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு வழங்கி வந்த வாய்ப்புகளை தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக வங்கதேசத்திற்கு கொண்டு செல்கின்றனர்.

இதன் காரணமாக சிறு, குறு, மத்திய தர உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்கள் பெருமளவில் வியாபார வாய்ப்புகளை தவறவிட்டு, தொழில் செய்ய வங்கி மற்றும் வங்கி அல்லாத கடன்களுக்கான வட்டியை கட்ட இயலாத சூழல், வங்கி வட்டி, தொழிற்சாலைக்கான வாடகை, பணிக்கமர்த்திய ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட நிலையான மாதாந்திர செலவீனங்களை தவிர்க்க இயலாது, நாளைய தினம் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளும் இந்த செலவீனங்களை தங்கள் சேமிப்புகள், தங்க நகை அடமானம், தெரிந்தவர்கள், உற்றார், உறவினர் என்ற அளவில் கைமாற்று என்ற அளவில் சுழலும் தினங்கள் ஒரு கட்டத்தில் இயங்க இயலாத நிலையை அடைந்து, தொழில் முடக்கம் மட்டுமல்ல, பல்வேறு சட்ட சிக்கல், உறவினர்கள் நண்பர்களிடத்தில் பகை, கட்ட பஞ்சாயத்துகள், சட்ட நடவடிக்கைள் என்று கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இனி  அனைத்தையும் இழந்து வேறு ஊர் செல்லும் நிலையும் முடியாத பட்சத்தில்  தற்கொலைகள் நடைபெறும்.

பொருளாதார சீர்திருத்தம் என்பது இங்கே முதலாளிகளுக்கு ஆதரவாகவும் நாட்டு மக்களை பாதிப்பதாகவும் இருக்கிறது. பன்னாட்டு நிறுவனத்திற்கும்,ஏன் உள்ளூர் அம்பானி-அதானி முதல் திருப்பூர் சிறு நிறுவன உரிமையாளருக்கும் GST ஒரே தராசில் அளவீடு செய்து வரி போட்டால்  யார் வளர்வார்கள்? யார் அழிவார்கள்? 

திருப்பூரை பொறுத்த வரை நேற்றைய தொழிலாளி இன்றைய முதலாளி என்பதெல்லாம் பழங்கதை. இன்று இன்றைய முதலாளி இன்றே தொழிலாளியாக வேண்டிய கதை. அந்த தொழிலாளி வாய்ப்பும் எத்தனை நாள் என்பதாக நிலைகள் மாறிவருகின்றன.

இந்த நெருக்கடி அனைவருக்குமானது, இதில் கட்சி, மத, இன, சாதிய வேறுபாடுகள் இல்லை.

- தருமர்  (முகநூலில்)

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid06NoV1Jx6hkHw4kDJ8Axf1q5WCXvU1WMr6CscBLwGXuXKCCatirgxsKbyJxx14Kddl&id=100004355291753&sfnsn=wiwspwa&mibextid=6aamW6

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு