கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தில் மருத்துவ கட்டமைப்பின் போதாமையை மறைக்க மருத்துவர்களை பலிகடாவாக்கும் திமுக அரசு

Ravindranath GR

கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தில் மருத்துவ கட்டமைப்பின் போதாமையை மறைக்க மருத்துவர்களை பலிகடாவாக்கும் திமுக அரசு

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு,உத்தரவுகளுக்கு எதிராக, தமிழ்நாடு அரசு, மருத்துவர்களை கைது செய்வதை எதிர்த்து, TNGDA, SDPGA, GADA, IMA, TNMSA, Junior Residents' Association போன்றவை எடுக்கும் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளுக்கு DASE ஆதரவளிக்கும்.

உடனடியாக அனைவரும்  ஒன்றுபட்டு செயல்படுவதற்கான நேரம் இது.

ஒன்று படுவோம். செயல் படுவோம்.

மருத்துவர்கள், மருத்துவத்துறை பணியாளர்கள், செவிலியர்கள் அனைவரும் ஓரணியாய் ஒன்றுபட வேண்டும்.

தமிழ்நாடு அரசு, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருத்துவ மாணவர்கள் விரோதப் போக்கை தொடர்ந்து கடைபிடித்துவருவது மிகுந்த வருத்தத்தை, கவலையை, வேதனையை அளிக்கிறது.

அவர்களின் நியாயமான  கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

சகோதரி பிரியா அவர்களின் துயரமான மரணத்தில், தமிழ்நாடு அரசு அரசியல் செய்ய முனைகிறது.

சட்டரீதியான நடவடிக்கைகள் என்பதற்குப் பதிலாக, தனது மருத்துவத் துறை சார்ந்த தவறுகளை, போதாமையை மறைக்க, அரசியல் நோக்கத்தோடு மருத்துவர்களை கைது செய்ய முனைகிறது.

 பொதுமக்களின் கவனத்தை திசை திருப்புகிறது.

ஒரு "நியூமேட்டிக் எலக்ட்ரானிக் டிஜிட்டல் டோர்னிக்கே" இருந்திருந்தால், இத்தகைய "டோர்னிகே"  பிரச்சனை வந்திருக்காது.

 மிகப் பெரும்பாலன அரசு மருத்துவமனைகளுக்கு தமிழ்நாடு அரசு, எலக்ட்ரானிக் டோர்னிக்கேக்களை ஏன் வழங்கவில்லை?

எலக்ட்ரானிக் டோர்னிக்கேவின் மூலம் எவ்வளவு அழுத்தம் உள்ளது என்பதை அறியமுடியும். எவ்வளவு நேரத்திற்கு அழுத்தம் வழங்க வேண்டும் என்பதை நிர்ணயித்துக் கொள்ள முடியும்.அந்த நேரம் முடிந்தவுடன் அது தானாகவே காற்றை வெளியேற்றி அழுத்தத்தை நீக்கிவிடும். பிரச்சனை எனில் உடனடியாக எச்சரிக்கை ஒலியை எழுப்பிவிடும். இது மனித கவனக்குறைவால் ஏற்படும் பாதிப்பை தடுத்துவிடும்.

இவ்வளவு சிறந்த தொழில் நுட்ப கருவி இருக்கும் பொழுது, ஏன் பேண்டேஜை பயன்படுத்தும் பழங்காலத்து முறையை கடைபிடிக்க வேண்டிய நிலையை அரசு உருவாக்குகிறது?

இத்தகைய கருவி ஏன் அரசு மருத்துவமனைகளில் இல்லை. 

ஏன் வழங்கப்படவில்லை?

ஒரு கவனக்குறைவு நிகழ்ந்த உடன் மருத்துவர்களை கைது செய்யத் துடிக்கிறதுடிக்கிறது அரசு!

எலக்ட்ரானிக் டிஜிட்டல் டோர்னிகேக்களை, அரசு மருத்துவமனைகளுக்கு வழங்காத தவறுக்கு யார் பொறுப்பேற்பது?

பல்வேறு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், மருத்துவமனைகளின் நிர்வாகிகள் புதிய கருவிகள், நவீன கருவிகள் வேண்டும் என அரசுக்கு அனுப்பிய பட்டியல்கள் எல்லாம் நீண்ட உறக்கத்தில் உள்ளன.

இந்த நிலைமையில், இருக்கும் கருவிகளை வைத்துக் கொண்டு, கடும் ரிஷ்குகளை எடுத்து, அரசு மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள்.

இத்தகைய நிலைமைகளில், கவனக்குறைவுகளால் பாதிப்புகள் ஏற்படும் போது அரசு மருத்துவர்களை பலிக்கடா ஆக்குவது நியாமல்ல.  

இது சரியான அணுகுமுறை அல்ல.

ஏராளமான குறைபாடுகளை தனது பக்கம் வைத்துக் கொண்டுள்ள அரசு, மருத்துவர்களை கைது செய்வதன் மூலம் மருத்துவக் கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளிலிருந்து மக்களை திசை திருப்பிவிட முயல்வது சரியல்ல.

நியாயமல்ல.

அது வெற்றி பெறாது.

- Ravindranath GR

முகநூலிலிருந்து) 

https://www.facebook.com/100002774229697/posts/pfbid02KMJbARQW8HFR4jmPQgrj8nrTHvgM7C3sGGxXCh5tBVytm6gCtFmV5rtPAq19QnDel/?app=fbl

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு