கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகத் துறையும் நிதித்துறையும் - அம்பேத்கர்
விசுவநாதன் கரிகாலன்
திராவிட அமைப்புகள் தொடங்குவதற்கு பல பத்தாண்டுகளுக்கு முன்பே , அதாவது 1875லேயே, இந்தியாவில் அதிக வருவாய் ஈட்டிய மாநிலமாக
சென்னை இருந்துள்ளது - அம்பேத்கர் ஆய்வு.
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தனது முதுநிலை பட்ட ஆய்வுக்காக எடுத்துக் கொண்ட எழுதிய ஆய்வேட்டில் பல அறிய தகவல்கள் உள்ளன.
ஆய்வின் தலைப்பு
"கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகத் துறையும்,
நிதித்துறையும்".



தமிழ்த்தேசிய உரிமைகளை மீட்டெடுக்க போராடும் நமக்கும் அண்ணல் பல செய்திகளை தந்துள்ளார்.
கிழக்கிந்திய கம்பெனி மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியில், இந்தியாவிலேயே அதிக வரி வருவாய் ஈட்டும் மாநிலமாக தமிழகம் இருந்துள்ளது.
1875 ஆம் ஆண்டு மாகாணங்களில் இருந்து பேரரசுக்கு கிடைத்த மொத்த வரி வருவாய்
9,80,545 பவுண்டு.
அதில் மதராஸ் மாகாணம் மட்டும் பாதி தொகையாக, அதாவது 3,95,856 பவுண்டு வரியாக அளித்துள்ளது.
அதாவது திராவிட இயக்கம் தோன்றுவதற்கு பல பத்தாண்டுகளுக்கு முன்பு இங்கு வசூலித்த வரி வருவாய் தான் அதிகம்.
அதே போல் கிழக்கிந்திய கம்பெனி, மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியின் பொழுது இருந்த மாகாணங்களின் உரிமைகள் கூட இப்பொழுதைய இந்தியா தரவில்லை இருந்ததையும் பறித்து கொண்டார்கள்.
திராவிடம் பல பத்தாண்டு நடுவன் அரசு ஆட்சியில் இருந்த பொழுது இந்த பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்க எதுவும் செய்யவில்லை.
பிரிட்டிஷ் ஆட்சியில்.
அஞ்சலகம்,
மாகாண வரி,
சட்டம்,
நீதி,
காவல்துறை,
கல்வி,
மருத்துவம்
போன்றவை முழுவதும் மாநிலங்களின் முழு கட்டுப்பாட்டிலும்,
கலால் வரி, வணம் முதலியவை பாதி உரிமைகளும், எஞ்சிய உரிமைகள் அனைத்தும் மாநிலங்களுக்கு என்று இருந்தது.
இப்போது அனைத்து உரிமைகளையும் இந்திய வல்லாதிக்கம் பறித்துக் கொண்டு விட்டது.
அம்பேத்கார் அவர்கள்
பிரிட்டிஷ் ஆட்சியின் சுரண்டல் போக்கை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.
அதுவும் அங்குள்ள பிரிட்டிஷ் ஜனநாயகவாதிகள்
மற்றும் நமது இந்தியாவில் இருந்த ஜனநாயகவாதிகளின்
குரல்களை தேடி, தேடி பதித்துள்ளார்.
"1834லிருந்து 1848 வரை 14 ஆண்டுகளில் கம்பெனி இந்தியா முழுவதும் சகலவிதமான பொது பணிகளுக்கு செலவிடத்தை விட , இங்கிலாந்து மான்செஸ்டர் நகரத்தில்
வசிப்பவர்களுக்கு தண்ணீர் வசதி செய்து தர அதிகம் பணம் செலவிட்டுள்ளது என்று டாக்டர்.ஸ்பிரே அவர்களின் கருத்தை பதித்துள்ளார்.
அதேபோல்
திரு.ரமேஸ் சந்திரதத் அவர்களது கருத்தையும் இதில் கூறியுள்ளார்.
"அதாவது 1792 முதல் 1857 வரை இந்திய நிர்வாக நிதித்துறை மூலமாக கிடைத்த உபரி வருவாயான 32 மில்லியன் பவுண்டு பணத்தை , கம்பெனியின் பங்குதாரர்களுக்கு லாபமாக இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்டது" என்றும்
மேலும் நீர்ப்பாசனம், மற்றும் இதர செலவுகளுக்கு இங்கிலாந்திலிருந்து கடனாக பெற்றுக் கொண்டு அதற்கு வட்டியும் , அசலும் நமது விரிவாயிலிருந்து எடுத்துக் கொண்டுள்ளார்கள் என்று கூறியுள்ளார்.
அதிலும் முத்தாய்ப்பாக திரு.ரிச்சார்ட் கான்கிரீவ் அவர்கள் 1857 வருடம் கூறிய கருத்து தேடிப் பிடித்து எடுத்து பதித்துள்ளார்.
"தனது வருங்காலத்தை நிர்ணயிக்கும் பொறுப்பை இந்தியாவிடமே விட்டுவிட வேண்டும்.
ஒரு நாட்டு மக்கள், வேறொரு நாட்டு மக்களை ஆளுவது என்பது ஒழுக்க கேடானது, மானுட இனத்தின் வளர்ச்சிக்கு நன்மை பயக்காது.
ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின்னர் இந்தியாவிற்குள் வேறு எந்த நாடும் நுழைந்து விடுவதை
தடுப்பதற்கு ஒரு சர்வதேச அமைப்பு நிறுவபட வேண்டும்,
இறுதியில் , தன்னாட்சி அரசாங்கத்தை நடத்த வல்லவர்களாக இந்தியர்கள் மாறும் பொழுது அவர்களிடம் நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும் ", என்ற கருத்தையும் அம்பேத்கார் தனது ஆய்வேட்டில் பதித்துள்ளார்.
ஆக பிரிட்டிஷார் சிறந்த நிர்வாகிகள் என்ற பிம்பத்தை உடைத்து, பெரிய அளவில் இந்தியாவில் உள்ள வளங்களை கொள்ளையடித்துள்ளார்கள் என்று அவர்களது புள்ளி விபரங்களை வைத்தே அம்பேத்கார் நிருபித்துள்ளார்.
அதேபோல் இந்தியாவிலேயே அதிக வரி வருவாய் ஈட்டும் மாகாணமாக சென்னை 200ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது என்பதை தெளிவாக அந்த ஆய்வேட்டின் மூலம் அறியலாம்.
விசுவநாதன் கரிகாலன்
https://www.facebook.com/100003156455883/posts/24942994292055775/?rdid=Hj4i0Nb9xJcPbfa1
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு