எச்.ஐ.வி ஆலோசனை மையங்களை மூடும் திமுக அரசை கண்டித்து மாநாடு

சேரன் வாஞ்சிநாதன்

எச்.ஐ.வி  ஆலோசனை மையங்களை மூடும் திமுக அரசை கண்டித்து மாநாடு

பத்திரிகை செய்தி

பெறுதல்,

ஆசிரியர்/ நிருபர்கள்

அனைத்து பத்திரிக்கை/ செய்தி ஊடகங்கள், சென்னை .

இன்று (*23-06-2024* ) சென்னை நிருபர்கள் சங்க அரங்கில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பாக *எச்.ஐ.வி தொற்றளார்களின் நலனுக்கு  எதிராக* தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் 104- எச்.ஐ.வி /எய்ட்ஸ் ஆலோசனை மையங்களை மூடும் ஒன்றிய அரசின் முடிவை கைவிட தமிழக அரசை வலியுறுத்தி...

மாநில தலைவர் *ஜெயந்தி* தலைமையில் *எச்.ஐ.வி- தொற்றளார்களின் நலன் பாதுகாப்பு மாநாடு* நடைபெற்றது. 

 மாநில துணைத் தலைவர் தலைவர் *ஜெகஜோதி* அனைவரையும் வரவேற்றார்.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் *தமிழ்செல்வி* துவக்கவுரையாற்றினார்.

மாநில பொதுச்செயலாளர் *சேரலாதன்* கோரிக்கை உரையாற்றினார். 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி,மாநில அமைப்பு  செயலாளர் ராம்மோகன் ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி,மாநில தலைவரின் நேர்முக உதவியாளர் குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் *கு.கா.பாவலன்*, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் *மரு.G.R.ரவீந்திரநாத்*, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தென்சென்னை மாவட்ட செயலாளர் *பெருங்குடி சூர்யா*  ஆகியோர் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

தமிழ்நாடு மாநில எச்.ஐ.வி. உள்ளோர் கூட்டமைப்பின் மாநில தலைவர் *பால்ராஜ்*, சென்னை மாவட்ட எச்.ஐ.வி. உள்ளோர் கூட்டமைப்பின் தலைவர் *செல்வம்*, நெஸ்ட் டிரஸ்ட் இயக்குனர் முனைவர் *கீதாராணி* ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

தமிழ்நாடு அரசு மோட்டார் வாகன பராமரிப்பு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் *வெங்கடேசன்*, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் *சரவணன்*  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின்முன்னாள் மாநில துணைத்தலைவர் *ச.இ.கண்ணன்* அவர்கள் நிறைவுரையாற்றினார்.

இம்மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 1)  எச்.ஐ.வி/ எய்ட்ஸ் நோய் தொற்றுக்கு தடுப்பு மருந்துகளோ அல்லது முற்றிலும் குணப்படுத்தும் மருத்துகள் கண்டறியபடாத நிலையில் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் 104- எச்.ஐ.வி ஆலோசனை மற்றும் பரிசோதனை செய்யும் நம்பிக்கை மையங்களை ஒன்றிய அரசு மூட அனுப்பியுள்ள  சுற்றரிக்கையை திரும்ப பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  2) *தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் 104- எச்.ஐ.வி ஆலோசனை மற்றும் பரிசோதனை செய்யும் நம்பிக்கை மையங்களை மூடும் ஒன்றிய அரசின் முடிவை  எச்.ஐ.வி/ எய்ட்ஸ் தொற்றளார்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் அமுல்படுத்த மாட்டோம்* என்று *மாண்புமிகு.தமிழக முதல்வர் அவர்கள்* கொள்கை ரீதியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3) தமிழக அரசு *எச்.ஐ.வி தொற்று உள்ளவர்களுக்கு தனியாக நல வாரியம்* அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

4) எச்.ஐ.வி தொற்றுள்ளோரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பொருளாதார முன்னேற்றத்திற்கும் தொழில் செய்வதற்கு *தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் உதவி  வேண்டும்* என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

5) *எச்.ஐ.வி தொற்றுள்ளோரின் குழந்தைகளுக்கு அனைத்து தனியார் கல்லூரிகளிலும் இலவச உயர்கல்வி படிப்பதற்கு* உதவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

6) தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஏ.ஆர்.டி மையங்களிலும் *முழு நேர மருத்துவர்களை பணி அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்* என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

7) எச்.ஐ.வி தொற்றுள்ளோருக்கு  அரசு மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் பாலிசி வழங்க  மறுக்கப்படுகிறது.  எனவே தமிழக அரசு காப்பீட்டு திட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி *எச்.ஐ.வி தொற்றுள்ளோருக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் தனிநபர் பாலிசி திட்டம்* வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

8) அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் *முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ்   எச்.ஐ.வி தொற்றுள்ளோருக்குஅறுவை சிகிச்சை செய்வதற்கு* தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

9) தற்பொழுது எச்.ஐ.வி தொற்றுள்ளோருக்கு  கிட்னி டயாலிஸ் செய்வதற்கு தனியாக மிஷின் இல்லாத காரணத்தால் டையாலிசிஸ் சிகிச்சை செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது.எனவே தமிழக அரசு  *எச்.ஐ.வி தொற்றுள்ளோருக்கு  கிட்னி டயாலிசிஸ் மிஷின்* மண்டல வாரியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அமைப்பதற்கு உதவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

10) எச்.ஐ.வி தொற்றுள்ளோர் மனதளவிலும் உடல் அளவில் மிகவும் பாதிக்கப்பட்ட காரணத்தால் வசதி வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது. சொந்த இடமோ குடிசை வீடோ ஓட்டு வீடு இல்லாத காரணத்தால் *எச்.ஐ.வி தொற்றுள்ளோருக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்பட்டுள்ள இலவச வீட்டுமனை இடத்தில் *கலைஞர் கனவு இல்லம்* திட்டம் மூலம் வீடு கட்டுவதற்கு உதவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

11) அனைத்து மாவட்டங்களிலும் *எச்.ஐ.வி தொற்றுள்ளோருக்கு சமுதாய நல மையங்கள்* அமைத்திட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

12) தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் ஏ.ஆர்.டி மையங்கள் அமைக்கப்படும்பொழுது  *எச்.ஐ.வி தொற்றுள்ளோருக்கு இலவச சிகிச்சையை* உத்தரவாதப்படுத்திட  வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

13) தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் திட்ட காலி பணியிடங்களில் *எச்.ஐ.வி தொற்றுள்ளோருக்கு* கல்வி தகுதியின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

இறுதியாக மாநில பொருளாளர் *ரமேஷ்* அனைவருக்கும் நன்றி கூறினார்.

தோழமையுடன்

மு.ஜெயந்தி, மாநில தலைவர்

மா.சேரலாதன், மாநில பொதுச்செயலாளர்

- சேரன் வாஞ்சிநாதன்

(முகநூலில்) 

Disclaimer: இந்தப் பதிவு சங்கத்தின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு