ஜென்னி மார்க்ஸ் நினைவு நாள் (02.12.1881) இன்று…
Subbaraj V
பாலின்றி பிள்ளை அழும்
பட்டினியால் தாய் அழுவாள்
ஜீவா எழுதிய வரிகள்…
இதே நிலை, பிரபுக் குடும்பத்தைச் சேர்ந்த அந்த பேரழகிக்கும் ஏற்பட்டது. தான் மிகவும் நேசித்த காதலனை கைப்பிடித்த நாள் முதல்... அவள் அதிகம் சந்தித்தது வறுமை, நோய், குழந்தைகளின் மரணங்கள் இவற்றைத் தான்…
''பிறக்கும்போது அந்தக் குழந்தைக்குத் தொட்டில் இல்லை; இறக்கும்போது, அதற்குச் சவப்பெட்டி வாங்கக்கூடக் கஷ்டமாகிப்போனது'' என, தன்னுடைய இரண்டாவது குழந்தை இறந்தபோது எழுதியிருக்கிறார், ஜென்னி.
எந்த நாட்டிலும் குடியுரிமை பெற முடியாமல், செல்லும் நாடுகளின் அரசுகள் எல்லாம் ஒருபுறம் மிரட்ட... மற்றொரு புறம், பசியும் பட்டினியும் மார்க்ஸ்-ஜென்னி தம்பதியை மிரட்டின.
இருப்பினும், விடலைப் பருவத்திலேயே தொடங்கிய காதல், அவளது மரணம் வரை மாறவில்லை. பல்வேறு துன்பங்களையும் சகித்துக் கொண்டு, மார்க்ஸுடனே பயணித்து, ஊக்கம் தந்து, மார்க்ஸை முழு மனிதனாக்கி மறைந்தும் போனாள்.
''இதுபோன்ற அற்ப சங்கடங்களில் எல்லாம் நான் ஒருபோதும் தளர்வடைவதில்லை. எனக்கு என் கணவர் அருகில் இருக்கிறார். இப்படி ஒரு மனிதரைக் கணவராகப் பெற்றமைக்காக நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை'' என்று தன் காதல் நாயகனை எங்கேயும் எப்போதும் விட்டுக்கொடுக்காமல் நேசித்துக் கொண்டிருந்தார்.
"இனிவரும் நூற்றாண்டுகள் அனைத்துக்கும்
காதல் என்றால் ஜென்னி...
ஜென்னி என்றால் காதல் !
- Subbaraj V (முகநூலில்)