மன்னர் ஆட்சி என்பது எப்போதும் மக்கள் விரோத ஆட்சிதான்

துரை. சண்முகம்

மன்னர் ஆட்சி என்பது எப்போதும் மக்கள் விரோத ஆட்சிதான்

மாமன்னர்கள் எப்போதும் மக்களுக்கு நண்பர்களாகவும் இருக்க முடியாது.

குடவோலை தேர்தலை அந்த காலத்திலேயே ஜனநாயக ஆட்சி! என்று ஏற்கனவே கலைஞர் உருட்டி இருக்கிறார். இதன் தொடர்ச்சியாக இப்போது மோடியும் சோழர்கள் ஆட்சியில் ஜனநாயகம் என்று உருட்டி இருக்கிறார்.

கப்பற்படை கங்கைகொண்டான் கடாரம் கொண்டான் எனும் யுத்த வெறி பிற்போக்கு பிரம்மைகளை மக்கள் மத்தியில் தமிழர் வீரமாக பேசி தனது குடல் ஓலைக்கு பயன்படுத்திக் கொண்டது அன்றைய திமுக. 

மன்னராட்சி பண்ணைகள் வட்டிக்கடைக்காரர்கள் போன்ற பிற்போக்கு வர்க்கங்களை அடித்தளமாகக் கொண்ட ஆர். எஸ் .எஸ்.- பாஜக இப்போது மன்னர் ஆட்சி பெருமைகளை பேசி 'பாரத' கலாச்சாரத்தோடு உரிமை கொண்டாட இணைக்கிறது.

இதை முறியடிக்க வேண்டும் என்றால் மன்னராட்சி பிற்போக்குகளை பற்றி பேச வேண்டும். அது இப்போது திமுகவால் முடியாது. 

இந்த காரியக்கார மௌனத்தை 

மேலாதிக்க பிற்போக்கு சக்தியான ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்தி மன்னர் பெருமையை இந்திய பெருமையாக ஆட்டைய போடுகிறது. மேலும் சோழர் ஆட்சியின் வர்ண சாதி ஒடுக்குமுறையும், பார்ப்பன இனக்கமும் ஆர். எஸ். எஸ் அடக்குமுறை சித்தாந்தத்திற்கு ஏதுவாக இருக்கிறது. இயற்கை கூட்டாளியாக பொருந்தி போகிறது. 

சோழர் ஆட்சிகளைப் பற்றி தெரிந்து கொள்ள பொ. வேல்சாமி அவர்களின் நூல்களை படிக்க வேண்டும்.

கோபுரங்களில் ஏறுவது வானரங்களின் வழக்கம். 

தமிழ்நாட்டு கோபுரங்களையும் இப்போது பிடித்துக் கொண்டது.

திருப்பரங்குன்றத்தில் ஒலித்த பாரத் மாதா கி ஜே! கங்கைகொண்ட சோழபுரத்திலும் ஒலிக்கிறது. 

சமரச சந்தர்ப்பவாதிகளால் பாசிஸ்டுகளை அம்பலப்படுத்த கூட முடியாது என்பதன் கண்காட்சிதான் இன்றைய காட்சி. அரசு ஆளும் வர்க்கத்தின் கூட்டாளிகள் என்ற முறையில் அவர்களும் வெவ்வேறு முனைகளில் இருந்து உட்கவரப்படுகிறார்கள்.

மார்க்ஸ் சொன்னது போல,

" 19 ஆம் நூற்றாண்டுக்கான புரட்சியின் கவித்துவம், பழம் பெருமைகளிலிருந்து பெற முடியாதது! பழைய பிற்போக்கு

மரபுகளை அழிப்பதன் மூலம் மட்டுமே அது புதியதை உருவாக்குகிறது!"

  இதுதான் உழைக்கும் வர்க்க கண்ணோட்டம்! 

இத்தகைய பாட்டாளி மக்கள் சித்தாந்த கண்ணோட்டம் இல்லாமல் பகைவனை வெல்ல முடியாது! 

     - துரை. சண்முகம்

https://www.facebook.com/share/1B5KySbPpS/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு