திமுக அரசாங்கம்தான் பாஜக RSS க்கு களம் அமைத்து கொடுக்கிறது

சிலம்பரசன் சே

திமுக அரசாங்கம்தான் பாஜக RSS க்கு களம் அமைத்து கொடுக்கிறது

திமுகவை ஆதரிக்கும் கட்சிகள் திமுக அரசாங்கம் செய்யும் தவறுகளை சுட்டி காட்டும் போது "எதிரிகளுக்கு இடமளித்துவிடக்கூடாது" "நீங்களே இப்படி செய்தால்' அது எதிரிகளுக்கு ஆதரவாக ஆகி விடுமல்லவா..என்றெல்லாம் முரசொலி, விடுதலை எழுதும்.

ஆனால் திமுக அரசாங்கம்தான் பாஜக, RSS க்கு களம் அமைத்து கொடுக்கிறது என்பதை யாரும் பேசுவதில்லை.

திருப்பரம்குன்றம் பிரட்சனையை தொடங்கி வைத்ததே தமிழ் நாடு காவல் துறையும், இந்து அறநிலைத் துறையும் தான்..

காவல் துறைக்கு அமைச்சராக இருக்கும் முதல்வர் ஸ்டாலினால் தனது துறையில் உள்ள உயர் அதிகாரிகளைக் கூட கட்டுப்படுத்த, அல்லது அரசாங்கத்திற்கு எதிராக வேலை செய்யும் ஒருவரை கண்டுபிடித்து அவரை கண்டிக்கக் கூட துப்பில்லை என்றால் நீங்கள் எல்லாம் எந்த நம்பிக்கையில் "கலைஞரை விட ஸ்டாலின் danger" என்று பரப்புரை செய்கிறீர்கள்..

"எதிரியே இல்லாமல் தனித்து விடப்பட்டுள்ளார்" என்று நா கூசாமல் பேச முடிகிறது..

இதுவரை இந்து அறநிலையத்துறை மூலம் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் எதுவும் பெரும் பண்ணைகள் அல்ல, சாதாரண மக்கள் குத்தகைக்கு, வாடகைக்கு பயன்படுத்தி வந்த நிலங்கள்.. அவற்றை பிடுங்கி என்ன செய்ய போகிறீகள்.. நிலம் இல்லாதவர்களுக்கு வழங்கி திராவிட மாடல் ஆட்சி நல்ல ஆட்சி என்று நிரூபிக்க போகிறீர்களா..?

நீங்கள் செய்வதெல்லாம் மக்களுக்கு எதிராகவும், பாஜக, RSS ற்கு வழி ஏற்படுத்தி கொடுப்பதாகவும் இருக்கிறது என்ற உண்மையை மறைப்பதற்கு நீங்கள் படும் சிரமத்தை காண முடிகிறது. திராவிட மாடல் அரசே..!

- சிலம்பரசன் சே (முகநூலில்)

https://www.facebook.com/share/p/18QpLqKFz4/?mibextid=oFDknk

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு