இந்து மதவெறி பாசிஸ்டை மகிழ்விக்கும் இசைக் கோலங்களுக்கு பின்னே...

துரை. சண்முகம்

இந்து மதவெறி பாசிஸ்டை மகிழ்விக்கும் இசைக் கோலங்களுக்கு பின்னே...

அவன் கலைஞன்! 

மோடியின் வருகைக்கு "ஓம்!சிவோஹம்!" இசைத்த இளையராஜாவின் செய்கை என்னை பீத்தோவன் நினைவுக்கு இழுத்துச் சென்றது. 

நெப்போலியனுக்காக மூன்றாவது சிம்பொனி எரொய்காவை படைத்தார் பீத்தோவன். ஏனெனில் அவன் முடியாட்சி மரபுகளுக்கு மாறாக ஜனநாயக ஆட்சியின் அற்புதங்களை கொண்டு வருவான் என்று நம்பினார். 

நெப்போலியன் தன்னை சக்கரவர்த்தியாக முடி சூட்டிக்கொண்டவுடன், 

தனது ஒன்பதாவது சிம்பொனியில் சமர்ப்பணம் செய்யப்பட்ட அவனது பெயரை நீக்கிவிட்டு, "ஒரு சாதாரண மனிதனுக்காக" என மாற்றினார். 

ஜனநாயக விழுமியத்தின் ஆன்மா! அதுதான் அவரது இசையின் ஆன்மாவும் கூட! 

சிம்பொனி என்பதை வடிவ வாதத்தில் மட்டும் காண்பித்து

வியக்க வைப்பதில் என்ன இருக்கிறது? உள்ளடக்கத்திலும் அது முன்னேறி இருக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியின் ஊடாக இசைக் கருவிகளின் வளர்ச்சியின் ஊடாக ஜனநாயக காலகட்டத்தில் இசைப் பயனை 

வாரி வழங்குவதில் சிம்பொனி முன்னோக்கி பங்காற்றுகிறது.

'கம்ப்யூட்டர்' ஜோசியம் 'கம்ப்யூட்டர்' சாம்பிராணி மாதிரி, நவீன காவி இசை யாருக்குப் பயன்? என்ன உளவியலை மக்களிடம் இது கட்டமைக்கும்.

நவீன இசை என்பது புதிய உணர்வின் உள்ளடக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும். ஒரு இந்து மதவெறி பாசிஸ்டை மகிழ்விக்கும் இசைக் கோலங்களுக்கு பின்னே, கொல்லப்பட்டப்பட எத்தனை மக்களின் தசைக் கோலங்களின் அலறல்கள் ரசிக்கப்படுகின்றன.

இங்குதான் இசைக்குறிப்புகளை தாண்டி மனித குலத்தை நேசிக்கும் பீத்தோவனின் இதயக் குறிப்புகள் அவரை நமது இதயத்தில் உயர்த்துகிறது.

பீத்தோவெனின் இசையில் இயற்கையின் துடிப்புகள் ஓசைகள் இருக்கும். மனித இயற்கையையும் மீட்டெடுக்கும்.

ஒரு சந்தர்ப்பத்தில் லுனாச்சார்ஸ்கியிடம் பீத்தோ வெனின் சிம்பொனி இசையை கேட்ட தோழர் லெனின் இப்படி சொல்வார், " நாம் மனிதராக பிறந்ததற்கான பயனை அவரது இசை வழங்குகிறது!"

ஆம் மனித உணர்வை முன்னோக்கிய உளவியலில் இசைக்காத பிற்போக்கு சூக்குமங்களை இசை வடிவில் வந்தாலும்  ரசனைக்கு மீறி நான் எச்சரிக்கையாகிறேன்! 

      - துரை. சண்முகம்

https://www.facebook.com/share/p/1GnsZTZ87M/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு