புதிய ஓய்வூதியத் திட்டம் : திமுக - CPI(M) ன் இரட்டை நிலைபாடு
சேரன் வாஞ்சிநாதன்
புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து கடந்த 05.08. 2024 அன்று பாராளுமன்ற மக்களவையில் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் திரு ஆ. ராஜா, மதுரை மக்களவை உறுப்பினர் திரு சு. வெங்கடேசன் மற்றும் உத்திர பிரதேச மாநிலம் சீத்தாபூர் மக்களவை உறுப்பினர் திரு. ஆனந்த் பதருயோ ஆகியோர் மக்களவையில் கேள்வி நேரத்தில் புதிய ஓய்வூதியத் திட்டம் பற்றி ஆராய ஒன்றிய நிதித்துறை செயலாளர் திரு டி.வி சோமநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை அரசிடம் அளித்துள்ளதா என்பது குறித்தும்,
* அதன் தற்போதைய நிலை குறித்தும்,
*அரசு ஊழியர் சங்கங்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய போராட்டங்கள் நடத்தி வருவது பற்றியும்,
*சில மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தி உள்ளது பற்றியும்,
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்தாததன் காரணங்கள் குறித்தும்,
வினா தொடுத்தனர்*
இவ்வினாக்களுக்கு ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரி அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில்,
* 24.3.2023 அன்று ஒன்றிய நிதித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
* புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பொருத்தமான வகையில் தேவையான மாற்றங்களை செய்வதற்காக குழு அமைக்கப்பட்டது.
* உரிய நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும் அரசு ஊழியர்களின் ஓய்வூதிய பலன்களை மேம்படுத்தவும் அதனால் ஏற்படும் நிதிதாக்கம் குறித்தும் பட்ஜெட் தாக்கம் குறித்தும் மக்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் செயல்படுத்தப்படும் என்றும்.
* வல்லுநர் குழு அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்புகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறது.
* ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறியுள்ளன. இதில் பஞ்சாப் மாநில அரசு மட்டும் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கான பங்களிப்பு நிதியை தொடர்ந்து செலுத்தி வருகிறது
என்ற பதில் வழங்கினார்.
ஒன்றிய அரசில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மீது அக்கறை கொண்டு இவ் வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
ஆனால் அதே நேரம்,
* தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்காக அமைக்கப்பட்ட வல்லுநர் குழு தனது அறிக்கையை அரசிடம் வழங்கி ஐந்து ஆண்டுகளாகியும் அது குறித்து திமுக மற்றும் CPI (M) கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் தமிழக சட்ட மன்றத்தில் கேள்வி எழுப்பவில்லை.
* பழைய ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்தப்படும் என்று 2021 ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி படி கடந்த 3 ஆண்டுகளாக பழைய ஓய்வூதிய திட்டத்தை ஏன் அமுல்படுத்தவில்லை என்று CPI (M) சட்ட மன்ற உறுப்பினர்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கேள்வி* எழுப்பவில்லை
* மேலும் ஒன்றிய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற/ மரணமடைந்த ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடை பணியின் போது மரணம் அடைந்த ஊழியர்களுக்கு வழங்கப்படும் பழைய ஓய்வூதிய திட்டம் படி குடும்ப ஓய்வூதியம், பணியின்போது உடல் ஊனமுறும் ஊழியர்களுக்கு இயலாமைக்கான வழங்கப்படும் பழைய ஓய்வூதிய திட்டம் படி ஓய்வூதியம், தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தமிழக அரசு வழங்காமல் இருப்பது தொடர்பாக திமுக மற்றும் CPI (M) சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக சட்டமன்றத்தில் எந்த கேள்வியும் இன்று வரை எழுப்பவில்லை
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் திமுக மற்றும் CPI (M) கட்சியினர் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பாதது ஏன் ?
தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த அரசு ஊழியர் ஆசிரியர்களைப் பொறுத்தவரை திமுக மற்றும் CPI (M) கட்சியின் இரட்டை நிலைபாட்டை கண்டு ஏமாற மாட்டோம்!
( மாநில மையம், CPS ஒழிப்பு இயக்கம் )
- சேரன் வாஞ்சிநாதன் (முகநூலில்)
Disclaimer: இது சங்கத்தின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு