பிணைய கைதிகளாக இருந்து விடுதலை பெற்ற டானியல் என்ற யூதப் பெண் ஹமாசின் படை வீரர்களுக்கு எழுதிய கடிதம்

விவேகானந்தன்

பிணைய கைதிகளாக இருந்து விடுதலை பெற்ற டானியல் என்ற யூதப் பெண் ஹமாசின் படை வீரர்களுக்கு எழுதிய கடிதம்

சமீபத்திய வாரங்களில் என்னுடன் வந்த தளபதிகளுக்கு... நாம் நாளை பிரிந்து விடுவோம் என்று தோன்றுகிறது. ஆனால் என் மகள் எமிலியாவிடம் நீங்கள் காட்டிய அசாதாரண மனிதாபிமானத்திற்கு என் இதயத்தின் அடியாளத்திலிருந்து நன்றி கூறுகிறேன்.

"நீங்கள் அவளுக்கு பெற்றோரைப் போல இருந்தீர்கள், அவள் விரும்பும் போதெல்லாம் அவளை உங்கள் அறைகளுக்கு அழைத்தீர்கள். நீங்கள் அனைவரும் அவளுடைய நண்பர்கள், நண்பர்கள் மட்டுமல்ல, உண்மையிலேயே அன்பானவர்கள் மற்றும் நல்லவர்கள் என்ற  அவள் உணர்கிறாள்.

“நன்றி, நன்றி, அவளுடைய பராமரிப்பாளர்களாக நீங்கள் செலவிட்ட பல மணிநேரங்களுக்கு நன்றி. அவளிடம் பொறுமையாக இருந்ததற்கும்,   இங்குள்ள சூழலில் கிடைத்தற்கரிய இனிப்புகள், பழங்கள் மற்றும் கிடைக்கும் அனைத்தையும் அவள் மீது பொழிந்ததற்கும் நன்றி.

"குழந்தைகள் சிறைபிடிக்கப்படக்கூடாது. ஆனால்  , என் மகள் காசாவில் ஒரு ராணியைப் போல் உணர்ந்ததற்கு உங்களுக்கும், வழியில் நாங்கள் சந்தித்த பிற மக்களுக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும். பொதுவாக, அவள் தான் உலகின் மையமாக இருந்ததாக  உணர்ந்தாள். எங்கள் நீண்ட பயணத்தில் மென்மையையும் அன்பையும் நேசத்தையும் காட்டாத எவரையும், (அடிமட்ட ஊழியர் முதல் தலைமை வரை)  அவள் சந்திக்கவில்லை என்று அவள் உணர்கிறாள். 

"வாழ்நாள் முழுவதும் உளவியல் அதிர்ச்சியுடன் வாழ வேண்டிய நிலையில் அவள் இங்கிருந்து வெளியேறவில்லை. இதற்காக நான் என்றென்றும் உங்களுக்கு நன்றியின் கைதியாக இருப்பேன். காசாவில் நீங்கள் சந்தித்த கடினமான சூழ்நிலையிலும், நீங்கள் சந்தித்த கடுமையான இழப்புகளின் போதும், இங்கு எனக்கு வழங்கப்பட்ட உங்கள் பரிவான நடத்தையை நான் நினைவில் கொள்வேன்.

"இந்த உலகில் நாம் உண்மையிலேயே நல்ல நண்பர்களாக இருக்க முடியும் என்று நான் கருதுகிறேன்.

"உங்கள் அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை நான் விரும்புகிறேன்... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தின் குழந்தைகளுக்கும் ஆரோக்கியம் மற்றும் அன்பு. மிக்க நன்றி.

டேனியல் மற்றும் எமிலியா

Danielle and Emilia

https://www.trtworld.com/middle-east/israeli-mothers-letter-to-hamas-thank-you-for-extraordinary-humanity-16005866

-  Vivekananthan (தமிழில்)

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02C9gAdNDqeqvBxHaXvhrVcXo6DtTTBw3jphWBeboqq5WqQxJi1MyqqoHHMgnwyq9El&id=100077741003576&mibextid=Nif5oz

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு